விஜய்-அட்லி கூட்டணியில் இணைந்த பாகுபலி கதாசிரியர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பைரவா படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கவுள்ள படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்ற செய்திகளை பார்த்தோம்.

இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இக்கூட்டணியில் விஜய்யுடன் கருணாகரன் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கதையை பிரபல கதாசிரியரான பாகுபலி புகழ் விஜயேந்திர பிரசாத் எழுத உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவர் நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜமௌலியின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா படத்திற்கு கிடைத்த மற்றொரு பெருமை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேன்ன் உள்ளிட்டோர் நடித்த படம் 24.

வழக்கமான கதையாக இல்லாமல் டைம் மிஷின் கதையை கமர்ஷியல் கலந்து கொடுத்திருந்தார் இயக்குனர். இசை ஏ.ஆர். ரஹ்மான்.

இதில் வில்லனாக நடித்து ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றார் சூர்யா.

சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படம் ஆந்திராவிலும் சக்கை போடு போட்டு ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது.

இந்நிலையில், தற்போது 3ஆவது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் 2016 ஆம் ஆண்டிற்கான மீடியா ஹானர் போட்டி பிரிவில் இப்படம் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இத்திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவுள்ள முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்காக விஜய்யாக மாறிய விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த இருமுகன் அண்மையில் வெளியானது.

இதுவரை உலகம் முழுவதும் ரூ. 85 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கேரளா சென்று இருந்தார் விக்ரம்.

அப்போது விழாவில் கலந்துக் கொண்டர்வர்கள் எப்போது நேரடி மலையாள படத்தில் நடிப்பீர்கள்? என கேட்டனர்.

அதற்கு பதிலளிக்கும் போது, இதை நான் விஜய் ஸ்டைலில் சொல்கிறேன், என தெரிவித்துவிட்டு “ஐயம் வெயிட்டிங்” என்று கூறினார்.

‘அவ்வை சண்முகி’ போல ‘ரெமோ’ படமும் காப்பியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல், மீனா நடித்த படம் அவ்வை சண்முகி.

இதில் தன் மகளுக்காக பிராமிண் மாமி போல வேடமிட்டு நடித்திருப்பார் கமல்.

இதில் ஹாலிவுட் படமான மிஸஸ் டவுட் ஃபயர் படத்தின் ரீமேக் என்று அப்போது சொல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்று வெளியான சிவகார்த்திகேயனின் ரெமோ ட்ரைலர் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் பெரிய நடிகன் ஆக வேண்டும் என்பதற்காக நாயகன் பெண் வேடம் அணிவதும், பின்பு காதலி அருகில் இருப்பது போன்ற காட்சிகள் இருந்தன.

இதுபோலதான், “டூட்ஷி” (Tootsie) என்ற ஹாலிவுட் படத்தின் கதையும் அமைந்து இருந்தது.

இப்படம் கடந்த 1982இல் வெளியானது.

ஒருவேளை இதை தமிழுக்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கலாம் என நெட்சன்கள் கூறி வருகின்றனர்.

அட எதுவா இருந்தா என்ன, படம் நல்லாயிருக்கா? அதானே முக்கியம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

கண்ணா.. இன்னும் இரண்டே நாள்தான்; தலைவர்-தல கிளம்புறாங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இடையில் கபாலியிலும் நடித்துக் கொடுத்தார் ரஜினிகாந்த்.

கபாலி வெளியாகி இமாலய சாதனைகளை படைத்துவிட்டது.

இதனிடையில் அமெரிக்காவில் ஓய்வு எடுத்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி, விரைவில் ஷங்கர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கவிருக்கிறதாம்.

இதில் ரஜினியுடன் அக்சயகுமார், எமிஜாக்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் இதே நாளில்தான் அஜித் நடிக்கும் ‘தல 57’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பும் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்-விஜய்யை தொடர்ந்து உதயநிதியை மிரட்டும் வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிகரம் தொடு படத்தை தொடர்ந்து கௌரவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் உதயநிதி.

இதில் இவருடன் மஞ்சிமா மோகன், ஆர். கே. சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஆர்.கே.சுரேஷ் உயர் போலீஸ் அதிகாரியாகவும் மஞ்சிமாவின் அண்ணனாகவும் நடிக்கிறார்.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் வில்லனாக டேனியல் பாலாஜி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கமலின் வேட்டையாடு விளையாடு படத்தில் டெர்ராக இவர் நடித்திருந்தார்.

தற்போது தயாராகி வரும் விஜய்யின் ‘பைரவா’ படத்திலும் டேனியல் பாலாஜி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows