தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என மாறுபட்ட படங்களை கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து.
இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகும் அவரின் 58 படத்தை இயக்கி வருகிறார்.
இதில் விக்ரமுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடிக்கிறார்.
இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறதாம்.
இந்நிலையில், இந்த படத்திற்கு ‘கோப்ரா’ என்று தலைப்பு வைத்து டைட்டில் அறிவித்துள்ளனர்.
இந்த டைட்டிலுக்கான வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Vikram 58 movie titled Cobra Title look video goes viral