கஜா-வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய்சேதுபதி 25 லட்சம் நிதி

Vijay Sethupathis kind gesture for Cyclone Gaja victimsதமிழகத்தின் டெல்டா பகுதிகளை கஜா புயல் தாக்கியதால் வீடு, தொழில்களை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

இதுவரை 45 பேர் உயிர் இழந்துள்ளனர். எண்ணற்ற ஆடுகள், மாடுகள் உயிரிழந்துள்ளன.

சாலையெங்கும் மரங்கள் வீழ்ந்து கிடப்பதால் மின் கம்பிகளும் அறுந்துள்ளன. இதனால் மின்சாரமும் இல்லாமல் தவித்து வருகின்றன.

4 நாட்கள் ஆன நிலையிலும் இன்னும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை.

டெல்டா பகுதி மக்கள் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் நிவாரணப்பணிகளை செய்து வருகின்றனர்.

அரசு நிவாரணப் பணிகளும் தாமதம் ஆகி வருவதால் ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில்…

”கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வசதி முழுமையாக திரும்பவதற்கு பத்து தினங்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் சார்ஜிங் டார்ச்லைட் ஆயிரக்கணக்கில் வழங்கப்படும்.

லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமைக் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை முழுவதுமாக புனரமைத்து தரப்படும்.

அவர்கள் தங்களின் பிள்ளைகள் போல் வளர்த்து வந்த தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை, மீண்டும் அவ்விடத்தில் புதிதாக நட்டு வைக்கப்படும். இதற்கான களப்பணிகளில் என்னுடைய ரசிகர்களும் ஈடுபடுவார்கள். நிவாரண நிதி தேவைப்படுபவர்களை ரசிகர் மன்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும்.“ என்றார்.

இதனிடையே கஜா புயல் மற்றும் கனமழையின் காரணமாக உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, அந்த குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathis kind gesture for Cyclone Gaja victims

Overall Rating : Not available

Latest Post