ரஜினிக்கே கிடைக்கல; விஜய்க்கு கிடைச்சிடுச்சி… மெர்சல் மெகா சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று சொன்னால் அது மிகையாது.

இவர் நடித்த கபாலி படத்தின் விளம்பரங்கள் இந்திய சினிமாவையே வியக்கவைத்தது.

பல தனியார் நிறுவனங்கள் இப்படத்தின் ரிலீஸ் அன்று விடுமுறையே அளித்தன.

இதற்கு எழுந்த உச்சக்கட்ட எதிர்பார்ப்பினால் ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப்பில் கபாலி ரஜினி எமோஜி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இறுதியில் அது நிறைவேறாமல் போனது.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முதன்முறையாக விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு ட்விட்டர் எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது.

நீங்கள் #Mersal என்று டைப் செய்தாலே அத்துடன் விஜய் படம் ஒட்டிக்கொள்ளும்.

இது தமிழ் சினிமாவிற்கு இந்தியளவில் கிடைத்த பெருமையாக கூறலாம்.

இதற்கு முன்பு சல்மான் கானின் ‘டியூப்லைட்’ படத்திற்கும், ஷாருக்கானின் ‘ஜப் ஹாரி மெட் சேகல்’ படத்திற்கும் இதுபோன்ற எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijays Mersal gets Twitter emoji Its first for a Tamil film

கடவுளின் தேசத்தையே அதிர வைத்த சன்னிலியோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் உள்ள எம்ஜி சாலையில், புதிய மொபைல் கடை திறப்பு விழாவுக்காக பாலிவுட் நடிகை சன்னி லியோன் வந்திருந்தார்.

அவரைக் காண ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அதிகாலை முதலே அந்த கடை இருக்கும் பகுதியில் திரண்டனர்.

இதனால் அந்த பகுதியே மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.

கட்டிடங்கள், பேருந்துகள், மெட்ரோ ரயில் தூண்களின் மீதும் ஏறி சன்னி லியோனை காண ரசிகர்கள் காத்திருந்தனர்.

சன்னி லியோன் மேடை ஏறிய பேசத் தொடங்கியதும் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தன.

இந்த ஆரவாரத்தை பற்றி சன்னி லியோன் கூறியதாவது… ”கடவுளின் சொந்தப் பிரதேசமான கேரளத்தை நிச்சயம் மறக்க மாட்டேன்.

ரசிகர்களாகிய உங்களின் அன்பு மற்றும் ஆதரவால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

ஆனால் அங்கு கூடியிருந்த கூட்டத்தையும், வாகன நெரிசலையும் சமாளிக்க முடியாமல் திணறிய போலீசார் அந்த மொபைல் கடை நிர்வாகத்தின் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Sunny Leone gets resounding welcome in Gods Own country Kerala

பிக்பாஸ் முதல் ஹேர்கட் வரை..; ஓவியா வெளியிட்ட முதல் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் ஓவியா.

எவரும் எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி மூலம் பெற்றார்.

ஓவியா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது முதல் பல ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.

இதனால் டிஆர்பியில் இறங்கிய அந்த நிகழ்ச்சி பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டது முதல் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள், பின்னர் வெளியேறியது, முடி வெட்டியது என அனைத்தையும் ஓபனாக மனம் திறந்து வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார்.

Oviya open talks about Bigg Boss  and her Hair cut look

இதோ அந்த வீடியோ….

களரி படத்திற்காக மீண்டும் ஹீரோ ரூட்டில் கிருஷ்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கழுகு, யட்சன், பண்டிகை உள்ளிட்ட பல படங்களில் தனி ஹீரோவாக நடித்த கிருஷ்ணா, முதன்முறையாக அர்ஜீனின் நிபுணன் படத்தில் வில்லனாக நடித்தார்.

தற்போது மீண்டும் ஹீரோ ரூட்டில் பயணிக்க தொடங்கிவிட்டார்.

இவர் நடிப்பில் அடுத்து உருவாகிவரும் படம் களரி.

நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரித்திருக்கும் படம் ‘களரி’.

இதில் கிருஷ்ணாவுடன் வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன், எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன், விஷ்ணு, கிருஷ்ணதேவா, மீரா கிருஷ்ணன், அஞ்சலி தேவி, ரியாஸ் தோஹா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார் கிரண் சந்த்.

ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, பிரபாகர் படத்தை தொகுக்கிறார். பிரபல பின்னணி பாடகராக இருக்கும் வி வி பிரசன்னா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

கவிஞர் முத்துவிஜயன், கவிஞர் வைரபாரதி, கவிஞர் ப்ரானேஷ், கவிஞர் தினேஷ் ஆகியோர்கள் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். நந்தன் கலை இயக்கத்தை கவனிக்க, சண்டை பயிற்சியை ஸ்டன்னர் ஷாம் மேற்கொள்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் கிரண் சந்த் கூறியதாவது…

‘களரி என்றால் தற்காப்பு கலை என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் களரி என்றால் போர்களம் என்பது தான் பொருள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு போர்களம் தான். அதை மையப்படுத்தி தான் இந்த டைட்டில் இருக்கிறது.

கொச்சி மாநகரத்தில் வாத்துருத்தி என்ற ஒரு பகுதி இருக்கிறது. இது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. இப்பகுதியை கதைக்களமாக கொண்டு தான் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நடிகர் கிருஷ்ணா இதில் ஒரு சராசரி இளைஞர் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இவருக்கும், இவருடைய தந்தைக்கும் இடையே தலைமுறை இடைவெளியால் ஏற்படும் சிக்கல்களும், அதைத் தொடர்ந்து நடைபெறும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தான் படத்தின் கதை.” என்றார்.

பாமக ராமதாஸின் பேரன் குணாநிதியும் சினிமாவுக்கு வந்துட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டாக்டர் ராமதாஸ் அவர்களின் பேரன் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸின் ஒன்று விட்ட சகோதரனுமான (cousin) குணாநிதி, ‘A Stroke Of Dissonance’ என்ற முப்பது நிமிட குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார்.

இதன் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதிக்க உள்ளார். பல சர்வதேச திரை விழாக்களில் இக்குறும்படம் பங்கேற்கவுள்ளது.

இது குறித்து குணாநிதி பேசுகையில், ” சிறு வயதிலிருந்தே நடிப்பு பயிற்சி பட்டறைகளில் பங்கேற்றுள்ளேன். நடிப்பில் எனக்கு என்றுமே பேரார்வம் இருந்துள்ளது.

‘Theatre lad’ சார்பில் நிறைய மேடை நாடகங்கள் மற்றும் வீதி நாடகங்களில் நடித்துள்ளேன். எனது இந்த ‘A Stroke Of Dissonance’ ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே கொண்ட 30 நிமிட குறும்படம்.

சரியான உந்துதல் கிடைக்காமல் தவிக்கும் ஒரு போராடும் வயலின் கலைஞனை பற்றிய ஒரு திரில்லர் கதை இது.

இந்த கதாபாத்திரத்திற்காக ஜெர்மனியை சேர்ந்த ஒரு வயலின் கலைஞரிடம் நான்கு மாதங்கள் வயலின் பயின்றேன். எனது நடிப்பு ஆர்வத்திற்கு எனது குடும்பத்தினர் எனக்கு முழு ஆதரவு தந்துள்ளனர்.

என் தாத்தா தான் நான் நடிப்பு பயிலும் பட்டறையில் சேர்ந்து முறையாக பயில வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறினார்.

சினிமா பற்றியும் நடிப்பு பற்றியும் மேலும் மேலும் பயின்று, தமிழ் சினிமாவின் கால்பதித்து எனது உழைப்பின் மூலம் வெற்றிபெற முனைப்போடு உள்ளேன்” என்றார் குணாநிதி.

இப்படத்தை மறைந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ‘ராம்போ’ ராஜ்குமாரின் மகன் ‘ராம்போ’ வெங்கட் இயக்கியுள்ளார்.

PMK Ramadoss grandson starring A Stroke of Dissonance Short Film

தொங்கல் உடலை பிஃட்டாக்கும் வடிவேலு; மீண்டும் வரும் இம்சை அரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்த படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி’.

இதனை இயக்குனர் ஷங்கர் தயாரித்து இருந்தார்.

இதன் இரண்டாம் பாகத்தையும் ஷங்கரே தயாரிக்க, வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியது.

இதன் பணிகள் தொடங்கும் நேரத்தில் விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் வடிவேலு.

தற்போது அங்குள்ள காட்சிகளை முடித்துவிட்டு திரும்பிய வடிவேலு, தற்போது உடல் எடையை குறைக்க தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.

விரைவில் வடிவேலுவுடன் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்பாகத்தில் அமைச்சராக நடித்த இளவரசுவிடம் அரசன் வடிவேலு தன் உடல் சற்று தொங்கலாக இருக்கும். எனவே சிக்ஸ்பேக் உடலை ஓவியமாக வரைய சொல்வார்.

தற்போது அதுபோல் வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Vadivelu working out for Imsai Arasan 23M Pulikesi Part 2

More Articles
Follows