சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் தளபதி விஜய்யின் போட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவர் இளைய தளபதி விஜய்.

இவர் நடித்து அண்மையில் வெளியான மெர்சல் படம் இந்தியளவில் பிரபலமானது.

இப்படம் உலகளவில் ரூ.250 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்தில் ஒரு காட்சியில் மருத்துவ துறையில் படைத்த சாதனைக்காக விருது பெற வெளிநாடு செல்வார்.

அப்போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டியில் தோன்றுவார்.

இந்நிலையில் இதே உடையை போல அவரது வேலாயுதம் புகைப்படம் சிபிஎஸ்இ 3வது வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை என்ற ஒரு பாடத்தில் இந்த போட்டோ இடம் பெற்றுள்ளது.

கமல் வழியில் மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்திய சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த நவம்பர் 7ஆம் தேதி தன் பிறந்தநாள் விழாவில் மையம் விசில் என்ற மொபைல் ஆப்பை கமல் அறிமுகப்படுத்தினார்.

தற்போது நடிகர் சரத்குமாரும் மொபைல் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

இது அனைத்து தரப்பு மக்களுடனும் நேரடியாக தொடர்புகொள்ள உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செயலிக்கு ஏஎஸ்கே என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த செயலியை செல்போனில் நீங்கள் டவுன்லோன் செய்தால், இதன் மூலம், சரத்குமாருடன் நேரடியாக கருத்துக்களை பறிமாறிக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலி வெளியீட்டு விழாவில் சரத்குமார், ராதிகா சரத்குமார்,வரலட்சுமி, ராதிகா மகள் ரெய்னே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பலருக்கும் பசியாற்ற உதவியாக கஞ்சா கருப்பு பரிசளித்த ஆட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல உதவிகளை செய்து வருபவர்.

அப்படித்தான் சமீபத்தில் தனது நண்பரும் கவிஞரும், ‘கவிஞர் கிச்சன்’ என்கிற ஹோட்டல் நடத்தி வருபவருமான ஜெயங்கொண்டானின் உணவகத்துக்கு, ஒரு ‘ஆட்டோ’வை அன்பளிப்பாக அளித்துள்ளார்.

அதன் பின்னணியில் நெகிழ்வான ஒரு காரணமும் உண்டு.

திருட்டு விசிடியில் படம் பார்க்காமல், காசுகொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு பில் தொகையில் 10ரூ சலுகை, உதவி இயக்குனர்களுக்கு பாதிவிலையில் சாப்பாடு, வெளியூரில் இருந்து சினிமாவே கதியென தஞ்சம் பிழைக்க வந்து கையில் காசில்லாமல் வருவோருக்கு கூட பல சமயங்களில் இலவச சாப்பாடு என சேவை மனப்பான்மை கலந்து இந்த கவிஞர் கிச்சன் செயல்பட்டு வருகிறது.

இந்த ஹோட்டலுக்கு தேவையான காய்கறிகளை தினசரி கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வருவதற்காக வாடகை வாகனத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இதற்கு தன்னால் முடிந்த ஒரு உதவியை செய்யவேண்டும் என நினைத்த நடிகர் கஞ்சா கருப்பு, இந்த ஹோட்டலுக்காக சொந்தமாகவே ஒரு ‘ஆட்டோ’ வாங்கி அன்பளிப்பாக தந்துள்ளார். இனி மிச்சமாகும் அந்த வாடகைப்பணம் இன்னும் பலரின் பசியாற்ற உதவும் அல்லவா..?

கஞ்சா கருப்புவின் இந்த நல்ல மனசுக்கு ஏற்றபடி அவரது சினிமா கேரியரும் மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

ஆம்.. தற்போது ‘சிலந்தி’ ஆதிராஜன் இயக்கிவரும் ‘அருவா சண்டை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் கஞ்சா கருப்பு. 7 மணி படப்பிடிப்புக்கு 6 மணிக்கே தயாராக வந்து நின்ற கஞ்சா கருப்புவின் பங்சுவாலிட்டியை பார்த்து யூனிட்டே மிரண்டதாம்.. இந்தப்படத்தில் இவரது நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது என படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர்.

இதுதவிர தற்போது லிங்குசாமி-விஷால் கூட்டணியில் உருவாகி வரும் ‘சண்டகோழி-2’ படத்தின் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 20 நாட்களாக கலந்துகொண்டு நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு.

மேலும் தனது நடிப்பில், வரும் டிச-15ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘பள்ளிப்பருவத்திலே’ படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறார் கஞ்சா கருப்பு.

ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மொபைல் ஆப் வெளியிட ரஜினி திட்டம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இன்று தன் ரசிகர்களை சந்திப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் இன்று சென்னையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் விரைவில் அவர் ரசிகர்களை சந்திக்கவுள்ளார். அப்போது கடந்த முறை போல ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

அச்சமயம் தன்னையும் பொதுமக்களையும் நேரடியாக இணைக்கும் ஒரு செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளாராம்.

அந்த மொபைல் ஆப் மூலம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர் நேரிடை தொடர்பில் இருப்பார் என கூறப்படுகிறது.

மேலும் இது ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கான ஆரம்பப் பணி என தகவல்கள் வந்துள்ளன.

பாதியில் நின்ற சூட்டிங்கை ரஜினி பிறந்தநாளில் தொடங்கினார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கினார் கௌதம்மேனன்.

இப்படம் முடிவதற்குள் தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்க ஆரம்பித்தார்.

இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

இப்படம் முடிவதற்குள் சில பிரச்சினைகள் எழ, விக்ரம் நடிக்க துருவ நட்சத்திரம் என்ற படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார்.

அதற்குள் தனுஷ், வடசென்னை படத்திற்காக தாடி வளர்க்க சென்றுவிட்டார்.

இதனால் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்காக மீசையில்லாத தனுஷ் வேண்டும் என காத்திருந்தார் கௌதம்.

இப்போது தனுஷ் பக்கா ஷேவிங் செய்துவிட்டு சக்க போடு போடு ராஜா பட இசை விழாவில் சிம்பு உடன் கலந்துக் கொண்டார்.

இனி இந்த சான்ஸை மிஸ் செய்யக்கூடாது என மீண்டும் விக்ரமை டீலில் விட்டுவிட்டு தனுஷை இயக்க வந்துவிட்டார் கௌதம்மேனன்.

இந்நிலையில் இன்று (ரஜினி பிறந்தநாள் 12.12.2017) சென்னை ஓஎம்ஆரில் இன்று இந்த சூட்டிங் தொடங்கியுள்ளது.

இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார் என கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியை வாழ்த்த வந்த ரசிகர்கள் ஏமாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியா முழுவதும் ரஜினிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் ரஜினியை பார்க்க நாள் முழுவதும் காத்திருப்பது வழக்கம்.

அதுவும் ரஜினியின் பிறந்தநாள் வந்தால், அன்று தலைவரின் தரிசனம் கிடைப்பது தாங்கள் செய்த பாக்கியம் என்பர்.

இன்று ரஜினி தன் 67வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே, அவரை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்திக்க வேண்டும் என திரண்டுள்ளனர்.

இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆனால் ரசிகர்களின் சந்திப்பை தவிர்க்க இன்று ரஜினிகாந்த் பெங்களுர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

எனவே ரஜினியை சந்திக்கவும் வாழ்த்தவும் முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

More Articles
Follows