இரும்புத்திரை ரிலீஸான முதல் நாளே வெற்றிவிழா கொண்டாடிய விஷால்

இரும்புத்திரை ரிலீஸான முதல் நாளே வெற்றிவிழா கொண்டாடிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal celebrated Irumbu Thirai success party on 1st day of its releaseவிஷால் தயாரித்து நடித்துள்ள இரும்புத் திரை படத்தை மித்ரன் இயக்கியுள்ளார்.

பட தடைகளை தாண்டி இப்படம் நீண்ண்ண்ண்ணட  நாட்களுக்கு பிறகு கடந்த மே 11ஆம் தேதி (நேற்று) வெளியானது.

இப்படத்தில் ஆதார் கார்டூ, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட சில திட்டங்களுக்கு முறைமுக தாக்குதல் இருப்பதால் பா.ஜ.க-வினர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் விஷால் வீட்டை முற்றுகையிடப்போவதாகவும் அறிவித்தனர் இதையொட்டி விஷால் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவை நேற்றே கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Vishal celebrated Irumbu Thirai success party on 1st day of its release

மே 15ஆம் தேதி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம விருந்து

மே 15ஆம் தேதி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan Productions 1st movie 1st look poster on 15th Mayகுறுகிய காலத்தில் தன் திறமையால் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளவர் சிவகார்த்திகேயன்.

நடிகர், பாடகர் என்ற வலம் வந்த இவர் நயன்தாராவின் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியாகவும் வளர்ந்துள்ளார்.

இதுவரை 12 படங்களில் நடித்துள்ள இவர் தற்போது ராஜேஷ் இயக்கும் 13வது படத்தில் நடித்து வருகிறார்.

மற்றொரு புறம் தயாரிப்பாளராகி படத்தையும் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற மே 15ஆம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Sivakarthikeyan Productions 1st movie 1st look poster on 15th May

தனி மெஜாரிட்டியில் ரஜினி; உளவுத்துறை ரிப்போர்ட்டால் அரசியல்வாதிகள் அதிர்ச்சி!

தனி மெஜாரிட்டியில் ரஜினி; உளவுத்துறை ரிப்போர்ட்டால் அரசியல்வாதிகள் அதிர்ச்சி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Survey Report Rajinis political party will win in 150 constituency in TN electionஅரசியல் வருவது உறுதி. ஆனால், கட்சியை இப்போது அறிவிக்க மாட்டேன் என ஆணித்தரமாக சொல்லிவிட்டார் ரஜினிகாந்த்.

அண்மையில் நடந்த காலா இசை வெளியீட்டில் கூட அரசியல் அறிவிப்பு இருக்கும் என பலர் எதிர்பார்த்தனர்.

ஆனால், நல்ல நேரம் வரும் போது சொல்வேன் என பேசினார்.

இது ஒரு புறமிருந்தாலும், ரஜினியின் அரசியல் பல பேருக்கு அடிவயிற்றை கலக்கி வருகிறதாம்.

சில தினங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு ரஜினி சென்றிருந்தார்.

அப்போது 234 சட்டசபை தொகுதிகளிலும், ரஜினிக்கு செல்வாக்கு எப்படி உள்ளது? என்ற, ‘சர்வே’ உளவுத்துறை தரப்பில் எடுக்கப்பட்டதாம்.

அதில், 150 தொகுதிகளில், ரஜினிக்கு கணிசமான ஆதரவு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதாவது, தலித் சமுதாய ஓட்டுகள் 15%; மொழி வாரியாக உள்ள சிறுபான்மையினர் ஓட்டுக்கள் 8%; மற்ற சமுதாய ஓட்டுகள் 15% அவருக்கு கிடைக்குமாம்.

அதாவது, 35 முதல், 40 சதவீத ஓட்டுக்கள், ரஜினி கட்சிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது அந்த சர்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசியலை எதிர்க்கும் அரசியல்வாதிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்களாம்.

முக்கியமாக இந்த சர்வே ஆளுங்கட்சிக்கு இது பேரதிர்ச்சியாம்.

எனவே ரஜினியை விமர்சிக்க கட்சியினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

அதன்படிதான் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ‘ரஜினி ஆட்சியை பிடிக்க முடியாது, காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம்’ என, கிண்டலாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

அவரின் அந்த பேச்சுக்கு ஒரு சமுதாயத்தினரின் எதிர்ப்பு தெரிவிக்க அதன் பின்னர் அவர் மனோரமா ஆச்சி பற்றிதான் சொன்னேன் என்று விளக்கம் அளித்தார்.

இனி இதுபோன்ற கடும் விமர்சனங்களை ரஜினி சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.

Survey Report Rajinis political party will win in 150 constituency in TN election

தன் ஹாலிவுட் படத்தின் தமிழ் தலைப்பை வெளியிட்டார் தனுஷ்

தன் ஹாலிவுட் படத்தின் தமிழ் தலைப்பை வெளியிட்டார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The Extraordinary Journey of the Fakir movie tamil version title releasedதனுஷின் முதல் ஹாலிவுட் படமான `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ உலகளவில் பிரபலமான கேன்ஸ் படவிழாவில் திரையிடப்பட உள்ளது.

அதற்காக நடிகர் தனுஷ் பிரான்ஸ் சென்றுள்ளனர்.

ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற நாவலை தழுவி காமெடி படமாக உருவாகியுள்ளது.

இப்படம் வருகிற மே 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதே நாளில் இந்தியாவிலும் ரிலீஸ் செய்ய திட்டமிள்ள நிலையில் இப்படத்தின் தமிழ் பதிப்பின் தலைப்பை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

அந்த படத்திற்கு வாழ்க்கைய தேடி நானும் போனேன் என பெயரிட்டுள்ளனர்.

The Extraordinary Journey of the Fakir movie tamil version title released

நயன்தாராவுக்காக கல்யாண வயசு வரிகளை எழுதிய சிவகார்த்திகேயன்

நயன்தாராவுக்காக கல்யாண வயசு வரிகளை எழுதிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan wrote Kalyana Vayasu song for Nayanthara`வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து `எஸ்.கே.13′ படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அனிருத் இசையில் நயன்தாரா நடித்து வரும் கோலமாவு கோகிலா என்ற படத்திற்காக பாடல் ஆசிரியராக உருவெடுத்துள்ளார்.

‘கல்யாண வயசு’ என்ற பாடல் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். இந்த பாடல் வருகிற மே 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகீறது.

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான `எதுவரையோ’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan wrote Kalyana Vayasu song for Nayanthara

இரும்புத்திரை-யில் ஆதார் அவமதிப்பு.?; விஷாலுக்கு போலீஸ் பாதுகாப்பு

இரும்புத்திரை-யில் ஆதார் அவமதிப்பு.?; விஷாலுக்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalமித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் நடித்துள்ள இரும்புத்திரை படம் இன்று வெளியானது.

இதில் ஆதார் அட்டை, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை குறித்து தவறான கருத்து உள்ளது என்றும், எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், நாமக்கல்லைச் சேர்ந்த என்.நடராஜன் என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் இந்து அமைப்புகளும் இரும்புத்திரை படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. விஷால் வீட்டை முற்றுகையிட போவதாக இந்து அமைப்புகள் அறிவித்திருந்தது.

இதன் காரணமாக விஷால் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

More Articles
Follows