ரஜினியின் இரண்டு சாதனைகளை அடித்து நொறுக்கிய விஜய்

ரஜினியின் இரண்டு சாதனைகளை அடித்து நொறுக்கிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vijayசூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸ் இந்தியா அறிந்த ஒன்றுதான்.

அவரது படங்கள் படைக்கும் வசூல் சாதனைகளை அவ்வளவு எளிதாக யாராலும் முறியடித்து விடமுடியாது.

ஆனால் அண்மையில் கபாலி பட டீசர் படைத்த சாதனையை விஜய்யின் மெர்சல் டீசர் முறியடித்த்து.

அதாவது… கபாலி டீசர் இதுவரை 34,582,207 பார்வைகளைப் பெற்றிருந்தது. மெர்சல் டீசர் 34,605,562 பார்வையாளர்களை பெற்று முறியடித்துவிட்டது.

தற்போது மற்றொரு சாதனையையும் மெர்சல் நிகழ்த்தியுள்ளது.

இது வரை யு-டியூபில் தமிழ் படங்களில் Lyrics வரிகள் வீடியோவில் கபாலியின் நெருப்புடா பாடல் தான் 30 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு முதலிடத்தில் இருந்தது.

தற்போது மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் Lyrics வரிகள் கொண்ட வீடியோ 33 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சாதனை நிகழ்த்தியுள்ளது.

Vijays Mersal movie beat Rajinis Kabali movie two records

நட்சத்திர கலை விழாவில் அஜித்; கொள்கையை மாற்றி விட்டாரா தல.?

நட்சத்திர கலை விழாவில் அஜித்; கொள்கையை மாற்றி விட்டாரா தல.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith may participate in Nadigar Sangam function at Malaysia 2018அடுத்த வருடம் 2018 ஜனவரி மாதம் மலேசியா நாட்டில் நடிகர் சங்கம் சார்பில் ஒரு பிரமாண்ட கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளனர் என்பதை பார்த்தோம்.

அத்துடன் கிரிக்கெட் மற்றும் புட்பால் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட உள்ளதாக நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட சீனியர் கலைஞர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் பெரும்பாலும் பொது நிகழ்ச்சி மற்றும் தன் பட நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளாத அஜித் இதில் கலந்துக் கொள்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் இம்முறை சீக்கிரம் சொல்றேன் என பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே அஜித் கலந்துக் கொள்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது கொள்கையை மாற்றிவிட்டாரா அஜித்? என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கப்படுகின்றன.

Ajith may participate in Nadigar Sangam function at Malaysia 2018

தீரன் சூட்டிங் முடித்து 15 முறை பேஸ்வாஷ் செய்த அபிமன்யுசிங்

தீரன் சூட்டிங் முடித்து 15 முறை பேஸ்வாஷ் செய்த அபிமன்யுசிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theeran movie villainதீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஓமா என்ற ஓம்கார் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்தார் அபிமன்யு சிங்.

இவர் வரும் காட்சியில் எல்லாம் திரையரங்கே இவரை பார்த்து நடுங்கியது என்பது தான் உண்மை.

தீரன் படம் பற்றி வில்லன் அபிமன்யு சிங் தன் பேட்யில் கூறியுள்ளதாவது…

நடிகர் கார்த்தியை பற்றி பேசும் போது…

கார்த்தி மிகசிறந்த மனிதர். அவர் எப்போதும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக தெளிவாகவும், முழு கவனத்தோடும் செய்யக்கூடியவர். காட்சிக்கு காட்சி தன்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்றிக்கொண்டே இருப்பார்.

அது சரியாக வரும் வரை தொடர்ந்து வேலை செய்துக்கொண்டே இருப்பார். தன்னுடைய பங்களிப்பால் ஒட்டுமொத்த காட்சியும் சிறப்பாக வரவேண்டும் என்று சிரத்தை எடுத்து வேலை செய்வார். கார்த்தி கண்ணியமானவர், கடின உழைப்பாளி அதே சமயம் அனைவரிடமும் எளிமையாக பழகுபவர்.

இயக்குநர் வினோத் பற்றி பேசும்போது…

இயக்குநர் வினோத் தன்னுடைய நடிகர்களை அதிகம் நேசிப்பார். எப்போதும் எதையும் அமைதியாக கையாளுவார். இயக்குநர் வினோத் எப்போதும் மிக சிறந்த வேலையை எதிர்பார்ப்பார்.

காட்சிகள் சிறப்பாக வரும் வரை கடுமையாக உழைப்பார். அதிக கவனம், தூய்மையான மனம் போன்றவை எனக்கு வினோத்திடம் மிகவும் பிடித்தவை.

படபிடிப்பு தளத்தில் நடந்த மறக்கமுடியாத கடினமான நிமிடங்களை பற்றி கூறும்போது…

நாங்கள் வெயில் மற்றும் குளிர் அதிகமாக இருக்கும் கால நிலையில் படபிடிப்பு நடத்தவேண்டி இருந்தது. சூட்டிங் முடிந்து ஒரு நாளைக்கு 15 முறை என் முகத்தை கழுவ வேண்டும்.

அங்கே அவ்வளவு தூசி படலம் இருக்கும். இப்போது படத்தின் வெற்றி எல்லா கஷ்டங்களையும் மறக்கடித்துள்ளது” என்றார் அபிமன்யு சிங்.

I used to do face wash 15 times while shooting Theeran says Abimanyu Singh

நாச்சியார் டீசரில் ஜோதிகா பேசிய கேவலமான வார்த்தை படைக்கும் சாதனை

நாச்சியார் டீசரில் ஜோதிகா பேசிய கேவலமான வார்த்தை படைக்கும் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Balas Naachiyar teaser making records in youtubeஇயக்குனர் பாலா படங்கள் என்றாலே அது நிச்சயம் ஒருவிதமான பரபரப்பை ஏற்படுத்தும்.

இதற்கு உதாரணமாக அவரது பல படங்களை சொல்லலாம்.

அண்மையில் வெளியான நாச்சியார் பட டீசரும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இந்த டீசரில் போலீஸ் அதிகாரியான ஜோதிகா பேசிய தே…. பயலே என்ற வார்த்தையே பல சர்ச்சைகளை உண்டாக்கியது.

இதற்கு மாதம் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்த எதிர்ப்பே இந்த டீசருக்கு விளம்பரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 15ஆம் தேதி இந்த டீசர் வெளியான நிலையில் தற்போது வரை இந்த டீசரை 40 லட்சம் (4மில்லியன்) பார்வையாளர்களை பெற்று, சாதனை படைத்து வருகிறது.

இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் நாயகனாக நடிக்கும் ஜிவி. பிரகாஷ் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Balas Naachiyar teaser making records in You tube

ட்விட்டர் கருத்துக்கு கோனார் உரை தேவை; கமலை கலாய்க்கும் தமிழிசை.?

ட்விட்டர் கருத்துக்கு கோனார் உரை தேவை; கமலை கலாய்க்கும் தமிழிசை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I want guide to understand Kamals tweet messages says Tamilisai Soundararajanகடந்த 2015ஆம் ஆண்டில்தான் கமல்ஹாசன் ட்விட்டரில் இணைந்தார்.

தற்போது 2017ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இவர் 31 லட்சம் பாலோயர்களை பெற்றுவிட்டார்.

இதற்கு முக்கிய காரணம் இவரது சர்ச்சைக்குரிய ட்விட்டர் கருத்துக்களே.

அதிரடி அரசியல் கருத்துக்களையும், சமூகம் சார்ந்த தன் சிந்தனைகளையும் பதிவிட்டு வருகிறார்.

ஆனால் இவரது அழகிய தமிழ் பலருக்கும் புரிவதில்லை.

இந்நிலையில் “கமலின் ட்விட்டர் கருத்துக்கள் புரியவில்லை. அதனை புரிந்துக் கொள்ள கோனார் உரை தேவைப்படுகிறது.’ என கமலை கலாய்க்கும் வகையில் பாஜக. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

I want guide to understand Kamals tweet messages says Tamilisai Soundararajan

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திற்கும் பார்ட் 2 வருகிறதாம்

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திற்கும் பார்ட் 2 வருகிறதாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Menon says Dhruva Natchathiram will have its sequelதமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே பார்ட் 1 மற்றும் பார்ட் 2 என தொடர்ச்சி படங்கள் வெளியாகிறது.

லாரன்ஸின் காஞ்சனா, சூர்யாவின் சிங்கம் ஆகிய படங்களின் தொடர்ச்சி வெளியானது.

விரைவில் ரஜினியின் எந்திரன், கமலின் விஸ்வரூபம் ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.

இவர்களைத் தொடர்ந்து விக்ரமின் சாமி படத்தின் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் தயாராகி வருகிறது.

தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரீது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஸ், டிடி, ராதிகா உள்ளிட்ட பலரும் துருவ நட்சத்திரம் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவரும், அப்படி ஒரு எதிர்பார்ப்பை பார்ட் 1 உருவாக்கும் என ஒரு பேட்டியில் இயக்குனர் தெரிவித்துள்ளாராம்.

Gautham Menon says Dhruva Natchathiram will have its sequel

More Articles
Follows