மணிரத்னம்-சிம்பு இணையும் படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர்

mani ratnam and simbu‘காற்று வெளியிடை’ என்ற தோல்வி படத்திற்கு பிறகு மல்ட்டி ஸ்டாரர் படத்தை இயக்கவிருக்கிறார் மணிரத்னம்.

இதில் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார்.

தன் சொந்த நிறுவனமான ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார் மணிரத்னம்.

படத்தில் நடிப்பவர்களுக்கு சில பயிற்சிகளையும் கொடுத்து வருகிறாராம் டைரக்டர்.

விரைவில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ள நிலையில், விஜய்சேதுபதியின் கேரக்டர் குறித்த தகவல் வந்துள்ளது.

இதில் அவர் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம்.

ஏற்கெனவே ‘சேதுபதி’ படத்தில் போலீஸாக நடித்து பெரும் பாராட்டை பெற்றவர் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் சினிமாவில்…
...Read More
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கியவர்…
...Read More
இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, இசையமைப்பதுடன் பாடல்களை…
...Read More
பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களைத் தொடர்ந்து…
...Read More

Latest Post