தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதனைத்தொடர்ந்து புதுச்சேரி அருகேயுள்ள பட்டானூரில் அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது.
இதில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
இந்த பிரபலங்களுடன் தென்னிந்தியாவைச் சேர்ந்த 3000க்கும் அதிகமான விக்ரமின் ரசிகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
விழாவுக்கு வந்திருந்த ரசிகர்கள் மேடையேறி மணமக்களை ஆசிர்வதிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ரசிகர்களை அவ்வளவாக அனுமதிப்பதில்லை.
ஆனால் தங்கள் அபிமான நடிகர் விக்ரம் செய்த செயல் தங்களை மெய் சிலிர்க்க வைத்தாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
மேலும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஓ பட்டர்ஃப்ளை பாடலை மேடையில் பாடினார் சீயான் விக்ரம்.
