சூட்டிங் ஸ்பாட்டிலும் மக்கள் சேவையை தொடரும் விஷால்

சூட்டிங் ஸ்பாட்டிலும் மக்கள் சேவையை தொடரும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalமிஷ்கின் இயக்கத்தில் விஷால் முதன்முறையாக நடிக்கும் படம் “துப்பறிவாளன்“

இதன் சூட்டிங் இன்று சென்னையிலுள்ள கோடம்பாக்கம், புலியூர் ஹவுசிங் போர்டில் நடைபெற்றது.

இதன் படப்பிடிப்பின் போது, புலியூர் ஹவுசிங் போர்டு சங்கத்தினர் விஷாலை சந்தித்து, தங்கள் பகுதியில் பழுதடைந்து இருக்கும் பாதாள சாக்கடை, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றை சரி செய்ய அடிப்படை தேவைகளை வழங்குமாறு முறையிட்டனர்.

எனவே, அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கு உதவிகளை வழங்கினார் விஷால்.

எனவே, புலியூர் ஹவுசிங் போர்டு பகுதி மக்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்தனர்.

மோடியை மோசமாக கண்டித்த மன்சூர் அலிகான்

மோடியை மோசமாக கண்டித்த மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PM Modi and Mansoor Ali Khanமைமோசா நிறுவனம் தயாரிப்பில் அறிமுக நாயகன் கோகுல், ப்ரியா, நீனு, அப்புகுட்டி, மன்சூர்அலிகான், மதுமிதா, டாப்பா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கொஞ்சம் கொஞ்சம்’.

விருந்தாளி படத்தை தொடர்ந்து உதயசங்கரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வல்லவன் இசையமைக்க, பெட்டி சி.கே.பி.ஆர். மோகன் தயாரித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சற்றுமுன் இன்று சென்னையில் நடந்தது.

இதில் இயக்குனர்கள் எஸ்பி. முத்துராமன், சீனுராமசாமி, விசி. குகநாதன், நடிகர் ரகுமான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

விழாவில் மன்சூர் அலிகான் பேசியதாவது….

“இந்த படத்தில் என்னை அழகாக காட்டியுள்ள ஒளிப்பதிவாளருக்கு நன்றி.

பிரதமர் மோடி அறிவித்துள்ள கறுப்பு பணத்தை ஒழிப்பு திட்டத்தை அனைவரும் வரவேற்கிறார்கள்.

ஆனால் திடீரென ரூ. 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்து மக்கள் அனைவரையும் ஒரே நாளில் ராப் பிச்சைக்காரன் ஆக்கிவிட்டார்.

பழைய ரூ. 500 நோட்டுக்கள் நன்றாக உள்ளது. ஆனால் தற்போது வந்துள்ள ரூ. 2000 நோட்டுக்களை நம் ஆர்ட் டைரக்டர்களிடம் கொடுத்தால் நன்றாக டிசைன் செய்து இருப்பார்கள்.

வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பெரிய வரிசையில் மக்கள் கால்கடுக்க காத்துக்கிடக்கிறார்கள்.

மக்களிடம் செலவுக்கு பணம் இல்லை. 5 நாட்களாக தியேட்டர்கள் காலியாக கிடக்கின்றன. சினிமா துறையே முடங்கி விட்டது.

மோடி இதற்கு பதில் சொல்ல வேண்டும். திரையுலகினர் இதற்கு குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும்.” என்று பேசினார் மன்சூர் அலிகான்.

‘காற்று வெளியிடை’ ரிலீஸை கன்பார்ம் செய்த கார்த்தி

‘காற்று வெளியிடை’ ரிலீஸை கன்பார்ம் செய்த கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi kaatru veliyidai movieமணிரத்னம் இயக்கி தயாரிக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தில் கார்த்தி, அதிதிராவ் ஹைதி, ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்ப கவனித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தெலுங்கில் இப்படத்திற்கு டூயட் எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை தன் ட்விட்டரில் வெளியிட்டு அதில் அடுத்த வருடம் 2017 மார்ச் இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளார் கார்த்தி.

டிசம்பர் 2-ல் ரஜினி-கமல் ரசிகர்களுக்கு செம விருந்து

டிசம்பர் 2-ல் ரஜினி-கமல் ரசிகர்களுக்கு செம விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

natrajஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் ராமு செல்லப்பா உருவாக்கியுள்ள படம் எங்கிட்ட மோதாதே.

இதில், நட்ராஜ், ராஜாஜி, சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவன சரவணன் பெற்றுள்ளார்.

இதில் நட்ராஜ் தீவிர ரஜினி ரசிகராகவும் ராஜாஜி கமலின் தீவிர ரசிகராகவும் நடித்துள்ளனர்.

இப்படம் டிசம்பர் 2இல் வெளியாகவுள்ளது. எனவே அன்றைய தினம் ரஜினி-கமல் ரசிகர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாக அமையும் என கூறப்படுகிறது.

அச்சம் என்பது மடமையடா படத்தின் முதல்நாள் வசூல்

அச்சம் என்பது மடமையடா படத்தின் முதல்நாள் வசூல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu manjima mohanகௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் நேற்று உலகளவில் வெளியானது.

இப்படத்திற்கு பெரும்பாலும் பாசிட்டிவ்வான விமர்சனங்களே வந்துள்ளன.

க்ளைமாக்ஸ் இன்னும் பெட்டராக இருந்து இருக்கலாம் எனவும் கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் சென்னை வசூல் மட்டும், ரூ. 65 லட்சத்தை கடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என கூறப்பட்டுள்ள நிலையில், இதன் வசூல் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சினிமா ஸ்டார்ஸ் இல்லாத வடிவேலு மகள் திருமணம்

சினிமா ஸ்டார்ஸ் இல்லாத வடிவேலு மகள் திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vadivelu daughter marriageவடிவேலுவின் மகள் கார்த்திகாவின் திருமணம் இன்று மதுரையில் உள்ள விரகனூர் சி.ஆர்.திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

கார்த்திகா சி.ஏ படித்துள்ளார். இவர் ஐ.பி.எம்மில் வேலை பார்த்துவரும் கணேஷ்குமாரை மணம் முடித்துள்ளார்.

இதில் எந்த சினிமா பிரபலங்களும் கலந்துகொள்ளவில்லை.

மிக நெருக்கமான உறவினர்களுக்கு மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டதாம்.

More Articles
Follows