‘கமல் பேசினாங்க; சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி வந்தாங்க..’ – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட நாட்களுக்கு பின், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தற்போது சென்னை, தியாகராய நகரில் நடந்து வருகிறது.

அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

இதில் முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லையே என பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர்.

அப்போது விஷால் பேசியதாவது…

விக்ரம், கரண், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நேரில் வந்தனர்.

மேலும் ஸ்கைப் டெக்னாலஜி மூலம் கமல்ஹாசன் பேசினார். அதுவும் ஒரு வகையான பங்கேற்புதான்.

நாங்கள் எல்லா உறுப்பினர்களையும் அழைக்கிறோம். அவர்கள் வருவது அவர்களது விருப்பம் என்று பேசினார்.

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டத்தில் பிரபல காமெடியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.

இதில் சூர்யாவுடன் கீர்த்திசுரேஷ், ரேவதியின் முன்னாள் கணவர் சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதில் பிரபல காமெடி நடிகரான செந்திலும் இணைந்துள்ளாராம்.

சில காலமாக நடிக்காமல் இருந்த அவர் மீண்டும் நடிக்க வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு தளத்தில், கோட் சூட் அணிந்த செந்தில் படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

‘தல-தளபதி’க்கு மட்டுமா?… ‘அடங்காதே’ ஜிவி. பிரகாஷ் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற புத்தாண்டை (2017) முன்னிட்டு திருநெல்வேலியை சேர்ந்த ராம் சினிமாஸ் நிறுவனம் அஜித், விஜய் படங்களை திரையிட உள்ளனர்.

விஜய்யின் ‘துப்பாக்கி’ படத்தை டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9.30 மணி காட்சியிலும், அஜித்தின் ‘வீரம்’ படத்தை புத்தாண்டு தினத்தில் அதிகாலை 6 மணிக்கும் திரையிடுகின்றனர்.

இதனால் இவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் ரசிகர்களுக்கும் புத்தாண்டு அன்று விருந்து தர உள்ளனர் அடங்காதே படக்குழுவினர்.

சண்முகம் முத்துசுவாமி இயக்கி வரும் அடங்காதே படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் சரத்குமார், சுரபி, தம்பி ராமையா, ரோபோ சங்கர், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஜனவரி 1ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்களாம்.

இதனால் ஜிவி பிரகாஷ் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

ரஜினி பிறந்தநாளில் இத்தனை விதமான கொண்டாட்டமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற டிசம்பர் 12ஆம் தேதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய 66 பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

எனவே இவரது ரசிகர்கள் வழக்கம்போல விமரிசையாக கொண்டாட உள்ளனர்.

இதே நாளில் இவர்களின் கொண்டாட்டத்துடன் இன்னும் சில கொண்டாட்டங்களும் இணைய உள்ளன.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

இத்துடன் ஜி.கே. சினிமாஸில் மாலை 6.30 மணிக்கு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படம் திரையிடப்படுகிறது.

மேலும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் எழுதிய #StandingOnAnAppleBox புத்தகம் வெளியிடப்படுகிறது.

இதன் உரிமையை Harper Collins என்ற நிறுவனம் பெற்றுள்ளது.

இதில் ரஜினியின் மகளாகிய இவர், தனுஷின் மனைவியானது வரை எழுதியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

‘புலி-தெறி’க்கு நடந்தது ‘பைரவா’வுக்கு நடக்காதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை அவ்வளவு எளிதாக யாரும் மறக்க முடியாது.

இதில் கலந்துக் கொண்ட டி.ராஜேந்தர், விஜய்யே போதும் என்று சொல்லும் அளவுக்கு புகழ்ந்து தள்ளினார்.

அதன்பின்னர் தெறி படத்திற்கும் ஆடியோ வெளியிட்டு விழா நடைபெற்றது.

எனவே விரைவில் வெளியாகவுள்ள பைரவா படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் விழா எதுவும் வேண்டாம்.

இணையத்தில் வெளியிட்டு விடலாம் என விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் என்ன செய்யலாம்? என தயாரிப்பு தரப்பில் யோசித்து வருகிறார்களாம்.

‘செலவுக்கு பணம் தரவேண்டும்…’ தனுஷின் ‘திடீர்’ பெற்றோர் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன், ஓய்வுபெற்ற பஸ் கண்டக்டர் மற்றும் இவரது மனைவி மீனாட்சி ஆகிய இருவரும் நடிகர் தனுஷை தங்கள் மகன் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

இதுதொடர்பாக அவர்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில்…

“பிரபல நடிகரான தனுஷ் கடந்த 7.11.1985 அன்று எங்களுக்கு மூத்த மகனாக பிறந்தார். கலைச்செல்வன் என்று பெயரிட்டு அவரை வளர்த்தோம்.

பிளஸ்-1 படிக்கும்போது படிப்பை நிறுத்திவிட்டு, இயக்குனர் கஸ்தூரி ராஜாவிடம் பணிபுரிய சேர்ந்தார்.

அதன்பின்னர் கஸ்தூரி ராஜா எங்கள் மகனை எங்களிடம் இருந்து பிரித்துவிட்டார்.

பெற்றோர் என்ற முறையில் எங்களை கவனித்துக் கொள்ள வேண்டியது தனுஷ், எங்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறார்.

எங்களின் மருத்துவச் செலவு மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.65 ஆயிரம் மாதந்தோறும் தேவைப்படுகிற்று.

இதனை வழங்க தனுசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு தொடர்பான நடந்த விசாரணையில் ஜனவரி 12ஆம் தேதி தனுஷ் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Court summons Dhanush Sudden Parents claims Dhanush their son

More Articles
Follows