BREAKING தள்ளிப் போகும் ‘வாரிசு’ ரிலீஸ்.; அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தில்ராஜு

BREAKING தள்ளிப் போகும் ‘வாரிசு’ ரிலீஸ்.; அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தில்ராஜு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மட்டும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

தெலுங்கில் வரசுடு (Varasudu) என்ற பெயரில் இந்த படம் வெளியாகிறது.

தமிழில் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தெலுங்கு பதிப்பிற்கான பிரஸ்மீட் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் தில்ராஜ் பேசும்போது..

” தமிழில் சொன்ன தேதியில் 11ஆம் தேதி வெளியாகும் வாரிசு.

ஆனால் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு தள்ளிப் போகிறது. ஜனவரி 14ஆம் தேதி தெலுங்கு பதிப்பு வெளியாகும்.

எங்கள் தெலுங்கு நட்சத்திரங்கள் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மரெட்டி & சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா ஆகிய இரண்டு படங்கள் ஜனவரி 12 & 13 தேதிகளில் வெளியாகிறது.
எனவே ‘வரசுடு’ ரிலீஸ் தள்ளிப்போகிறது” என அறிவித்தார் தில்ராஜூ.

Vijays Telugu Version Varasudu movie Postponed… Tamil Version Release as per Schedule on 11th January.

We want the audience to watch our Telugu star hero films, Veera Simha Reddy & Waltair Veerayya in theatres first, that is why releasing Vaarasudu in theatres on 14th Jan – #DilRaju at #Vaarasudu Press Meet..

கேஜிஎஃப் 3 இல் யாஷுக்கு பதிலாக இவரா?

கேஜிஎஃப் 3 இல் யாஷுக்கு பதிலாக இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KGF: அத்தியாயம் 3, 2025 இல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது .

ஏனெனில் இயக்குனர் பிரஷாந்த் நீல் பிரபாஸ் உடன் சலார் படத்தில் பணியாற்றி வருகிறார்.

ஐந்தாவது பார்ட் தாண்டி KGF படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

ஐந்தாவது பார்ட்க்குப் பிறகு ஹீரோ யாஷ் மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5வது பாகத்திற்குப் பிறகு, ஜேம்ஸ்பாண்ட் படங்களை போல் ஹீரோக்கள் மாறிக்கொண்டேஇருப்பார்கள் என்றும் கேஜிஎஃப் இல் இன்னொரு ஹீரோ ராக்கி பாயை காணலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Will Yash be replaced in KGF 3?

பெண்களும் சபரிமலைக்கு செல்ல வேண்டும் – இசையமைப்பாளர் தீனா

பெண்களும் சபரிமலைக்கு செல்ல வேண்டும் – இசையமைப்பாளர் தீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா தேசிங்கு இயக்கியுள்ள ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தீனா பேசுகையில்..

“படத்தின் இசையமைப்பாளார் பாபு ஆனந்த், எங்களது சங்க உறுப்பினர், அவருக்கு என் வாழ்த்துகள். படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள். பக்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக பாபு ஆனந்த் அறிமுகமாவது அவருடைய அதிர்ஷ்ட்டம் என்று தான் சொல்வேன்.

என் படத்திலும் ஒரு பக்தி பாடல் இடம்பெற்றது. ஆம், விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் வரும் “கும்பிட போன தெய்வம்…” என்ற பாடல் தான். அந்த பாடல் ஏராளமான கோவில்களில் ஒலித்தது.

ஆடி மாதம் வந்துவிட்டால், அந்த பாடல் ஒலிக்காத கோவிலே இருக்க முடியாது, அப்படி ஒரு வெற்றி பாடலாக அமைந்ததோடு, நானும் அந்த பாடல் மூலம் பிரபலமடைந்தேன்.

ஒரு பக்தி பாடலுக்கே நான் பெரிய உயரத்தை தொட்டேன் என்றால், பக்தி படத்திற்கே பாபு ஆனந்த் இசையமைத்திருப்பதால் அவர் நிச்சயம் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வா, ஐயப்பன் அருளால் அவர் பிரபலமடைவார்.

இயக்குநர் ராஜாதேசிங்கு மிக சிறப்பாக நடித்திருக்கிறார். மலைக்கு செல்பவர்கள் கடின பாதையில் நடந்து செல்லும் போது அவர்கள் உடம்பில் ஏற்படும் சோர்வு, அதை தவிர்க்க அவர்களின் உற்சாக ஆட்டம் என்று அனைத்தையும் மிக இயல்பாக செய்திருக்கிறார்.

நானும் ஒரு முறை சபரிமலைக்கு சென்றிருக்கிறேன், அந்த அனுபவத்தில் தான் செல்கிறேன், ராஜாதேசிங்கின் நடிப்பு இயல்பாக இருந்தது. நாயகன் உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் டிரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. அதிலும், டிரைலர் முடியும் போது “பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்று எவண்டா சொன்னது?” என்ற கேள்வி கேட்கப்படுகிறது. பெண்கள் செல்வது சரியா? அல்லது தவறா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், என் தனிப்பட்ட கருத்து பெண்களும் சபரி மலைக்கு செல்ல வேண்டும் என்பது தான்.” என்றார்.

All Ladies must visit Sabarimala says Music Director Dhina

நிறைய விழாக்களுக்கு வந்தாலும் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ இசை நிகழ்ச்சியே நிறைவு – கே. ராஜன்

நிறைய விழாக்களுக்கு வந்தாலும் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ இசை நிகழ்ச்சியே நிறைவு – கே. ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ வெற்றிவேல் ஃபிலிம் அகாடமி சார்பில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து கூட்டு முயற்சியாக தயாரித்திருக்கும் படம் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’.

33 வருடங்களுக்கு பிறகு வெளியாக இருக்கும் ஐயப்ப பக்தி படமான இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை மற்றும் இயக்கம் என 6 முக்கிய பொறுப்புகளை இயக்குனர் ராஜா தேசிங்கு கையாண்டுள்ளார்.

இதில் நாயகனாக விஜயபிரசாத் நடிக்க, நாயகியாக பூஜா நாகர் நடித்திருக்கிறார். இயக்குநர் ராஜாதேசிங்கு மிக முக்கியமான வேடத்தில் நடிக்க, இவர்களுடன் கஞ்சா கருப்பு, சோனா, சாம்ஸ், முத்துக்காளை, ராஜேந்திரநாத், வடிவேல் கணேஷ், உடுமலை ரவி, மங்கி ரவி, போண்டா மணி, இந்தியன், ராஜாசாமி, விஷ்வகாந்த், சுமதி, சின்னாளப்பட்டி சுகி, லதா, சுவேதா என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் மகாதேவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பாபு அரவிந்த் இசையமைத்துள்ளார். எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்ய, சஞ்சிவ் கண்ணா நடனக் காட்சிகளையும், சரவெடி சரவணன் சண்டைக் காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினா, இயக்குநர் பேரரசு, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன், பார்மெட் நியூமராலஜி மகாதன் சேகர் ராஜா, துரை சங்கர், பாடகர் எஸ்.என்.சுரேந்தர், துரை கண்ணன், ஏ.கே.நாகேஸ்வர ராவ், வினோத் சங்கர், நடிகர்கள் முத்துக்காளை, சாம்ஸ், போண்டா மணி, பக்தி பாடகர் வீரமணிதாசன், முத்து சிற்பி உள்ளிட்ட பலதுறைகளின் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கே.ராஜன் பேசுகையில்…

“இந்த இந்த இடத்தில் பல இசை வெளியீட்டு விழாக்கள் நடத்திருக்கின்றன. நானும் பல விழாக்களில் கலந்துக்கொண்டு வருகிறேன். ஆனால், ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது எனக்கு மன நிறைவையும், மன மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறார்.

மிக சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஐயப்ப வேடமிட்டிருக்கும் சிறுவர்களை பார்க்கும் போது மனது நிறைவாக இருக்கிறது.

நான் இப்போது மருத்துவமனையில் இருக்க வேண்டியவன், எனக்கு இரண்டு நாட்களில் அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. ஆனால், அங்கு போகாமல் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு காரணம், ஐயப்பனின் அருளை பெறுவதற்காக தான்.

இந்த படத்தின் மூலம் ஐயப்பன் அருளை பெற்றுக்கொண்டு செல்லவே இங்கு வந்தேன். நிச்சயம் இந்த படம் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்களுக்கு மட்டும் இன்றி, ரசிகர்கள் அனைவருக்கும் ஐயப்பன் அருளை வழங்கும். இந்த படத்தை அனைவரும் பார்த்து கொண்டாட வேண்டும்.” என்றார்.

I am fully satisfied at Sri Sabari Ayyappan event says K Rajan

தனுஷ் படத்தைத் தொடர்ந்து; இயக்குநர் மித்ரன் ஜவஹரின் அடுத்த படத்தின் அப்டேட்…

தனுஷ் படத்தைத் தொடர்ந்து; இயக்குநர் மித்ரன் ஜவஹரின் அடுத்த படத்தின் அப்டேட்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘திருச்சித்திரமபலம்’.

இப்படம் திரையரங்குகளில் நல்ல வசூலைப் பெற்றது மற்றும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

‘திருச்சிற்றம்பலம்’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் தற்போது தனது படத்தின் அடுத்த ஸ்கிரிப்டை உருவாக்கும் பணியை தொடங்கியுள்ளார். ஓரிரு நாட்களில் இயக்குனரின் அடுத்த கதை பற்றிய வதந்திகள் பரவின.

இந்நிலையில், ஜனவரி 7 ஆம் தேதி இயக்குனர் மித்ரன் ஜவஹர் தனது ட்விட்டரில் தமிழில் எழுதினார், “திருச்சிற்றம்பலத்திற்குப் பிறகு, எனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகின்றன. தற்போது வேறு எந்த படத்திலும் நான் நடிக்கவில்லை. எனது அடுத்த திட்டம் குறித்து என் பெயரில் வரும் வதந்திகள் அல்லது செய்திகளை நம்புவதைத் தவிர்க்கவும். எனது எதிர்கால திரைப்பட திட்டம் குறித்து விரைவில் ட்விட்டரில் அப்டேட் செய்வேன் என கூறி இருந்தார்.

Director Mithran Jawahar next movie update

‘சூர்யா 42’ படத்தின் தலைப்பு குறித்து புதிய அப்டேட்..!

‘சூர்யா 42’ படத்தின் தலைப்பு குறித்து புதிய அப்டேட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ என்ற தற்காலிகப் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தப் படத்தில் சூர்யா மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், இப்படம் 10 மொழிகளில் வெளியாகும் என்றும் இரண்டு பாகங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ‘வீர்’ என்று தலைப்பு வைக்கப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், படத்தின் தலைப்பு குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

‘Suriya 42’ of New update on the title

More Articles
Follows