தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நம் கை மற்றும் கால் விரல்களை சேர்த்தால் கூட விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்ட படங்களை எண்ணிவிட முடியாது.
தினம் ஒரு இயக்குனரிடம் கதை கேட்டும் சில இயக்குனர்களிடம் ஒப்புக் கொண்டும் வருகிறார்.
தற்போது வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதில் நாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவரும் நடிக்க, சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீமான் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
விவேக்-மெர்வின் இருவரும் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
எம்.பிரபாகரன் கலையை கவனிக்க பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும் கவனித்து வருகிறர்.
ன்றனர்.
முதல்கட்ட சூட்டிங்கை முடித்த படக்குழுவினர் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பை துவங்கவுள்ளனர்.