தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அப்போது வருமான வரித்துறையினர் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர்.
மேலும் விசாரணைக்காக நெய்வேலியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டார் விஜய்.
இது வழக்கமான சோதனை தான் என்றாலு இது அரசியல் விவகாரமாக பார்க்கப்பட்டது.
வருமான வரித்துறை சோதனைக்குப் பின்னர் படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் வந்த போது அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
எனவே அருகேயிருந்த வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் தளபதி.
அதை தன் ட்விட்டரிலும் பகிரவே பல பிரபலங்கள் அதை ரீட்வீட் செய்தனர்.
இந்த நிலையில் இந்தியாவில் அதிகம் பேரால் ரீட்வீட் செய்யப்பட்ட செல்ஃபி என்ற சாதனையை விஜய்யின் செல்ஃபி பெற்றுள்ளதாம்.
இதற்கு முன்பு பாலிவுட் ஷாரூக்கானின் ட்விட்டர் பதிவுதான் முதலிடத்தில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தளபதி ரசிகர்கள் #INDIAsMostRTedVIJAYSelfie என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Vijays neyveli selfie creates records
