*மயக்கம் என்ன* தனுஷ் வரிசையில் விஜய்சேதுபதியின் *96*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மயக்கம் என்ன படத்தில் தனுஷ் போட்டோ கிராபராக நடித்தார்.

தற்போது 96 படத்தில் விஜய்சேதுபதியும் போட்டோ கிராபராக நடிக்கிறாராம். அதன் விவரம் வருமாறு..

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘96 என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.

கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார் . மற்றும் ஜனகராஜ், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம்

இசை – கோவிந்த் மேனன்

எடிட்டிங் – கோவிந்தராஜ்

கலை – வினோத் ராஜ்குமார்

பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா.

எழுத்து, இயக்கம் – C.பிரேம்குமார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.

தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்

படத்தின் அனைத்துகட்ட பணிகளும் முடிந்து விட்டது. விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி புகைப்பட கலைஞராக நடித்துள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களை விட இந்த படம் அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு அனுபவத்தை தரும். படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது எங்களுக்கு கிடைத்த வெற்றிதான் படமும் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்ல என்றார் இயக்குனர் C.பிரேம்குமார்.

படத்தை உலகம் முழுவதும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் S.S.லலித்குமார் வெளியிடுகிறார்.

கவிஞர் அறிவுமதி வெளியிட்ட அமெரிக்கத் தமிழரின் *என் செடி உன் பூக்கள்* கவிதைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டல்லாஸ் : அமெரிக்கத் தமிழர் முனைவர். சித்ரா மகேஷ் எழுதிய கவிதைகள் அடங்கிய ‘உன் செடி என் பூக்கள்’ புத்தகத்தைக் கவிஞர் அறிவுமதி வெளியிட்டார். சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன், கால்டுவெல் வேள்நம்பி மற்றும் அருண்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

அமெரிக்கத் தமிழர்களின் மொழி இன உணர்வுகளையும் அது சார்ந்த தமிழ் விழாக்களையும் பாராட்டிய கவிஞர்.அறிவுமதி, இத்தகைய தமிழ்ப் படைப்புகளும் இந்த மண்ணிலிருந்து வெளி வரவேண்டும். முனைவர். சித்ரா மகேஷின் கவிதைத் தொகுப்புக்குப் பாராட்டுகள். மேலும் பல படைப்புகளை அவர் படைக்க வேண்டும் என வாழ்த்தினார்.

எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசும் போது, அமெரிக்காவில் தமிழுக்கு இத்தகைய வரவேற்பும், சிறப்பும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த புத்தக வெளியீட்டில் முனைவர்.சித்ரா மகேஷின் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டது மகிழ்ச்சியான தருணமாகும். அவர் மென் மேலும் பல படைப்புகளும், இந்த மண் சார்ந்த இலக்கியங்களும் தமிழில் படைக்க வேண்டும் என்று கூறினார்.

தமிழ் விழா வின் ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் வேள்நம்பி, முனைவர். சித்ரா மகேஷின் திருக்குறள் அறிவு, எழுத்தாற்றல், தமிழ்ப் பணிகள் குறித்து விவரித்து வாழ்த்தினார். ஃபெட்னா தொழில் முனைவோர் கருந்தரங்க ஒருங்கிணைப்பாளர் அருண்குமாரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

‘இத்தகைய பெருமை மிக்க மேடையில், என் முதல் நூலைப் பெரும் மதிப்பிற்குரியவர்களான கவிஞர். அறிவுமதி வெளியிட எழுத்தாளர் சு.வெங்கடேசன் பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி, எனது வாழ்வில் முக்கியமானதாகும்.

வாழத்துரை எழுதிய அன்பு அக்கா தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு இதயப்பூர்வமான நன்றி. உற்சாகப்படுத்தும் பதிப்பாளர் பரிதிக்கும் நன்றி’ என்று உணர்ச்சிமயமானார் முனைவர். சித்ரா மகேஷ். மேலும், தமிழ் விழாக் குழுவினருக்கும், கருத்தரங்கக் குழுவினருக்கும், நூலை வெளியிட வாய்ப்பளித்த அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருண்குமாருக்கும் நன்றி கூறினார்.

பரிதி பதிப்பகத்தின் சார்பில் ‘என் செடி உன் பூக்கள்’ கவிதைகள் புத்தகத்தைப் பதிப்பாளார் பரிதி வெளியிட்டுள்ளார். அமெரிக்கத் தமிழர்களின் படைப்புகளை ஆதரிக்கும் வகையில், ஃபெட்னாவின் தொழில் முனைவோர் கருத்தரங்கத்தில் இந்த புத்தக வெளியீடு நடைபெற்றுள்ளது.

En Sedigal Un Pookkal book written by Dr Chitra Mahesh and released by Poet Arivumathi

குருதி ஆட்டம்.. 3வது முறையாக அதர்வா உடன் இணைந்த யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் அடுத்து இயக்கும் படம் ‘குருதி ஆட்டம்’.

இதில் அதர்வா நாயகனாக நடிக்கிறார்.

கிரைம் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த கதைக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை மேலும் பலம் சேர்க்கும் என்றும் கூறுகிறார் ‘ராக்ஃபார்ட் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கும் முருகானந்தம்

ஏற்கெனவே அதர்வா நடித்த ‘பானா காத்தாடி’, ‘செம போத ஆகாதே’ ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

தற்போது 3வது முறையாக அதர்வாவுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமிதாப் பட அறிவிப்பை ரஜினியை தவிர யார் வெளியிட முடியம்.. : எஸ்ஜே. சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. கடந்த ஆண்டு ஸ்பைடர், மெர்சல் என வில்லத்தனத்திலும் மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள இறவாக்காலம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் தனது அடுத்த படத்தை பற்றி அறிவிப்பை அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் படத்தின் சுரேஷ் கண்ணன் வரவேற்று பேசினார்.

முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் தமிழ்வாணன், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது படத்தின் தலைப்பையும், போஸ்டரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

அந்த காணொளியை பத்திரிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியோடு திரையிட்டு காண்பித்தார் எஸ்.ஜே.சூர்யா.

ஸ்ரீதிருச்செந்தூர் முருகன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.சுரேஷ்கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் ஆகியோர் இந்த உயர்ந்த மனிதன் படத்தை தயாரிக்கின்றனர்.

எத்தனையோ தருணங்களில் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் இந்த சந்திப்பு எனக்கு மிகவும் ஸ்பெஷல். நேற்று ட்விட்டரில் என் அடுத்த படத்தை பற்றிய பிரமாண்ட அறிவிப்பு இருக்கும் என பதிவிட்டதற்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ். நான் அடுத்து நடிக்கும் படம் உயர்ந்த மனிதன். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிறது.

இந்தியன் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சார் முதன்முறையாக இந்த தமிழ் படத்தில் நடிக்கிறார். நான் இந்தியில் நடிகனாக அறிமுகம் ஆகிறேன். நான் முக்கியமாக நன்றி சொல்ல வேண்டியது இயக்குனர் தமிழ்வாணன் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோருக்கு தான்.

இயக்குனர் கொண்டு வந்த கதை தான் அமிதாப் சார் வரைக்கும் இந்த படத்தை கொண்டு சென்றிருக்கிறது. 2 வருடங்களுக்கு மேலாக இந்த படத்துக்கான வேலைகள் நடந்து வருகிறது.

திரைக்கதை மட்டும் ஒரு வருடம் எழுதியிருக்கிறார். ஸ்கிரிப்டை அமிதாப் பச்சன் சாரிடம் கொண்டு சென்று கொடுத்தோம். எல்லாம் படித்து முடித்த பிறகு அவரை இறுதியாக ஒரு முறை சந்தித்தோம்.

கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, சில சந்தேகங்கள் இருக்கின்றன, அவற்றை விளக்க வேண்டும் என்றார். அதை கேட்ட பிறகு கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்றார். அதை யார் அறிவிக்க முடியும் என்றால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் தான் முடியும்.

அவரும் உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே அழைத்து எங்களை வாழ்த்தி பட அறிவிப்பை வெளியிட்டார்.

நான் ஏதோ சாதனை செய்து விட்டது போல பேசுவதாக நினைக்க வேண்டாம். இந்த படத்தை ஒருங்கிணைத்ததே எனக்கு ஒரு பெரிய சாதனை தான். அமிதாப் பச்சன் சாரின் 2019 காலண்டர் காட்டும்போது நானே வியந்து போனேன், 5 நாட்கள் கூட எங்கள் படத்துக்கு அதிகமாக ஒதுக்க முடியாது என்ற நிலையில் மிகவும் பிஸியாக இருந்தார். 2019ல் மட்டும் 6 படம், கோன் பனேகா க்ரோர்பதி, விளம்பரங்கள் என இந்த வயதிலும் அவ்வளவு பிஸியாக இருக்கிறார்.

அவர் நமக்கெல்லாம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த படத்துக்கு மிக பொருத்தமான தலைப்பு நடிகர் திலகம் சிவாஜி சார் அவர்களின் உயர்ந்த மனிதன். இந்த தலைப்பை ஏவிஎம்மிடம் இருந்து வாங்கியிருக்கிறோம்.

இந்த படத்துக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்த ஏஆர் முருகதாஸ் அவரகளுக்கும் நன்றி. கஷ்டத்தில் இருக்கும்போது இயக்குனர் சொன்ன வார்த்தைகளே தெம்பை கொடுத்தது. இந்த படம் இந்தியா முழுக்க மட்டுமின்றி சைனா வரை போகும். கதை அப்படி அமைந்திருக்கிறது என்றார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.

இந்த கதையை எழுதி முடித்தபோதே எஸ்.ஜே.சூர்யா சாரிடம் சொன்னேன். இந்த படத்தை ஆசைப்பட்டது மட்டும் தான் நான், இதை இந்த அளவுக்கு கொண்டு போனது சூர்யா சாரும், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் சாரும் தான். அமிதாப் பச்சன் சார், சூர்யா சார் என இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் கதை இது.

படத்தை பற்றிய மற்ற தகவல்களை அவ்வப்போது தெரிவிக்கிறோம் என்றார் இயக்குனர் தமிழ்வாணன்.

செப்டம்பரில் கட்சி; டிசம்பரில் மாநாடு; ரஜினி அதிரடி திட்டம்

தலைவர் ரஜினி படத்துக்கு ஒத்திகை பார்க்கிறேன்.. : நவாசுதீன் சித்திக்

செப்டம்பரில் கட்சி; டிசம்பரில் மாநாடு; ரஜினி அதிரடி திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்து விட்டார். இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு 8 மாதங்கள் ஆனாலும் இன்னும் கட்சி பெயர் மற்றும் கொடி, கொள்கையை அவர் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்தார்.

நிர்வாக உறுப்பினர்கள் ஜாதி அமைப்பில் இருக்க்கூடாது, 18வயதுக்குள் இருக்க கூடாது, கொடியை ப்ளாஸ்டிக்கில் பயன்படுத்த கூடாது, போதை பழக்கத்துக்கு அடிமையாக இருக்க கூடாது உள்ளிட்ட பல விவரங்கள் இருந்தன.

ரஜினியின் இந்த விதிமுறைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ரஜினி தன் கட்சியை அடுத்த செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி சமயத்தன்று அறிவிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அல்லது அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று அறிவிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனையடுத்து வரும் டிசம்பரில் கட்சி மாநாட்டை திருச்சி அல்லது கோவையில் நடத்த ரஜினி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமிதாப் பட அறிவிப்பை ரஜினியை தவிர யார் வெளியிட முடியம்.. : எஸ்ஜே. சூர்யா

எஸ்.ஜே.சூர்யா படம் மூலம் அமிதாப்பச்சன் தமிழில் அறிமுகம்; டைட்டிலை வெளியிட்டார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதன் முறையாக தமிழ் படத்தில் நடிக்கிறார்.

இதில் மற்றொரு நாயகனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் தயாராகிறது.

இப்படம் மூலம் எஸ்ஜே. சூர்யா இந்திக்கு செல்கிறார்.

இப்படத்தை தமிழ்வாணன் இயக்க, திருச்செந்தூர் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கு உயர்ந்த மனிதன் என்று பெயரிட்டுள்ளனர்.

இப்பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை ரஜினிகாந்த் வெளியிட்டார்.

மேலும் அமிதாப் உடன் சூர்யா இருக்கும் படத்தை பார்த்துவிட்டு உங்கள் இடத்தில் நான் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறினார்.

பல வருடங்களுக்கு முன் ஏவிஎம் புரொடக்சன்ஸ் சார்பில் சிவாஜி நடித்த படத்தின் தலைப்பும் உயர்ந்த மனிதன் என்பது குறிப்பிடத்தக்கது.

Amitabh Bachan and SJ Suriya teams up for Uyarndha Manithan

 

More Articles
Follows