பவர்புஃல் டைட்டிலுடன் மீண்டும் இணைந்தனர் விக்ரம் பிரபு & ஸ்ரீதிவ்யா

பவர்புஃல் டைட்டிலுடன் மீண்டும் இணைந்தனர் விக்ரம் பிரபு & ஸ்ரீதிவ்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கும்கி’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சிவாஜி பேரன் விக்ரம் பிரபு.

இப்பட வெற்றியை தொடர்ந்து அரிமா நம்பி, மற்றும் சிகரம் தொடு என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்தார்.

ஆனால் அதன்பின்னர் என்ன ஆனதோ.. அவரது பல படங்கள் தோல்வியை தழுவியது.

வெள்ளைக்கார துரை, வாகா, பக்கா, வீரசிவாஜி, நெருப்புடா, துப்பாக்கி முனை, அசுரகுரு ஆகிய படங்கள் சொல்லிக்கொள்கிற அளவில் ஓடவில்லை.

வானம் கொட்டட்டும், புலிக்குத்தி பாண்டி ஆகிய படங்கள் சுமாரான வெற்றியை பெற்றது.

தற்போது விக்ரம் பிரபு கைவசம் ‘பாயும் புலி நீ எனக்கு’, ‘டாணாக்காரன்’ மற்றும் ’பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்கள் உள்ளது.

இந்த நிலையில் தற்போது விக்ரம்பிரபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ’டைகர்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பூஜை இன்று நடந்தது

கார்த்திக் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இதில் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளார்.

இந்த ஜோடி ஏற்கனவே ’வெள்ளைக்கார துரை’ படத்தில் இணைந்துள்ளனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

நடிகர் சக்தி வாசு வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் அனந்திகா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். ரிஷி (எனும்) அட்டு, டேனியல் (எனும்) டேனி முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சாம் CS இசையமைக்க, கதிரவன் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலைத் துறையை கவனிக்கிறார். மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களில் மணிமாறன் (எடிட்டிங்), முருகன் (ஸ்டில்ஸ்), பாபா பாஸ்கர் (நடன அமைப்பு), கணேஷ் மாஸ்டர் (ஸ்டண்ட்), மற்றும் S. வினோத் குமார்-தம்பி M பூபதி (நிர்வாகத் தயாரிப்பு) பணிகளை கவனிக்கின்றனர்.

Vikram Prabhu and Sri Divya joins for a new film

நிவின்பாலி-அஞ்சலி கூட்டணியில் சூரி..; மிஷ்கின் திடீர் விசிட்

நிவின்பாலி-அஞ்சலி கூட்டணியில் சூரி..; மிஷ்கின் திடீர் விசிட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து சூப்பர் ஹிட்டான ’மாநாடு’ படத்தை தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி.

இவர் மாநாடு ரிலீசுக்கு முன்பே தன் பட தயாரிப்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

தற்போது சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.

இதில் நிவின்பாலி மற்றும் அஞ்சலி ஜோடியாக நடித்து வருகின்றனர்.

யுவன் இசையமைத்து வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முக்கிய காட்சிக்காக ரயில் செட் ஒன்று போடப்பட்டுள்ளதாம்.

முக்கிய வேடத்தில் சூரி இந்த படத்தில் இணைந்துள்ளார்.

தற்போது நிவின்பாலி மற்றும் சூரி நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் ராம்.

இந்த நிலையில் இப்பட சூட்டிங் ஸ்பாட்டை இயக்குனர் மிஷ்கின் விசிட் செய்துள்ளார்.

அந்த படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Mysskin surprise visits to Director Ram – Nivin Pauly new film sets

சூர்யா தயாரிப்பில் மீண்டும் ஜோதிகா..; இயக்குனர் இவரா..?

சூர்யா தயாரிப்பில் மீண்டும் ஜோதிகா..; இயக்குனர் இவரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் மனைவி ஜோதிகா ரீஎன்ட்ரீ ஆனது முதல் அவர் நடிக்கும் படங்களை சூர்யா தயாரித்து வருகிறார்.

அண்மையில் ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் ஜோதிகா நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்து தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்தை ’கண்ட நாள் முதல்’ மற்றும் ’கண்ணாம்பூச்சி ஏனடா’ ஆகிய படங்களை இயக்கிய பெண் இயக்குனர் பிரியா இயக்கவிருக்கிறாராம்.

இந்த திரைப்படத்தையும் சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Suriya to produce new film with Jyothika

ராஜமௌலியால் வந்த பிரச்சினை.; சிவகார்த்திகேயன் பட ரிலீசில் சிக்கல்

ராஜமௌலியால் வந்த பிரச்சினை.; சிவகார்த்திகேயன் பட ரிலீசில் சிக்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள படம் ‘டான்’.

இந்த திரைப்படம் மார்ச் மாதம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது.

இதன் பின்னர் கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ படமும் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என ராஜமௌலி அறிவித்தார்.

டான் படத்தை சிவகார்த்திகேயனுடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

அதே சமயம் ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

‘ஆர்ஆர்ஆர்’ படம் பான் இந்தியா படம். மேலும் இது ராஜமௌலியின் படம் என்பதால் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த சமயத்தில் தமிழகளவில் டான் வெளியானால் கூட மிகவும் குறைவான தியேட்டர்களே கிடைக்கும்.

அத்துடன் லைகா-வின் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் டான் படத்தின் லாபம் பெரியளவில் பாதிக்கப்படும்.

எனவே ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு வழிவிடுவதை தவிர டான் படக்குழுவுக்கு வேறு வழியில்லை.

எனவே டான் படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Sivakarthikeyan’s Don may be postponed due to RRR release

‘வலிமை’ ரிலீசுக்காக வலியுடன் காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்.. 24 தேதி டார்கெட்.?

‘வலிமை’ ரிலீசுக்காக வலியுடன் காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்.. 24 தேதி டார்கெட்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான படம் ‘வலிமை’.

யுவன் இசையமைத்துள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

இதில் நாயகியாக ஹியூமா குரேஷி, வில்லனாக கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தாண்டு 2022 ஜனவரி 13ல் பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த சமயம் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது பிப்ரவரி 1 முதல் 1 வகுப்புகளே தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

ஆனாலும் வலிமை ரிலீஸ் அப்டேட் பற்றி எதுவும் வெளியாகவில்லை. இதனால் எங்களை வலியை படக்குழு புரிந்து கொள்ள வேண்டும் என அஜித் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் பிப்ரவரி 24 வியாழக்கிழமை படம் ரிலீசாக அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். அதுவரை காத்திருங்கள் ரசிகர்களே…

Looks like Ajith Kumar starrer Valimai is getting ready to hit the screen on February 24

தேர்தல் களம்.; கண்டுக்கொள்ளாத விஜய்.. வேட்பாளர்கள் & ரசிகர்கள் டென்ஷன்

தேர்தல் களம்.; கண்டுக்கொள்ளாத விஜய்.. வேட்பாளர்கள் & ரசிகர்கள் டென்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் ஒரு பக்கம் சினிமாவில் பிசியாக இருந்தாலும் மற்றொரு புறம் தமிழக அரசியலில் தனக்கு அரசியல் பிரவேசத்துக்கு முன்னோட்டம் பார்த்து வருகிறார்.

கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டவர்களில் 120க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றனர்.

தற்போது பிப்ரவரியில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தன் மக்கள் இயக்கத்தினரை போட்டியிட அனுமதித்துள்ளார் நடிகர் விஜய்.

தன் புகைப்படம் மற்றும் கொடியை பயன்படுத்த அனுமதித்துள்ளார்.

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுவாக ஆட்டோ சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் அவர்கள் கேட்ட ஆட்டோ சின்னத்தை கொடுக்க மறுத்துள்ளது ஆணையம்.

அந்த விளக்கத்தில்.. “இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளுக்கு மட்டுமே பொதுவான சின்னம் வழங்கப்படும். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

எனவே பொது சின்னமாக ஆட்டோ சின்னத்தை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம். இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் ஜனவரி 29ல் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் பணிகளை வேட்பாளர்கள் தொடங்கியுள்ளனர்.

பொது சின்னம் கிடைக்காத காரணத்தினால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுயேச்சையாக களமிறங்குகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

தங்கள் இயக்க ‘அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை விஜய் அறிவிப்பார்’ என விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலர் ஆனந்த் தெரிவித்து இருந்தும் அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் வேட்பாளர்களும் ரசிகர்களும் டென்ஷனில் உள்ளனர்.

Vijay silence makes his fans angry

More Articles
Follows