ஆதிவாசியாக அசத்தும் விஜய்சேதுபதி; பர்ஸ்ட்லுக் ஏற்படுத்திய பரபரப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்திற்கு ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதன் சூட்டிங் தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வரகிறது.

ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஆதிவாசியாக நடித்து அசத்தவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.

மேலும் இந்த கதை நடக்கும் களம் ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த பர்ஸ்ட் லுக்கில் விஜய்சேதுபதி கெட்டப்புக்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

இது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Vijay Sethupathis Oru Nalla Naal Paathu Solren first look goes viral

அரசு செவிடாகி தூங்குகிறது; இனி நாம்தான் காவலர்… கமல் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தை அச்சுறுத்தும் விதமாக நாளொரு மரணம் டெங்குவால் நடந்து வருகிறது.

எனவே டெங்கு காய்ச்சலுக்கு உடனடியான தீர்வை அரசு மேற்கொள்ள வேண்டும் என சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்திருந்தார் கமல்.

தற்போது சென்னை கோபாலபுரம் பகுதி பள்ளியைச் சேர்ந்த பார்க்கவ் என்ற மாணவர் டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்தார்.

எனவே சற்றுமுன் மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

அதில்.. செவிடன் காதில் ஊதிய சங்குபோல் உள்ளது. அரசு எதற்கு செவி சாய்க்கவில்லை.
இதுபோன்ற மரணங்களை தடுக்க முடியாத அரசு பதவி விலக வேண்டும்.

அரசு தூங்குகிறது. பெற்றோரே விழித்திருங்கள். இனி நாம்தான் காவலர்.

நமக்கு வேண்டிய பதிலை பெறும் வரை அமைதியாக இருக்காதீர்கள்” என பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 14m14 minutes ago
அரசு தூங்குகிறது பெற்ரோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 14m14 minutes ago
செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாஅரசு அகல வேண்டும்.

TN ADMK Govt must resign Parent must get aware of Dengue fever says Kamal

குயின் ரீமேக்கில் காஜலை இயக்கும் ரமேஷ்அரவிந்த்; படத்தலைப்பு வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான படம் ‘குயின்’.

அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.

தற்போது இதன் தமிழ் மற்றும் கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதில் கங்கனா ரணாவத் கேரக்டரில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்.

தமிழச்சி தங்கபாண்டியன் வசனம் எழுதவுள்ள, இப்படத்திற்கு பாரீஸ் பாரீஸ்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.

‘குயின்’ படத்தின் கதையை தமிழ் மற்றும் கன்னட சினிமாவுக்கு ஏற்ப மாற்றியிருக்கிறார்ளாம்.

இது விருதுநகரில் ஆரம்பித்து அப்படியே பாரிஸ் செல்லும் கதையாக இதனை வடிவமைத்துள்ளனர்.
அக்டோபரில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.

Ramesh Aravind will direct Kajal Aggarwal for Queen Tamil remake

ரஜினியை தொடர்ந்து மோடிக்கு ஆதரவளிக்கும் ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நமது பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தன் ஆதரவை தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் பாகுபலி இயக்குனர் எஸ்எஸ். ராஜமௌலியும் பிரதமரின் நல்ல திட்டத்திற்கு தன் ஆதரவை அளிப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆதரவளிக்குமாறு மோடி அவர்கள் தனக்கு அனுப்பிய கடிதத்தையும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

After Rajini its Rajamouli support Modi for Clean India Campaign

rajamouli ss‏Verified account @ssrajamouli
.@narendramodi ji, heartfelt appreciation for this wonderful initiation. I‘ll do my best to be a part of my Swachh Bharat. #SwachhataHiSeva

 

உலக சாதனை படைத்த மெர்சல் டீசர்; விஜய்க்கு யூடியுப் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஆர் ரகுமான் இசையமைத்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசர் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது.

இது வெளியானது முதலே மற்ற படங்கள் படைத்த சாதனைகளை முறியடிக்க தொடங்கியது.

உலக அளவில் குறைந்த நேரத்தில் அதிக லைக்குளைப் பெற்ற டீசர் என்ற சாதனையையும் பெற்றுள்ளது.

இந்தச் சாதனை ஹாலிவுட் படங்களே இதுவரை பெற்றதில்லை என கூறப்படுகிறது.

பல லட்சம் லைக்ஸுகளை பெற்று 15 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதை வெளியிட்ட யு-டியூப் நிறுவனமே தங்கள் டுவிட்டர் பக்கத்தில் Epic Thalabathi என்று குறிப்பிட்டுள்ளனர்.

Youtube praises Mersal team for its World Record

.@arrahman’s musical genius meets the epic Thalapathy @actorvijay in #MersalTeaser → https://t.co/QAOwcUYM0w pic.twitter.com/9G0tg6VOWx
— YouTube India (@YouTubeIndia)

2018 பொங்கல் ரேஸில் சூர்யாவுடன் மோதும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டூடீயோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தை அடுத்த ஆண்டு 2018 பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளனர்.

இதே நாளில் விஷால் தயாரித்து நடித்துள்ள இரும்பு திரை படத்தையும் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜீன் முக்கிய வேடத்தில் நடிக்க, சமந்தா நாயகியாக நடித்துள்ளார்.

ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் இவர்களுடன் இணைய, யுவன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ரூபன் கவனிக்கிறார்.

Thaana Serndha Kootam and Irumbu Thirai movies clash on 2018 Pongal

More Articles
Follows