தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரில், ‘மைனா’ என்னும் கேரக்டரில் கலக்கியவர் நந்தினி.
தற்போது டிவி ஷோக்களில் நடுவராகவும் இருக்கிறார்.
இவருக்கும் ஜிம் ட்ரெய்னரான கார்த்திகேயனுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது.
இவர்கள் சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தீடீரென கார்த்தி விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இதற்கான காரணத்தை அறிய போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நந்தினி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…
“நான் அவரிடம் உண்மையாக இருந்தேன். ஆனால் கார்த்தி என்னிடம் உண்மையாக இல்லை.
கவர்மென்ட்டில் ஜாப் வாங்கி தருகிறேன் என பல பேரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார்.
இதுபற்றி கேட்டபோது எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது.
மீண்டும் மீண்டும் கேட்டபோது, தற்கொலை செய்துக் கொள்வேன் என மிரட்டினார்.
இனி அவரிடம் செட்டாகாது என்று வீட்டிற்கு வந்துவிட்டேன்.
ஆனால் இப்போது அவர் இறந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை.
அவரை பிணமாக பார்க்கும் தைரியம் என்னிடம் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.
Vijay TV fame Maina fame Nandhini husband Karthi attempts suicide