விஷால் – எஸ்.ஜே சூர்யா இணையும் பட சூட்டிங்கை ஆரம்பித்தார் ஆதிக்

விஷால் – எஸ்.ஜே சூர்யா இணையும் பட சூட்டிங்கை ஆரம்பித்தார் ஆதிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷாலின் 33வது படமாக உருவாகும் புதிய படமான ‘மார்க் ஆண்டனி‘ படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.

விஷாலின் ‘எனிமி’ படத்தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார் .மிக முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார்.

விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார் . மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில் வர்மா , நிழல்கள் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள் .

‘இசை அசுரன் ‘ ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். கலை இயக்கம் உமேஷ் ராஜ்குமார் .

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது .

தொழில் நுட்பக்குழு :

எழுத்து & இயக்கம் -ஆதிக் ரவிச்சந்திரன்

தயாரிப்பு – S வினோத்குமார் மினி ஸ்டுடியோ

இசை – ஜி வி பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு – அபிநந்தன் ராமானுஜம்

படத்தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி

கலை இயக்கம் – உமேஷ் ராஜ்குமார் .

சண்டைப்பயிற்சி – கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா

உடைகள் – சத்யா NJ

நடனம் -தினேஷ் , அஸார்

பாடல்கள் – மதுர கவி ,அஸல் கோலாறு

நிர்வாக தயாரிப்பு – சொக்கலிங்கம் ,

மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

புகைப்படம் – R S ராஜா

விளம்பர வடிவமைப்பு -கபிலன்

Vishal and SJ Suryah starrer Mark Antony commences shoot with pooja

Technical Team:

Writer & Director- Adhik Ravichandran
Producer- S Vinod Kumar
Production House- Mini Studio
Music – GV Prakash Kumar
Cinematography – Abhinandan Ramanujam
Editing- Vijay Velukutty
Art Direction – Umesh Rajkumar.
Stunts – Kanal Kannan, Peter Hein, Ravi Varma
Costumes – Satya NJ
Dance Choreography -Dinesh, Azhar
Lyrics – Mathura Kavi, Asal Kolaru
Stills- RS Raja
Executive Producer- Chokkalingam
Public Relations – Riaz K Ahmed
Publicity Design -Kabilan

தேச ஒற்றுமையை சீர்குலைத்த ‘ஜெய்பீம்’.; சூர்யா-ஜோதிகா மீது வழக்கு பதிய கோர்ட் உத்தரவு

தேச ஒற்றுமையை சீர்குலைத்த ‘ஜெய்பீம்’.; சூர்யா-ஜோதிகா மீது வழக்கு பதிய கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டி.ஜே. ஞானவேல் இயக்கிய ‘ஜெய்பீம்’ படத்தில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.

சூர்யாவே படத்தை தயாரித்து ஓடிடி தளத்தில் கடந்தாண்டு 2021 வெளியிட்டார்.

இந்த திரைப்படம் வன்னியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக பாமகவினர் அப்போதே எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது ‘ஜெய்பீம்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார்.

‘ஜெய்பீம்’ சமயத்தில் தர்மசங்கடங்கள்..; ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் முதல் பெரிய மாற்றம் – சூர்யா சூடான பேச்சு

மத நம்பிக்கையையும், புனித வழிபாட்டு அடையாளங்களையும், சமாதி வைத்து தெய்வமாக வணங்கும் தெய்வத்திரு ‘குரு’ என்பவரை பழங்குடி மக்களை வதைத்துக் கொல்லும் அரக்கனாக ஜெய்பீம் சினிமாவில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும் வன்னிய குல சாதியினர் ST சாதியினரை கொடுமை செய்வதாக காட்சிப்படுத்தி உள்ளதாக தனது நண்பர்கள் தன்னிடம் கூறும் போது அவமான மடைந்தேன் என சந்தோஷ் நாயகர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உண்மை கதையில்… துணை ஆய்வாளரின் அசல்பெயர் அந்தோணிசாமி. அவர் பிசி வகுப்பைச் சேர்ந்தவர்.

ஆனால், வன்னியர்களை குற்றவாளிகளாக காட்சிப்படுத்த தவறான நோக்கத்தில் அந்தோணிசாமி பெயரை மாற்றி குருமூர்த்தி என வைத்தனர்.

எஸ்.ஐ. குருமூர்த்தி வீட்டில் உள்ள காலண்டரில் அக்கினி குண்டம் படத்தையும் காட்சி படுத்தி இருந்தனர். (பின்னர் மாற்றியமைக்கப்பட்டது)

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்பட்ட நிலையில் சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சந்தோஷ் நாயகர்.

புகார் மீது 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல்நிலைய ஆய்வாளருக்கு சைதை நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்தில் ஜெய்பீம் படத்தில் காட்சி என்ற புகாரில் உத்தரவு.

மேலும் முதல் தகவல் அறிக்கையை மே 20ல் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

Jai Bhim case: Court orders FIR against Suriya, Jyothika and Director Gnanavel

‘தலைவர் 169’ படத்தில் இன்னொரு சூப்பர் ஸ்டார்.; பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதிசயம்.!

‘தலைவர் 169’ படத்தில் இன்னொரு சூப்பர் ஸ்டார்.; பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதிசயம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ‘தலைவர் 169‘ படத்தில் நடிக்கவிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க ‘பீஸ்ட்’ பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க அனிரூத் இசையமைக்கிறார்.

ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாராய் பெயர் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டது. மற்றொரு முக்கிய கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் நடிக்கவுள்ளாராம். இந்த தகவல்களை நாம் ஏற்கெனவே நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

வடிவேலு, பிரியங்கா மோகன் ஆகியோரும் ரஜினியுடன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பை 2022 ஜூலையில் தொடங்கி அடுத்த ஆண்டு 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வந்துள்ளது.

இதற்காக சிவராஜ் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம் சன் பிக்சர்ஸ்.

30-40 ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து சூப்பர் ஆக்டர் கமல்ஹாசன், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் & தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Another super star in Rajini film

செயற்கை நுண்ணறிவு கொண்ட பெண்..; சிவா ஜோடியாக சிம்பு-தனுஷ் பட ஹீரோயின்

செயற்கை நுண்ணறிவு கொண்ட பெண்..; சிவா ஜோடியாக சிம்பு-தனுஷ் பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’.

இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் மற்றும் நடிகை அஞ்சு குரியன் நடித்திருக்கிறார்கள்.

(சிம்பு உடன் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ & தனுஷ் உடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படங்களில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருந்தார்.)

சிறிய இடைவெளிக்கு பிறகு பாடகர் மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் மா கா பா ஆனந்த், பக்ஸ், ஷா ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா , கே பி ஒய் பாலா, ‘மைக்செட்’ அபினாஷ், நடிகை திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் பிரம்மாண்டமாக பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

ஆர்தர். ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். தயாரிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் கவனிக்க, பூபதி செல்வராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். நடன காட்சிகளை நடன இயக்குனர் சாண்டி அமைக்க, சண்டை பயிற்சி போனிக்ஸ் பிரபு மேற்கொள்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்..

“இந்த படத்தில் உணவு விநியோகிக்கும் டெலிவரி பாய் ஷங்கர் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் சிவா நடிக்கிறார்.

செயற்கை நுண்ணறிவு கொண்ட சிம்ரன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

இவரது தோற்றம், உடல்மொழி ஆகியவை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும். சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் இளம்பெண் கதாப்பாத்திரத்தில் நடிகை அஞ்சுகுரியன் நடித்திருக்கிறார்.

இவர்களுக்கிடையே நடைபெறும் ஃபேன்டஸி ரொமான்டிக் காமெடி தான் படத்தின் கதை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் மிர்ச்சி சிவாவின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளதால், இதற்கு இணையவாசிகளின் பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.

Single Shankarum Smartphone Simranum

Dhanush and Simbu film heroine joins with Mirchi Siva

‘மிஸ் இந்தியா’ போட்டியில் ஷிவானி ராஜசேகர்

‘மிஸ் இந்தியா’ போட்டியில் ஷிவானி ராஜசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ராஜசேகர் ஆகியோரின் மூத்த மகளான நடிகை ஷிவானி ராஜசேகர், மிஸ் இந்தியா போட்டியில் தமிழகம் சார்பில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 30, 2022 அன்று அவர் ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

அதில் அனைவரின் கவனத்தை ஈர்த்த வகையில் இப்போது, அவர் மிஸ் இந்தியா கிரீடத்திற்காக போட்டியிடும் முதல் 31 போட்டியாளர்களில் ஒருவராக போட்டியிடவுள்ளார்.

நடிகை ஷிவானி ராஜசேகர் தமிழ் சினிமாவில், நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘அன்பறிவு’ படத்தில் அறிமுகமானார்.

விஷால்-தனுஷ்-விஜய்சேதுபதி ஆகியோரை பற்றி Dr ராஜசேகரின் மகள் ஷிவானி

(இவரின் தங்கை ஷிவாத்மிகா ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.)

அவரது நடிப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பரவலான பாராட்டுக்களை பெற்றது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகையாக வலம் வரும் நடிகை ஷிவானி ராஜசேகர் நடிப்பில், தற்போது பல படங்கள் தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் தற்போது ஷிவானி ராஜசேகர் பெற்றுள்ள, ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு என்ற இந்த சிறப்பு மரியாதை, அதைத்தொடர்ந்து இப்போது மதிப்புமிக்க ‘மிஸ் இந்தியா’ கிரீடத்திற்கு போட்டியிடுவது அவருக்கு மிகப்பெரும் பெருமையையும் பிரபலத்தையும் பெற்று தந்துள்ளது.

Miss India pageant: Actress Shivani Rajasekhar to represent Tamilnadu

விமலின் ‘தெய்வ மச்சான்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய்சேதுபதி

விமலின் ‘தெய்வ மச்சான்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு ‘தெய்வ மச்சான்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார்.

இவர்களுடன் பாண்டியராஜன், ‘ஆடுகளம்’ நரேன், பாலசரவணன், வேலா ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு காட்வின் இசை அமைக்கிறார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மார்ட்டின் மற்றும் வத்சன் இணைந்து எழுதியிருக்க, படத்தின் பின்னணி இசையை அஜீஷ் கவனிக்கிறார்.

எடிட்டர் இளையராஜா படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கிராமிய பின்னணியில் ஃபேண்டசி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்….

, ” கிராமிய பின்னணியில் ஃபேன்டஸியுடன் கூடிய, குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைக்கதை. இதில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை கவரும்” என்றார்.

‘விலங்கு’ வலைதள தொடரின் பிரம்மாண்டமான வரவேற்புக்கு பிறகு விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘தெய்வ மச்சான்’ படத்திற்கு பார்வையாளர்களிடையே பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கில் விமலின் தோற்றமும் ரசிகர்களை கவர்ந்திருப்பதால், ‘தெய்வ மச்சான்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.

Actor Vemal starrer “Deiva Machan” first look revealed

More Articles
Follows