ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் பற்றி விஜயகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டீக்கடை பெஞ்ச் முதல் ஐடி கம்பெனி வரை உள்ள மக்களால் அதிகம் பேசப்படும் ஒரு விஷயமாக ரஜினியின் அரசியல் பேச்சு மாறிவிட்டது.

இந்நிலையில் தற்போது விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிப் பணிகளைப் பார்வையிட சென்றுள்ளார்.

அங்கு அவர் பத்திரிகையாளர்களிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசியதாவது…

“இது ஜனநாயக நாடு, இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம்.

ஆனால், மக்கள் தேர்ந்தெடுப்பவர்களே நாட்டை ஆள முடியும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை நாறிப்போய் உள்ளது.

அதிமுகவில் உள்ள இரு அணிகளுக்கும் மக்களைப் பற்றிய அக்கறை இல்லை.

யார் ஆட்சி செய்வது? இந்த நான்கு ஆண்டுகளை எப்படி கடத்துவது என்பதே அவர்களது சிந்தனையாக இருக்கிறது” என்றார்.

Vijayakanth talks about Rajinikanths political entry

 

ஸ்கெட்ச் போட்டு ஆட்டைய போடும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாலு படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் படத்தை இயக்கி வருகிறார் விஜய் சந்தர்.

இப்படத்தில் முதன்முறையாக விக்ரமுடன் தமன்னா, ஸ்ரீபிரியங்கா இணைந்து நடித்து வருகின்றனர்.

தமன் இசையமைக்க, கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் விக்ரம் ஏற்றுள்ள கேரக்டர் பற்றி தகவல் கிடைத்துள்ளது.

இதில் பக்கா ஸ்கெட்ச் போட்டு திருடும் திருடனாக நடித்து வருகிறாராம்.

இப்படத்தை செப்டம்பரில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

Vikram character in Sketch movie revealed

பர்ஸ்ட் லுக் வரல; டைட்டில் தெரியல; ஆனாலும் விஜய் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கும் தளபதி 61 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்தநாளில் வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் இந்தி (டப்பிங்) சாட்டிலைட் ரைட்ஸ் தற்போதே ரூ. 11 கோடிக்கு விற்பனையாகிவிட்டதாம்.

இது விஜய் படங்களில் அதிகமான தொகை என சொல்லப்படுகிறது.

Vijay 61‘s Hindi dubbing rights for satellite news updates

விஷ்ணு விஷாலுக்கு கைகொடுத்த சிம்பு-தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கிவரும் கதாநாயகன் படத்தை தயாரித்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

இவருடன் கேத்ரீன் தெரசா, சூரி உள்ளிட்டோர் நடிக்க, சீன் ரோல்டான் இசையைமைத்து வருகிறார்.

கடந்த மே 14ஆம் தேதி இதன்ர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டார்.

இந்நிலையில் இப்படத்தின் சில காட்சிகளுக்கு பின்னணி குரல் தேவைப்பட்டதாம்.

அதற்கு சிம்புவின் குரல் பொருத்தமாக இருக்கும் என்பதால், அவரிடம் கேட்க, சிம்புவும் ஒப்புக் கொண்டு பேசினாராம்.

தற்போது சிம்புவுடன் தான் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

‘விஜய்-விஷால் பயப்படுறாங்க… சிம்பு பயப்படல..’ சீமான் சீற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், இயக்குனர் என பிஸியாக இருந்த சீமான், தற்போது தன் கவனத்தை முழுவதுமாக அரசியலில் செலுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் சினிமா பற்றிய கருத்தை தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது…

சில தவிர்க்க முடியாத காரணங்களால் நான் நேசித்த தொழிலையே என்னால் செய்ய முடியவில்லை.

நான் அரசியலில் ஈடுபட்டு வருவதால், என் இயக்கத்தில் நடிக்க விஜய், விஷால் ஆகியோர் பயப்படுகின்றனர்.

சிலம்பரசன் மட்டும்தான் என் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.

சில படங்களில் என்னை நடிக்க வைக்கக்கூட சிலர் பயப்படுகின்றனர்.” என்றார்.

‘அஜித்துக்கு காத்திருக்க முடியாது; ஜோதிகா வரட்டும்…’ பிரபல தியேட்டர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை சென்னையில் ஒரு சில திரையரங்குகள் நிர்ணயிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அதில் முக்கியமான திரையரங்கம் சென்னை அசோக் நகரில் உள்ள காசி தியேட்டர்.

இதனால் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ஒரு சில நடிகர்கள் இங்கு வந்து பார்ப்பார்கள்.

இந்நிலையில் கடந்த மாதங்களாக இங்கு கட்டிட பணிகள் நடைபெற்று வருவதால், தியேட்டர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த தியேட்டரை புதுப்பித்த உடன் அஜித்தின் விவேகம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தார்களாம்.

ஆனால், தற்போது கட்டிட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் விவேகம் ரிலீஸ் ஆகஸ்ட் மாதம் தள்ளிப் போய் உள்ளதால், இனிமேலும் அஜித்துக்காக காத்திருக்க முடியாமல் ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும் படத்தை திரையிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

More Articles
Follows