தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம், ’மார்க் ஆண்டனி’.
எனிமி’ படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இதில் விஷாலும் எஸ்.ஜே. சூர்யாவும் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்கள்.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ‘ பட நாயகி ரிது வர்மா நாயகியாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பாடலும் ஆக்ஷனும் சேர்ந்த காட்சியை படக்குழுவினர் படமாக்கி வந்தனர்.
நேற்று நடந்த படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சியில் பங்கேற்ற போது நடிகர் விஷாலுக்கு அவரது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இப்போது ஓய்வு எடுத்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘லத்தி’ படத்தின் ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பின்போதும் நடிகர் விஷால் சில முறை காயமடைந்திருந்தார்.
Vishal and SJ Suriya in dual roles. Ritu Varma as the heroine!