அரசியல்வாதியை எதிர்க்கும் விஜய்; தளபதியின் பொலிக்கடில் மூவ்.?

அரசியல்வாதியை எதிர்க்கும் விஜய்; தளபதியின் பொலிக்கடில் மூவ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Thalapathy 62 movie will have political back dropஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 3வது முறையாக நடித்து வருகிறார் விஜய்.

விஜய்யின் 62வது படமான இதை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் சூட்டிங் ஷெட்யூல், சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலும், 2வது ஷெட்யூல் கொல்கத்தாவிலும், 3வது ஷெட்யூலை சென்னையின் சில கல்லூரிகளிலும் நடத்தினர்.

இதனை அடுத்து சில காட்சிகள் மற்றும் பாடல்களை அமெரிக்காவில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இப்படம், அரசியல் சார்ந்த பின்னணியில் உருவாகிறது. அரசியல்வாதிகளை எதிர்க்கும் கேரக்டரில் விஜய் நடிக்கிறார்.

நிஜ அரசியல்வாதியான பழ.கருப்பையா, படத்திலும் அரசியல்வாதியாகவே நடிக்கிறாராம்.

மேலும் மற்றொரு அரசியல்வாதியாக ராதாரவி நடிக்கிறார். (இவரும் நிஜ அரசியல்வாதிதானே என்கிறீர்களா..?)

இப்படம் விஜய்யின் அடுத்த கட்ட பொலிடிக்கல் மூவ்வாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Vijays Thalapathy 62 movie will have political back drop

புரூஸ்லீ பட இயக்குனர் பிரசாந்த்துக்கு திருமணம் நடைபெற்றது

புரூஸ்லீ பட இயக்குனர் பிரசாந்த்துக்கு திருமணம் நடைபெற்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bruce Lee Tamil movie director Prasanth got marriedஇயக்குநர் பாண்டிராஜிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் பிரசாந்த் பாண்டியராஜ்.

‘புரூஸ்லீ’ என்ற தமிழ் படத்தின் மூலம் இயக்குநராக சினிமாவல் அறிமுகமானார்.

ஜீ.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பந்தா, பால சரவணன், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. இதனை பிரசாந்த் பகிரங்கமாகவே அறிவித்தார்.

இந்நிலையில் பிரசாந்த் பாண்டியராஜுக்கும், சங்கீதா என்ற பெண்ணுக்கும் இன்று திருமணம் திருச்சியில் நடைபெற்றது.

திருச்சியில் உள்ள எஸ்.எம்.ஆர். மஹாலில் (பழைய அலங்கார் தியேட்டர்) இந்த திருமணம் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர்கள் காளி வெங்கட், நானும் ரௌடிதான் புகழ் ரியாஸ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

Bruce Lee Tamil movie director Prasanth got married

அல்லு-சரத்குமார்-அர்ஜுன் ஆகியோர் இணைந்த படம் தமிழிலும் வெளியாகிறது

அல்லு-சரத்குமார்-அர்ஜுன் ஆகியோர் இணைந்த படம் தமிழிலும் வெளியாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naa Peru Surya also release in Tamil with new titleதெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.

இவருக்கு தமிழகத்திலும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர். தமிழ்நாட்டை விட கேரளாவில் இவருக்கு ரசிகர்கள் பலம் அதிகம்.

மலையாள நடிகர்களுக்கு இணையாக இவரும் அங்கு உருவெடுத்து வருகிறார்.

தற்போது வம்சி இயக்கத்தில் இவர் நடித்துள்ள தெலுங்கு படம் ‘நா பேரு சூர்யா நா இல்லு இண்டியா’.

தமிழில் இப்படத்திற்கு ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இப்படத்தில் ராணுவ வீரராக அல்லு அர்ஜுன் நடித்துள்ளார்.

இதில் அனு இம்மானுவேல், சரத்குமார், அர்ஜுன், நதியா, தாகூர் அனூப்சிங், ஹரீஷ் உத்தமன், கிஷோர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

விஷால் – சேகர் இசையமைக்க, ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Naa Peru Surya also release in Tamil with new title

காதலித்தோம்; ஊர் சுற்றினோம்.. மனம் திறக்கிறார் பிக்பாஸ் ரைசா

காதலித்தோம்; ஊர் சுற்றினோம்.. மனம் திறக்கிறார் பிக்பாஸ் ரைசா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I have love experience says Bigg Boss fame Raizaகமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பரபரப்பாக பேசப்பட்ட ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைஸா இருவரும் பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

ரைசா தன் திரையுலக அனுபவம் பற்றி கூறும்போது…

“என் ஊர் பெங்களூர். பி.காம் படிச்சிருக்கேன். மாடலிங் செஞ்சுட்டு இருக்கேன்.

‘பிக்பாஸ்’ ஷோ வித்தியாசமான ஷோ. அதான் கலந்துக்கிட்டேன்.

2011 வருசத்துல மிஸ் இந்தியா போட்டியில கலந்துக்கிட்டேன்.

காலேஜ் டைம்ல லவ் பண்ணியிருக்கேன். சினிமா பார்க்குன்னு ஊர் சுத்திருக்கேன்.

ஆனால் லவ் ப்ராப்ளம். பிரிஞ்சுட்டோம்.

என் பேமிலியில் யாரும் சினிமாவில் இல்லை. பெண்கள் தைரியமானவங்க எனக்கும் அந்த தைரியம் இருக்கு.

‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் சின்ன ரோல் செஞ்சிருந்தேன்.

இப்போ ‘பியார் பிரேமா காதல்’ படத்துல நடிச்சுட்டு இருக்கேன். ரிசல்ட் பாத்த பிறகுதான் ரசிகர்கள் என்னைய எப்படி ஏத்துகிறாங்க தெரியும்.?” என்றார்.

I have love experience says Bigg Boss fame Raiza

இது ஸ்டிரைக் அல்ல; சினிமா துறையை புதுப்பிக்கிறோம்… : விஷால்

இது ஸ்டிரைக் அல்ல; சினிமா துறையை புதுப்பிக்கிறோம்… : விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Its not Cinema Strike We are renovating Industry says Producers Council President Vishalகடந்த 3 வாரங்களாக எந்தவொரு புதிய தமிழ் படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. மேலும் சினிமா சம்பந்தபட்ட நிகழ்ச்சிகள், சூட்டிங் எதுவும் நடத்தக் கூடாது என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

(சென்னையில் உள்ள தியேட்டர்களில் பழைய ஹிட்டான படங்களை திரையிட்டு ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.)

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் இந்த ஸ்டிரைக் குறித்து பேசியதாவது…

இப்போது நடக்கும் ஸ்டிரைக்கை வேலைநிறுத்தம் என்று சொல்வதை விட சினிமா துறையை புதுப்பிக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

திங்கட்கிழமை டைரக்டர்களுடன் பேச்சு நடத்த உள்ளோம். செவ்வாய்க்கிழமை கேமராமேன்களுடன் பேச்சு வார்த்தை.

அதன்பிறகு நடிகர் சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்துவோம். எங்கள் பிரச்சினைகளை தியேட்டர் அதிபர்கள் புரிந்து கொள்ளும்போது அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவோம்.

சினிமாதுறை சார்ந்த அனைத்து அமைப்புகளுடனும் பேச்சு வார்த்தை தொடரும். இது ஈகோ வினாலோ, அவசரப்பட்டோ எடுத்த முடிவு அல்ல.

இந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் படம் எடுக்கும்போது ஒரு கஷ்டம் வருகிறது. படம் ரிலீஸ் ஆகும் போது இன்னொரு கஷ்டம் இருக்கிறது. நாங்கள் கேட்பது அடிப்படை வி‌ஷயங்கள்.

டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்குங்கள் என்று சொல்லும்போது அதை அவர்கள் கண்டிப்பாக செய்தாக வேண்டும். ஒரு வண்டி வாங்குகிறோம் என்றால் 36 தவணை அல்லது 48 தவணை இருக்கும்.

48-வது தவணைக்கு பிறகு எனக்கு ஒரு தெளிவு வரும். வண்டி எனக்கு சொந்தம். 49-வது மாதம் நான் கட்டத் தேவையில்லை. ஆனால் சினிமாவில் என்னவென்றால் நாங்கள் கட்டிக் கொண்டே இருக்கிறோம். கட்டக்கூடாத கட்டணத்தை இன்னும் கட்டிக் கொண்டே இருக்கிறோம்.

இன்னொன்று, மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். பாப்கார்ன் செலவிலும், உணவு பொருட்கள் செலவிலும் விஷால் ஏன் மூக்கை நுழைக்கிறார் என்றால் நான் அதற்கு வரவில்லை.

மக்கள் சந்தோ‌ஷமாக வந்து படம் பார்க்க வேண்டும். அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அது ரொம்ப ஆடம்பரமான வி‌ஷயமாக தெரியும்போது அதை எப்படி முறைப்படுத்தி அவர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் முயற்சி.

இதுதொடர்பாக நிறைய வி‌ஷயங்களை நாங்கள் பேசுகிறோம். ஆன்லைன் முன்பதிவுக்கு 1 டிக்கெட்டுக்கு கூடுதலாக 30 ரூபாய் வசூலிக்கிறார்கள். நான் குடும்பத்துடன் படம் பார்க்க செல்லும்போது 1 டிக்கெட்டுக்கு 30 ரூபாய் கூடுதல் என்பது எனக்கு அதிகமாக தெரிகிறது.

அதைத்தான் சொல்கிறோம். ஏன் 30 ரூபாய் போடுகிறீர்கள், 5 ரூபாய் போடுங்கள். 25 ரூபாயை சலுகையாக கொடுங்கள். அவர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள். இதைத்தான் நாங்கள் விண்ணப்பமாக வைக்கிறோம். இது அவர்களுடன் சண்டை போடுவதற்காக அல்ல.

ஏனென்றால் தயாரிப்பாளர்களால் முடியாது. இதையெல்லாம் செய்யும் போதுதான் மக்கள் படம் பார்க்க வருவார்கள். இதுபோல கிடைக்கும் சேமிப்பை தயாரிப்பாளர் இன்னொரு படம் எடுக்கத்தான் பயன்படுத்துவார்.

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக நாம்தான் 2 முறை வரி செலுத்துகிறோம்.

அதை 30 சதவீதத்தில் இருந்து 8 சதவீதத்துக்கு கொண்டு வந்தார்கள். அதுவே இப்போது எங்களால் முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.

ஜி.எஸ்.டி. உள்பட அனைத்து வரிகளையும் மக்கள் மீது திணிக்கும்போது டிக்கெட் விலை அதிகரிக்கிறது. அது பெரிய படங்களுக்கு தாங்குகிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்கு தாங்கவில்லை.

டிக்கெட் விற்பனை கம்ப்யூட்டர் மயமானால்தான் எத்தனைபேர் பார்த்துள்ளனர். என்பது எனக்கு தெரியவரும். தியேட்டர் அதிபர்கள் அந்த கணக்கை கொடுத்தால்தான் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க முடியும்.

இது ஈகோ சண்டை அல்ல. எங்களால் முடியவில்லை. இதை சரி கட்டிய பிறகுதான் தயாரிப்பாளர்கள் மேற்கொண்டு படம் எடுப்பதிலோ, வெளியிடுவதிலோ நல்ல சூழ்நிலை ஏற்படும் என்று நம்புகிறேன்.” இவ்வாறு விஷால் பேசினார்.

Its not Cinema Strike We are renovating Industry says Producers Council President Vishal

ப்ரிதிவிராஜின் ரணம் படத்தில் தாமோதர் கேரக்டரில் ரஹ்மான்

ப்ரிதிவிராஜின் ரணம் படத்தில் தாமோதர் கேரக்டரில் ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Rahman Heavy Downpour Of Praises For Damodar’s Law Of Survivalநடிகர் ரஹ்மான் தன்னுடைய தன்னிகரற்ற நடிப்புக்கு பெயர்போனவர். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

முக்கியமாக அவர் கதாநாயகனாக நடித்த “ துருவங்கள் பதினாறு “ திரைப்படம் தமிழ், மலையாளம் என நல்ல வெற்றியை பெற்றது. தற்போது அவர் நடிகர் ப்ரிதிவிராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள “ ரணம் “ திரைப்படத்தில் நடித்துள்ளார். ப்ரிதிவிராஜும், ரஹ்மானும் நடித்துள்ள இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

ரணம் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்று யூடியுப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் Trending – ஆனது குறிப்பிடத்தக்கது.

ரணம் திரைப்படத்தில் ரஹ்மான் தாமோதர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரணம் திரைப்படத்திலிருந்து ரஹ்மான் நடிப்பில் “ தாமோதரின் Law of Survival “ என்ற டீசர் தமிழில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது.

ரஹ்மான் மிகவும் ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் தோன்றி தனது கதாபாத்திரத்தை பற்றி கூறுவது இந்த டீசர் அமைந்துள்ளது.

இஷா தல்வார் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை நிர்மல் சஹாதேவ் இயக்கியுள்ளார்.

Actor Rahman Heavy Downpour Of Praises For Damodar’s Law Of Survival

More Articles
Follows