வெற்றிமாறனின் ‘விசாரணை’யை விரட்டிய ஆஸ்கர்

visaranai movie posterவெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்த படம் ’விசாரணை’.

தனுஷ் தயாரித்த இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ரிலீஸானது.

இப்படத்தின் விசாரணை காட்சிகள் தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

மேலும் சிறந்த துணைநடிகர், சிறந்த படம், சிறந்த படத்தொகுப்பு என மூன்று தேசிய விருதுகளை வென்றது.
எனவே இப்படம் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில் வெளிநாட்டு திரைப்படம் என்கிற பிரிவிற்காக பரிந்துரைக்கப்பட்ட விசாரணை, விருது பட்டியலில் தேர்வாகவில்லை.

ஆஸ்கர் கனவோடு காத்திருந்த தமிழ் ரசிகர்களுக்கு இச்செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

Overall Rating : Not available

Related News

விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று…
...Read More
சினிமாவில் நடிகர்கள் படம் தயாரிப்பது ஒன்றும்…
...Read More
‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி இன்றும்…
...Read More
'பொல்லாதவன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு…
...Read More

Latest Post