சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர்.பி சௌத்ரி மீது விஷால் புகார்

rb choudaryதென்னிந்திய சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆர்.பி. சௌத்ரி. இவரது தயாரிப்பு நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ்.

சேரன் பாண்டியன், நாட்டாமை, சூர்ய வம்சம், துள்ளாத மனமும் துள்ளும், ஜில்லா, களத்தில் சந்திப்போம் வரை 99 படங்களை தயாரித்துள்ளனர்.

தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக மட்டுமில்லாமல் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் கொடுத்தும் வருகிறார் ஆர்.பி.சவுத்ரி.

நடிகர்களான ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோர்களின் தந்தையும் ஆவார்.

இந்த நிலையில் சென்னை தி.நகர் காவல் துணை ஆணையரிடம் ஆர்பி. சௌத்ரி மீதான தனது புகாரை கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.

அந்த புகாரில்.. “நான் தயாரித்த ‘இரும்புத்திரை’ படங்களுக்கு புரோ நோட் மூலம் லட்ச கணக்கில் கடன் வாங்கினேன்.

இப்போது அந்த கடனை அடைத்து முடித்த பின்னரும் புரோ நோட்களை திரும்ப தரவில்லை என தெரிவித்துள்ளார்.

விஷால் தரப்பு கேட்டதற்கு, ப்ரோ நோட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தொலைந்து விட்டதாக கூறி, அதற்கு பதிலாக 100 ரூ. ஸ்டாம்ப் பேப்பரில் புதிய ஒப்பந்தம் ஒன்று எழுதி கொடுத்துள்ளார்.

இதனால் விஷால் சார்பில் அவருடைய மேலாளர் ஹரிகிருஷனன் ஆர்.பி சௌத்ரி மீதான புகார் மனுவை தியாகராய நகர் துணை ஆணையரிடம் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவோடு ஆர்.பி. சௌத்ரி தரப்பு ப்ரோ நோட் மற்றும் இதர ஆவணங்களுக்கு பதிலாக அளித்த 100 ரூ ஸ்டாம்ப் ஒப்பந்தத்தின் நகலையும் விஷால் தரப்பினர் இணைத்து வழங்கியுள்ளனர்.

Vishal complaint against RB Chowdary of Super Good Films

Overall Rating : Not available

Latest Post