‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நெகடிவ்வான கேரக்டரில் விக்ரம் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபலமான நாவல் ‘பொன்னியின் செல்வன்’ தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படமாக உருவகி வருகிறது.

மணிரத்னம் இயக்க ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை லைகா நிறுவனம் உருவாக்குகிறது.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

இப்படி முதல் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

கிட்டதட்ட முக்கியமான கேரக்டர்களில் மட்டும் 27 பேர் நடிக்கிறார்களாம்.

இந்த நிலையில் விக்ரம் பிரபு நெகட்டிவ்வான ஒரு கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.

முதல்வர் பதவியை தவிர்க்கும் ரஜினிக்கு தமிழருவி மணியனின் தரமான அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களாகவே ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த தமிழக அரசியலையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம் என்னவென்றால்.. “ரஜினி கட்சி ஆட்சிக்கு வந்தால் ரஜினி முதல்வர் பதவியில் அமரமாட்டார்” என்ற ரஜினியின் சொல் தான்.

இது விவாதப் பொருளாக பார்க்கப்பட்ட நிலையில் விழுப்புரத்தில் காந்திய மக்கள் இயக்கம் மற்றும் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் கூட்டம் நடைபெற்றது..

இதில் ‘ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன ? ஏமாற்றம் என்ன?’ என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேச்சின் சில துளிகள் இங்கே…

“ஒரு வார்டு கவுன்சிலர் ஆவதற்காக தன் கொள்கைகளை குழிதோண்டி புதைத்த மனிதர்களைதானே நாம் பார்த்துள்ளோம்.

ஆனால் ரஜினி பற்றற்ற ஒரு துறவியாகவே பாவிக்க கூடிய மனிதர் ஆவார்.

ஸ்டைல் மன்னன் ரஜினியின் மாஸ் புரோமோவை வெளியிட்ட டிஸ்கவரி் சேனல்

ராஜகண்ணப்பன் என்பவர் ஒருவர் இருக்கிறார்… 10 நாளைக்கு முன்பு அதிமுகவில் இருப்பார். அதற்கு முன்பு திமுக.வில் இருந்தார்.

அதற்கு முன் அதிமுக.வில் இருந்தார். மக்கள் நலனை விட அவருக்கு தன் நலனே முக்கியம்.

கொஞ்சமாவது இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு கோவம் வர வேணாமா? வராது போல.

வாடகை சைக்கிள் கடை வைத்திருப்பவர்கள் கூட நம்மை தெரியாது என்றால் வாடகைக்கு சைக்கிள் தர மறுப்பான்.

அரசியல் மாற்றம் என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் இல்லை.

ஒட்டுமொத்தமாக படிந்திருக்கும் இழிந்த அரசியல் கலாச்சாரத்தை தூக்கி போடுவதுதான் ரஜினியின் அரசியல் மாற்றம்..

அவர் அரசியலை தூய்மைப்படுத்தவே வருகிறார்….

ரஜினி என்னிடம் ஒருமுறை கேட்டார், “ஐயா, மாற்று அரசியல் என்று திரும்ப திரும்ப என்று நீங்கள்தான் பேசுகிறீர்கள்? நான் அந்த முதல்படியிலாவது நான் கால் வைக்க வேணாமா?” என்றார்.

“அது என்ன முதல்படி?” என்றேன்… அதற்கு அவர், “ஆட்சி வேறு, கட்சி வேறு. ஆட்சி ஒருத்தர் நடத்தட்டும், கட்சி ஒருத்தர் நடத்தட்டும்.

கட்சி நடத்துபவர்கள் ஆட்சியில் அமர்ந்தால், அது கட்சியின் ஆட்சியாக இருக்குமே தவிர, மக்களின் ஆட்சியாக இருக்காது” என்று ரஜினி சொன்னார்.

இதைவிட மக்களாட்சி தத்துவத்துக்கு வேறு யாரால் விளக்கம் சொல்ல முடியும்?

உடனே நான் கேட்டேன்.. “சரி.. கட்சியை ஒருவரிடம் தந்துவிடுங்கள், ஆட்சியை நீங்கள் வைத்து கொள்ளுங்கள்” என்றேன்.

இப்படி பேசும் ஒரு அரசியல்வாதியை காட்டுங்கள் பார்க்கலாம்.

ரஜினியின் “ஏமாற்றம்” என்னவென்றால் ரஜினி மன்றத்தினர் தமிழக மக்களை சென்று சந்திக்கவில்லை என்பது மட்டும்தான்.

மகாத்மா காந்தி நினைத்திருந்தால் அவர் இந்தியாவின் முதல் பிரதமராக வந்திருப்பார். யாரும் கேள்வி எழுப்பியிருக்க முடியாது..

ஆனால் ஜவஹர்லால் நேருவை பிரதமராக்கினார்… பின்னர் நேரு, காந்தியின் பேச்சை கேட்கவில்லை..

அதிகாரம் வலிமையானது என்பதை உணருங்கள் என்று ரஜினியிடம் சொன்னேன்..

முதல்வராக எடப்பாடியை பழனிசாமியை சசிகலாதான் தேர்வு செய்தார். 30 நாள்கூட தேற மாட்டார் என்று நினைத்த எடப்பாடியையே 3 வருஷம் ஆகியும் அசைக்க முடியவில்லை..

அமாவாசை என்றாலே எடப்பாடி என்றாகிவிட்டது.. அவரை்குறைத்து சொல்லவில்லை.. அவர் மீது மரியாதை இருக்கிறது.

கூவத்தூரில் எடப்பாடிதான் முதல்வர் என்று சொன்னதுமே அப்படியே முட்டி போட்டபடியே சசிகலாவிடம் வந்தார். இப்படி ஒரு அமாவாசை கிடைப்பார் என்று நாம்கூட நினைக்கவில்லை..

சசிகலா சிறைக்கு போனவுடன் முட்டி போட்டவர் எழுந்து நின்றார்.. அதான் அவரை அப்படி சொன்னேன்.

அண்மையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினி 3 விஷயங்களை பேசினார்.

அதில், ஆட்சிக்கு வந்தால் கட்சிப்பதவி பறிக்கப்படும். 48 வயதுக்குட்பட்டோருக்கு 60 சதவீதம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்றார். இதற்கு ஒப்புக்கொண்ட மாவட்ட செயலாளர்கள் அடுத்து அவர் சொல்லிய விஷயத்திற்கு மட்டும் ஒப்புக்கொள்ளவில்லை. அது என்னவென்றால், நான் அதிகாரத்திற்கு வரமாட்டேன் என்றதுதான்..

அதிகாரம்.. பதவி… இதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும்.. ரஜினி எந்த அமாவாசை பின்னால் செல்ல பார்க்கிறார்.

ஒருநாளும் இந்த தவறை ரஜினி செய்ய மாட்டார்.. ரஜினி அவர்களே.. நான் உட்பட எவனையும் நீங்கள் முதல்வர் என்று சொல்லாதீர்கள்.

கட்சித் தலைமையாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஆட்சித் தலைமையாக ரஜினி மட்டுமே இருக்க வேண்டும். இந்த கோரிக்கையை உங்களிடம் வைக்கிறேன்.

ரஜினி அனைத்துத் தலைவர்களையும் அரவணைக்கிறார். ஆனால் அவருக்கு ஆதரவாக எந்த அரசியல்வாதியும் பேசியதில்லை.

எம்ஜிஆரின் சுறுசுறுப்பு.. இந்திரா காந்தியின் கண்ட அதே விறுவிறுப்பு ரஜினியிடம் எனக்கு தெரிகிறது.” என்றார்.

இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.

நாடக கதையை திருடியே ஷங்கர் படம் எடுத்தார்; அடித்து சொல்வேன் – ராதாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் நாடக அரங்கேற்றம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

அப்போது மேடையில் பேசினார் ராதாரவி.

“எனக்கு திமிரு என்பது உள்ளேயே இருக்கிறது ஆரம்பகாலத்திலிருந்து சொல்கிறேன்.

நல்ல நாடகங்களை போடுகிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தில் முதல் முறையாக பாஜக அரசு ஒரு தமிழரை பதவியில் அமர்த்தியுள்ளது.

ஒய்.ஜி மகேந்திரனின் நாடகக் கதையை கதையை பலர் திருடிவிட்டனர்.

டைரக்டர் ஷங்கரும் கதையை திருடி விட்டார்.

‘ரூபாய்க்கு மூணு கொலை’ என்ற நாடகத்தின் போது ஓரமாக அமர்ந்திருப்பார்.

அந்த நாடகங்களைப் பார்த்து அதிலிருந்து தான் இரட்டை வேடங்களில் உள்ள கதையை எடுத்துள்ளார் என அடித்துச் சொல்வேன்” என ராதாரவி கூறினார்.

புதுப்பேட்டை 2: ரசிகர்கள் மனதில் புது வெள்ளத்தை பாய்ச்சிய செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என தரமான படைப்புகளை கொடுத்தவர் செல்வராகவன்.

ஆனால் செல்வராகவன் & சூர்யா இணைந்த NGK உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவின.

இதனால் நிச்சயம் ஒரு வெற்றியை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் செல்வராகவன்.

இந்த நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் அடுத்தப்படம் குறித்து மாணவர்கள் கேட்டனர்.

தனுஷ் நடிக்கும் புதுப்பேட்டை 2 படத்தை இயக்க உள்ளேன், என அறிவித்தார்.

இதைக்கேட்டு மாணவர்கள் & செல்வா ரசிகர்கள் உற்சாகமாகினர்

மயக்கம் என்ன படத்திற்கு பிறகு செல்வராகவனும், தனுஷும் இணையவில்லை் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஒரு பொண்ணையே இப்படி தடவுறீங்களே..; அமலா பாலின் லெஸ்பியன் வைரல் வீடியோ.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் அறிமுகமான சிந்து சமவெளி என்ற தன் முதல் படத்திலேயே சர்ச்சையை ஏற்படுத்தியவர் அமலா பால்.

மாமனாருடன் தகாத உறவு கொள்ளும் மருமகளாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் நடித்த மைனா படம் மூலம் சிறந்த நடிகை என பெயரை பெற்றார்.

இதனையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால்.

விஜய் நடித்த தலைவா படப்பிடிப்பின்போது இயக்குனர் விஜய்யின் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் ஒரு வருடத்திலேயே கருத்து வேறுபாடு விவாகரத்தும் பெற்றார்.

15 ஆண்கள் முன்னிலையில் ‘ஆடை’யின்றி நடித்த அமலாபால்

அதன் பிறகு டைரக்டர் விஜய் ஒரு டாக்டர் பெண்ணை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

ஆனால் அமலாபால் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.

சமீபத்தில் ஆடை இல்லாமல் ஆடை படத்தில் நடித்தார்.

இந்நிலையில் தன் தோழியிடம் எல்லை மீறிய அமலாபாலின் லெசிபியன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

இதனை பார்த்த பலரும் பலவிதமான பலான கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டைல் மன்னன் ரஜினியின் மாஸ் புரோமோவை வெளியிட்ட டிஸ்கவரி் சேனல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் ‘மேன் VS வைல்ட்’ என்ற நிகழ்ச்சியை வழங்கி சாகசங்கள் புரிந்து வருகிறார் பியர் க்ரில்ஸ்.

இவருடன் இணைந்து பல ஹாலிவுட் நடிகைகள் காட்டுக்குள் பயணம் செய்துள்ளனர்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதும் இந்த நிகழ்ச்சி உலக அளவில் பிரபலமானது.

அண்மையில் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சிக்காக கர்நாடகா பந்திப்பூர் காட்டுக்குள் சென்றார்.

‘இன் டூ தி வைல்ட்’ என்று பெயரிடப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதல் பிரபலமாக ரஜினி உள்ளார்.

அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சி எப்போது ஒளிப்பரப்பாக போகிறது என்று பலரும் காத்திருந்தனர்.

வருகிற மார்ச் 28ஆம் தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்போவதாக டிஸ்கவரி சேனல் புரோமோ வெளியிட்டது.

அதில் ரஜினிகாந்த் காட்டில் குவாட் வகை பைக்கை ஓட்டி வந்தார்

தற்போது மேலும் புதிதாக ஒரு வீடியோவை டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ளது.

அதில் பாலத்தை கடப்பது, நெஞ்சளவு ஓடும் தண்ணீரில் நடப்பது என்று பல சாகசங்கள் உள்ளது.

இதுதான் உண்மையான சாகசம் என்று ரஜினிகாந்த் ஹாப்பியாக சொல்கிறார்.

More Articles
Follows