பகவத்கீதை பற்றி நான் ஒன்னுமே பேசல; பதறியடித்து விஜய்சேதுபதி விளக்கம்

பகவத்கீதை பற்றி நான் ஒன்னுமே பேசல; பதறியடித்து விஜய்சேதுபதி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi tweets clarification on Bhagavad Gita controversyதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் விஜய்சேதுபதியும் ஒருவர்.

அவ்வப்போது பல சமூக கருத்துக்களை கூறி வருகிறார் இவர். இதனால் இவரது படங்களை வைத்து நிறைய மீம்ஸ் மற்றும் டிக் டாக் வீடியோக்கள் வலம் வருகின்றன.

இதனிடையில் கடந்த வாரம் செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்கத் தமிழக காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘டிஜிகாப்’ என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்தார்.

இந்த செயலியால் காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி, குறையும்’ என்றார்.

இதை ஒரு டிவி சேனல் டிசைன் செய்து பதிவிட்டது. ஆனால் சில விஷமிகள் அந்த வார்த்தைகளை எடுத்துவிட்டு பகவத் கீதையை அவதூறாக விஜய்சேதுபதி பேசியது போல் வார்த்தைகள் டிசைன் செய்திருந்தனர்.

இதனால் சர்ச்சை ஆனது. இதனையறிந்த விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

‘என் அன்பிற்குரிய மக்களுக்கு… பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது.

எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையையும், ஒற்றுமையையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்.” என தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi tweets clarification on Bhagavad Gita controversy

விஜய்ஆண்டனியை அரசியலுக்கு அழைக்கும் ‘மெட்ரோ’ ஆனந்த கிருஷ்ணன்

விஜய்ஆண்டனியை அரசியலுக்கு அழைக்கும் ‘மெட்ரோ’ ஆனந்த கிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Antony and Anandha Krishan team up for Political movieவிஜய் ஆண்டனி நடிப்பில் `கொலைகாரன்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தற்போது `அக்னிச் சிறகுகள்’, `தமிழரசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது அடுத்த பட அறிவிப்பை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.

எனது அடுத்த படத்தில் மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனுடன் இணைவதில் மகிழ்ச்சி. இந்த படத்தை தயாரிக்கிறார் டி.டி.ராஜா.” எனத் தெரிவித்துள்ளார்.

இவரது தயாரிப்பின் முதல் படத்தின் படப்பிடிப்பு ( பெயரிப்படாத படம் )சசிகுமார் 19 ) பொள்ளாச்சியில் சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.இதையடுத்து விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படம்  T  D ராஜாவின் இரண்டாவது தயாரிப்பாகும்.

மேலும் இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகிறது. எமன் படத்திலும் விஜய் ஆண்டனி அரசியல்வாதியாக நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிபதிவினை N .S உதயகுமார் செய்கிறர். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் .

இதர நடிகை – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இயக்கம் – ஆனந்த கிருஷ்ணன்
தயாரிப்பு – T D ராஜா – செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல்
இணைத்தயாரிப்பு – ராஜா சஞ்சய்
இசை – ஜோகன்
ஒளிப்பதிவு – N S உதயகுமார்
மக்கள்தொடர்பு – ரியாஸ் கே அஹமது

Vijay Antony and Anandha Krishan team up for Political movie

நயன்தாராவை ரஜினிக்கு ஜோடியாக்கும் ஏஆர். முருகதாஸ்.?

நயன்தாராவை ரஜினிக்கு ஜோடியாக்கும் ஏஆர். முருகதாஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara may pair up with Rajinikanth in Thalaivar 166 movieரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

விரைவில் தனது அடுத்த படத்தை துவங்கவுள்ளார்.

வருகிற மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் அந்த சமயம் தமிழகத்தில் இல்லாமல் வெளிநாட்டிலோ அல்லது வேறு மாநிலத்திலோ தலைவர் 166 பட சூட்டிங்கில் கலந்துக் கொண்டு நடிக்கவுள்ளார்.

இப்படத்தை முருகதாஸ் இயக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என தகவல்கள் வருகின்றன.

ஏற்கெனவே ரஜினியுடன் சந்திரமுகி, சிவாஜி, குசேலன் உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara may pair up with Rajinikanth in Thalaivar 166 movie

தளபதி-யை தொடர்ந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் சந்தோஷ் சிவன்

தளபதி-யை தொடர்ந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் சந்தோஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and santhosh sivanரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள தலைவர் 166 படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பதை பல முறை பார்த்து விட்டோம்.

இப்படத்திற்கு முருகதாஸின் ‘துப்பாக்கி’, ’ஸ்பைடர்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என தெரிவித்திருந்தோம்.

இப்போது அந்த தகவலை சந்தோஷ் சிவன் உறுதி செய்துள்ளார்.

அவர்… ‘தளபதி’ படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி படத்தில் பணிபுரிய உள்ளேன்’’ என்று ட்வீட் செய்துள்ளார்.

ரஜினி, மம்மூட்டி இணைந்து நடித்த ‘தளபதி’ 1991-ல் வெளியானது.

இந்த படம் வெளியாகி 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் சந்தோஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது

ஜோதிகா-யோகி பாபு இணையும் படத்தை இயக்கும் ’குலேபகாவலி’ இயக்குனர்

ஜோதிகா-யோகி பாபு இணையும் படத்தை இயக்கும் ’குலேபகாவலி’ இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jyothika and yogi babuசூர்யாவின் ‘2D ENTERTAINEMT’ நிறுவனம் தயாரிக்க, ஜோதிகா நடிக்கும் புதிய பட பூஜை சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சூர்யா கலந்துகொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

வழக்கம்போல இந்த படமும் கதாநாயகியை மையப்படுத்திய கதை தான்.

இப்படத்தை ’குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார்.

காமெடி படமாக உருவாகும் இந்த படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூரலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.

கலை இயக்கத்தை வீரசமர் கவனிக்க, படத்தொகுப்பை விஜய் கவனிக்கிறார்.

இவையில்லாமல் அறிமுக இயக்குனர் ராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா.

இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறுகிய காலத்தில் பட பிடிப்பை முடித்த கூர்கா பட குழுவினர்

குறுகிய காலத்தில் பட பிடிப்பை முடித்த கூர்கா பட குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gurkhaதீவிரமான திட்டமிடுதலே ஒரு இலக்கை அடைவதற்கான மிகச்சரியான வழிமுறை. முக்கியமாக சினிமாவிற்கு இதுபொருந்தும். குறிப்பாக யோகிபாபுவின் “கூர்கா” திரைப்படத்தை நிலையான வேகத்தில் , சரியான திட்டமிடலோடு படப்பிடிப்பை மிக குறுகிய காலத்திலேயே முடித்தனர்.

” இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினரையே சேரும். குறிப்பாக உதவி இயக்குனர்கள் செய்த அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த நன்றி. “கூர்கா” கதையின் தொடர்ச்சியை அதிகமாக நம்பியிருந்ததால், அதை அவர்கள் மிகவும் கச்சிதமாக கடைப்பிடித்தனர். நடிகர்கள் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா ,மற்றும் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் தங்கள் பங்களிப்பை மிக சிறப்பாக அளித்தனர். தற்பொழுது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் கூர்கா , கோடை விருந்தாக திரைக்கு வரும் என்று எதிர்பாக்கலாம்” என்றார் படத்தின் இயக்குனர் சாம் ஆன்டன்.

காமெடி மற்றும் action கலந்த திரைப்படமாக வளரும் “கூர்கா”, ஒரு கடத்தப்பட்ட காரை , ஒரு அப்பாவி கூர்காவும் அவரது நாயும் எப்படி கண்டுப் பிடிக்கிறார்கள் என்பதே மையக்கரு.

சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தை, தனது நண்பர்களோடு இணைந்து “4 மங்கீஸ்” ஸ்டுடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கவும் செய்கிறார். ராஜ் ஆர்யன் இசையமைக்க , கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்

More Articles
Follows