தீபாவளி விருந்தாக அமையும் விக்ரமின் ஸ்கெட்ச் டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாலு படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் படத்தை இயக்கி வருகிறார் விஜய்சந்தர்.

இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில், இறுதிகட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பட டீசரை தீபாவளி தினத்தன்று அதாவது இந்தாண்டு அக்டோபர் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் விக்ரம் உடன் தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிக்க, தமன் இசையமைத்துள்ளார்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார்.

Vikram Tamannaah starring Sketch teaser on Diwali 2017

கேரக்டர் லுக்கை வெளியிட்டு அசத்திய இது வேதாளம் சொல்லும் கதை படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுமுக இயக்குநர் ரத்தீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘இது வேதாளம் சொல்லும் கதை’.

அஸ்வின், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம், அபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தின் 3 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளதாம்.

டிசம்பரில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதன் டீசரை விஜய்சேதுபதி தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த கேரக்டர் போஸ்டர்களை கவுதம்மேனன், முருகதாஸ், வெங்கட்பிரபு உள்ளிட்ட 8 பிரபலங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டர்கள் தற்போது அது இணையங்களில் வைரலாகி வருகிறது.

Idhu Vedhalam Sollum Kathai movie character posters goes viral

மெர்சல் டைட்டிலை பயன்படுத்த தடை; நியூ டைட்டில் இதுவா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் மெர்சல் தலைப்புக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை ஐகோர்ட்.

மேலும் வருகிற
அக்.3க்குள் படத்தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒருவேளை இந்த தலைப்புக்கு தடை நீடிக்குமானால், ஆளப்போறான் தமிழன் என்ற தலைப்பு வைக்கப்படலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

சித்தார்த்-ஜிவி.பிரகாஷ்-சசி இணையும் படத்தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா இயக்கத்தில் ஜிவி. பிரகாஷ் மற்றும் ஜோதிகா நடித்துள்ள நாச்சியார் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து ‘அடங்காதே’, ‘ஐங்கரன்’ மற்றும் ‘100% காதல்’ ஆகிய படங்கள் ஜிவி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ளது.

இதனையடுத்து சசி இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் ஜிவி.பிரகாஷ்.

இப்படத்திற்கு ‘ரெட்டை கொம்பு’ எனப் பெயரிட்டுள்ளனர்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு வழக்கம்போல நாயகன் ஜிவிபி.யே இசையமைக்கிறார்.

அபூர்வ சகோதரர்கள் படத்தின் ரீமேக்கா மெர்சல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் டீசர் ரிலீஸ் ஆனது.

இதன் மூலம் சில ரசிகர்களுக்கு இருந்த சில சந்தேகங்கள் தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ளது உறுதியாகிவிட்டது.

எனவே இதனை வைத்து கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்துடன் ஒப்பீட்டு வருகின்றனர்.

அதில் அப்பா கமல் மற்றும் அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பார்கள். அப்பாவை கொன்ற கமலை சர்க்கஸில் உள்ள குள்ள கமல் பழிவாங்குவார்.

சர்க்கஸ் கமல்தான் இங்கே மேஜிக் மேன் விஜய் எனவும், மெக்கானிக் கமல்தான் இங்கே டாக்டர் விஜய் எனவும் கூறப்படுகிறது.

ஸ்ரீவித்யா கேரக்டரில் நித்யா மேனனும், ஆச்சி மனோரமா கேரக்டரில் கோவை சரளாவும் என்பது போல் சித்தரித்துள்ளனர்.

வில்லன் நாகேஷ் கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யாவும் கௌதமி கேரக்டரில் காஜலும், ரூபிணி கேரக்டரில் சமந்தாவும் நடித்துள்ளதாக படங்களை ஒப்பிட்டு டிசைன் செய்துள்ளனர்.

அந்த கதையை இன்றைய சூழலுக்கு ஏற்ப அட்லி மாற்றியிருப்பதாகவும் இணையங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.

இன்னும் ஒரு மாதத்தில் இதற்கான விடை தெரிந்துவிடப் போகிறதுதானே..

விவேகம் வில்லனை மெர்சல் வில்லன் இப்படி கலாய்க்கலாமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனராக ஜொலித்த எஸ்ஜே. சூர்யா தற்போது நடிப்புத் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய்யின் மெர்சல் மற்றும் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

ஸ்பைடர் படம் செப்டம்பர் 27ஆம் தேதியும் மெர்சல் படம் அக்டோபரிலும் ரிலீஸ் ஆகிறது.

இப்படங்கள் குறித்த ஒரு பேட்டியில் எஸ்ஜே சூர்யா கூறியதாவது…

ஸ்பைடர் படத்தில் டார்க் வில்லன். ஆனால் மெர்சல் படத்தில் கிளாஸ் வில்லன் ரோல்.

மெர்சல் படத்தில் 3 விஜய்க்கும் நான்தான் வில்லன்.

விஜய்யுடன் எப்போதும் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும். நான் நன்றாக நடித்தால் அவரே நடிச்ச மாதிரி பாராட்டுவார் விஜய்.

இந்தப்படம் ஹீரோவுக்கு ஜால்ரா அடிக்கிற படமாக இருக்காது . எனவும் அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

விவேகம் படத்தில் வில்லன் விவேக் ஓபராய் என்றாலும் அவர் அஜித்தின் புகழ் பாடிக் கொண்டே இருப்பார் என்பது இங்கே கவனித்தக்கது.

இப்போ டைட்டிலை படிங்க. புரியும்.

More Articles
Follows