தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.
ரிது வர்மா & அபிநயா நாயகிகளாக நடிக்க இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இதில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் தோன்றும் கேரக்டர் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இப்பட சண்டைக் காட்சியை பூந்தமல்லியில் உள்ள ‘ஈவிபி’ பிலிம் சிட்டியில் படமாக்கினர்.
அப்போது எதிர்பாரா விதமாக பிரபா சங்கர் என்பவருக்கு தீ காயங்கள் ஏற்பட்டது.
அவர் தீக்காயத்தால் கஷ்டப்படுவதை அறிந்த நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை சார்பில் பிரபாசங்கர் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 தொகையை வழங்கினார்.
விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மக்கள் நல இயக்கத்தின் தலைவர் கண்ணன் ஆகியோர்கள் இந்த தொகையை நேரில் சென்று வழங்கினார்கள்.
Vishal helps the stunt actor who had an accident on the set of ‘Mark Antony’