சுதந்திர தினத்தில் அமேசானில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்..; ரசிகர்கள் அதிர்ச்சி

masterலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா, சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாஸ்டர்.
இந்த படம் இந்தாண்டு கோடை விடுமுறைக்கே ரிலீசுக்கு தயாரானாலும் கொரோனா ஊரடங்கால் ரிலீசாகவில்லை.
தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் நிறைய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்த நிலையில் அமேசான் ப்ரைம் தளத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி மாஸ்டர் ரிலீஸ் என போஸ்டர் வெளியாது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறது மாஸ்டர் படக்குழு.
அமேசானில் வெளியாகும் மாஸ்டர் படம் 2016ஆம் ஆண்டு வெளியான கொரிய படம் என்றும், அது விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் அல்ல என தெரிவித்துள்ளது.

Overall Rating : Not available

Latest Post