விக்ரமின் ‘சாமி-2’… கதையை மாற்றிய ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி-விக்ரம் கூட்டணியில் உருவான சாமி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று ரஜினி தலைமையில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது.

இப்படத்தின் க்ளைமாக்ஸில் வேட்டை தொடரும் என திரையிட்டனர்.

ஆனால் தற்போது உருவாகவுள்ள சாமி 2, அக்கதையின் தொடர்ச்சியாக உருவாகவில்லையாம்.

அதாவது சீக்வல் இல்லாமல், ப்ரீகுவல் எனப்படும் முன்கதையாக உருவாக்கப்பட உள்ளதாம்.

அஜித் நடித்த பில்லா வெற்றி பெற்றதால், பில்லா 2 இப்படித்தான் உருவானது.

சாமி 2 படத்தில் திருநெல்வேலிக்கு விக்ரம் வருவதற்கு முன் ரவுடிகளை கொட்டத்தை அடக்க ஆறுச்சாமி என்ன செய்தார்? என்பதை காட்டப் போகிறார்களாம்.

ரஜினி மேஜிக்கால் ‘கபாலி’ உமாதேவிக்கு கிடைத்த ரூ. 2 லட்சம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்ற அடிக்கடி பலர் சொல்வதை கேட்டிருப்போம்.

அதுபோல் ரஜினியின் கபாலி படத்தில் இணைந்த ஒவ்வொருவரும் இன்று உலகம் முழுக்க தெரிந்த முகங்களாய் மாறிவிட்டனர்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘வீரத்துரந்தறா’ என்ற பாடலை கவிஞர் உமா தேவி எழுதியிருந்தார்.

இதற்கு முன் இவரது சம்பளம் ரூ. 10-15 ஆயிரம் வரைதான் இருந்ததாம்.

ஆனால் கபாலி படத்திற்கு பாடல் எழுதியதற்கு ரூ.2 லட்சத்தை சம்பளமாக கொடுத்தாராம் தயாரிப்பாளர் தாணு.

மேலும் அப்பாடல் பெரும் ஹிட்டடித்ததால், நிறைய வாய்ப்புகள் வந்துள்ளதாம்.

சூர்யாவை ‘பேரழகனாக’ காட்டிய இயக்குனர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் திலீப் நடித்து பெரும் ஹிட்டடித்த படம் குஞ்ஞி கூனன்.

தமிழில் பேரழகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இங்கும் வெற்றிப் பெற்றது.

மலையாளத்தில் இயக்கிய சசி சங்கரே தமிழிலும் இயக்கி இருந்தார்.

இதில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இரு வேடங்களில் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பகடை பகடை என்ற தமிழ்ப் படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சர்க்கரை நோயாளியான இவர் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு போகும் வழியிலே மரணமடைந்தார் . இவருக்கு வயது 57.

மேலும் மலையாளத்தில் 10 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த சசி சங்கருக்கு பீனா என்ற மனைவியும் விஷ்ணு என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விஜய்யை அழைக்கும் கலெக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயற்கையின் அழகால் சூழப்பட்ட மாநிலம் கேரளா என்று சொன்னால் அது மிகையல்ல.

இம்மாநிலத்தில் எல்லைப் பகுதிகளில் அடர்ந்த காடுகளை காணலாம்.

இதில் பாலக்காட்டில் துணை கலெக்டராக பணிபுரிந்து வருபவர் உமேஷ் கேசவன்.

இவர் அங்குள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் அட்டப்பாடி பகுதிக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

அப்போதுதான் அங்குள்ளவர்களுக்கு எந்தவிதமான அரசின் சலுகைகளும் வந்து சேரவில்லை என தெரியவந்துள்ளது.

ஆனால் அவர்களின் ஒரே பொழுதுபோக்கு விஜய் படம் தானாம்.

எனவே அங்கு கல்வி மற்றும் அனைத்துவிதமான விழிப்புணர்வை ஏற்படுத்த விஜய்யை அழைக்க இருக்கிறாராம் துணை கலெக்டர் உமேஷ் கேசவன்.

ரஜினியை இயக்க போகும் ஐஸ்வர்யா-சௌந்தர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்க பலர் முன்னணி இயக்குனர்கள் காத்திருக்கின்றனர்.

ஆனால் யாரும் எதிர்பாரா வண்ணமாக தற்போது புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் மீண்டும் அதுபோன்ற போன்ற வாய்ப்பை தன் இரு மகள்களுக்கும் கொடுக்கவிருக்கிறாராம்.

கண்டக்டர் முதல் சூப்பர் ஸ்டார் வரை தன் தந்தை பயணித்த வாழ்க்கையை எழுதி வருகிறார் ஐஸ்வர்யா.

இந்த புத்தகம் நிறைவு பெற்ற உடன் இதற்கு திரை வடிவம் கொடுத்து, அதை ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இருவரும் இயக்கவிருக்கிறார்களாம்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் கலைஞர்கள் பற்றிய விவரங்களை இந்தாண்டின் இறுதியில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

மீண்டும் மோதலுக்கு தயாராகும் விக்ரம்-தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தொடரி’ வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.

செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை வருவதால் நான்கு நாட்களை குறிவைத்து இப்படத்தை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள இருமுகன்  செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நாளை குறிவைத்தே படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

கடந்தாண்டும் விக்ரம் மற்றும் தனுஷின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி மோதிக் கொண்டது.

விக்ரம் நடித்த ’10 எண்றதுக்குள்ள’ மற்றும் தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ ஆகிய இரு படங்களும் அக்டோபர் 21ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows