அப்பாவி மக்கள் மிருகத்தனமாக கொல்லப்பட்டதை கண்டிக்கிறேன் – விஷால்

அப்பாவி மக்கள் மிருகத்தனமாக கொல்லப்பட்டதை கண்டிக்கிறேன் – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal condemns the brutal killing of Peoples at Sterlite protestதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று 100வது நாள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் போராட்டக்காரர்கள் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நடிகரும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான விஷால் கூறியுள்ளதாவது…

இறந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.

போராட்டம் சமூக நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது. தனிப்பட்ட விஷயங்களுக்காக நடத்தப்படுவது அல்ல.

50,000 மக்கள் சேர்ந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடுகிறார்கள் என்றால் கண்டிப்பாக மக்கள், பொதுஜன நலத்துக்காகதான் போராடுகிறார்கள் .

மரியாதைக்கூறிய பிரதமர் கண்டிப்பாக தன்னுடைய அமைதியான மனநிலையை கலைக்க வேண்டிய நேரம் இது. போராட்டம் ஜனநாயகத்தில் ஒன்று. அதில் ஏன் மக்கள் ஈடுபடக்கூடாது.

அரசாங்கம் மக்களுக்காக தான். வேறுயாருக்கும் அல்ல.

2019 பற்றி கவனமாக யோசிக்க வேண்டும் மக்கள் என அந்த அறிக்கையில் விஷால் தெரிவித்துள்ளார்.

Vishal condemns the brutal killing of Peoples at Sterlite protest

அரசியல் மேடையில் தளபதி; வைரலாகும் விஜய் படங்கள்

அரசியல் மேடையில் தளபதி; வைரலாகும் விஜய் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy Vijay clash with Politiciansசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் தளபதி 62.

இப்படத்தை ஏஆர். முருகதாஸ் மிகுந்த பொருட்செலவில் இயக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

விவசாயம், மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட தமிழகத்தின் மக்கள் பிரச்சினைகளை இப்படம் அலசி வருவதாக கூறப்படுகிறது.

எனவே மக்களுக்கு போராடும் வகையில் அரசியல்வாதிகளுக்கு எதிரானவராக நடித்து வருகிறார் விஜய்.

இதில் அரசியல்வாதிகளாக ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

தற்போது அந்த காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.

அதில் ஒரு அரசியல் மேடையில் விஜய் அமர்ந்திப்பது போன்ற படங்கள் எடுக்கப்பட்டு தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay clash with Politicians

Thalapathy Vijay clash with Politicians

மே 25ல் அரை டஜன் படங்கள் ரிலீஸ்; அதர்வா–பரத் படங்கள் விலகல்

மே 25ல் அரை டஜன் படங்கள் ரிலீஸ்; அதர்வா–பரத் படங்கள் விலகல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharvaa and bharathகடந்த சில வருடங்களாகவே வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆனது.

அதாவது வாரத்திற்கு சுமார் 6 படங்களாவது வெளியாகின. இதனால் இதனை முறைப்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனிடையில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பல்வேறு பிரச்சினைகளை மையமாக வைத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிடாமல் நிறுத்தினர்.

அதன்பின்னர் பட வெளியீட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் வெளிவரும் படங்களை முறைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த மே 25ஆம் தேதி கிட்டதட்ட 8 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது அதர்வா நடித்த ‘செம போத ஆகாதே மற்றும் பரத் நடித்த பொட்டு ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாகவில்லை. செம போத ஆகாதே படம் ஜீன் 14ல் வெளியாகிறது.

இந்த படங்கள் விலகிக் கொள்ள தற்போது “செம, திருப்பதிசாமி குடுமபம், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, ஒரு குப்பைக் கதை, அபியும் அனுவும், காலக் கூத்து,” ஆகிய 6 படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Breaking: வன்முறைக்கு அரசின் அலட்சியமே காரணம்; குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை : கமல்

Breaking: வன்முறைக்கு அரசின் அலட்சியமே காரணம்; குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal questioning who gave permission to shoot at Sterlite Protestதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளதாவது…

“ஸ்டெர்ட்லைட் ஆலைக்கு எதிராக நீதிக் கேட்டு மக்கள் அமைதியாகப் போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள்.

அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம்.

இதில் குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை. அவர்கள் எப்பொழுதும் உயிர் இழக்கிறார்கள். முன்பு ஆலையினால், இப்பொழுது ஆணையினால். அனைவரும் அமைதிக் காக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தற்போது சற்றுமுன் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது..

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை தவிர வேறு வழியில்லை எனவும் அவர் கூறினார்.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்தது யார்? அமைதி காக்க வேண்டியது மக்கள் மட்டுமல்ல; அரசும்தான். மக்களின் போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும் எனவும் கமல் தெரிவித்தார்.

Kamal questioning who gave permission to shoot at Sterlite Protest

Breaking: உரிமைக்காக போராடுபவர்களின் உயிரை பறிக்க உரிமையில்லை… ஜிவி. பிரகாஷ் செம பேச்சு

Breaking: உரிமைக்காக போராடுபவர்களின் உயிரை பறிக்க உரிமையில்லை… ஜிவி. பிரகாஷ் செம பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I dont know how the policemen acts ruthless Who gave them right says GV Prakashபாண்டிராஜின் உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் செம.

ஜிவி. பிரகாஷ் இசையமைத்து நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அர்த்தனா நாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.

வருகிற மே 25ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இது படம் தொடர்பான விழா என்றாலும் தற்போது தூத்துக்குடியில் ஸ்டெர்ட்லைட் ஆலை வன்முறை நடைபெற்று வருவதால், எல்லாருடைய பேச்சும் அது தொடரபாகவே இருந்தது.

இந்த போராட்டத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். பல பேர் காயம் பட்டுள்ளனர்.

எனவே அவர்களுக்குகாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவ்விழாவில் ஜிவி. பிரகாஷ் பேசும்போது…

தூத்துக்குடி மக்களின் உயிருக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்ட்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அங்குள்ள மக்கள் ப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் காவல்துறையும் தமிழக அரசும் அவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களின் உயிரை பறித்துள்ளது.

உரிமைக்காக போராடுபவர்களின் உயிரை பறிக்க எவருக்கும் உரிமையில்லை” என்று பேசினார்.

I dont know how the policemen acts ruthless Who gave them right says GV Prakash

Breaking: தூத்துக்குடி கலவரத்திற்கு தமிழக அரசே பொறுப்பு…: ரஜினி கண்டனம்

Breaking: தூத்துக்குடி கலவரத்திற்கு தமிழக அரசே பொறுப்பு…: ரஜினி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini condemns TN Govt is responsible for Tuticorin Sterlite protestதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று 100வது நாள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி உள்ளிட்டவை நடத்தப்பட்டது.

இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த கலவரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரத்திற்கு அரசின் அலட்சியமே காரணம். நடந்த வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ரஜினிகாந்த்.

Rajini condemns TN Govt is responsible for Tuticorin Sterlite protest

More Articles
Follows