கமல்ஹாசன் – எச் வினோத் கூட்டணியில் இணையும் விஜய் சேதுபதி..

கமல்ஹாசன் – எச் வினோத் கூட்டணியில் இணையும் விஜய் சேதுபதி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் மெகா பிளாக்பஸ்டர் ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு, ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

கமல், அடுத்ததாக இயக்குனர் எச் வினோத்துடன் கைகோர்க்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘KH233’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதிக்கு மீண்டும் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு கமல்ஹாசனுடன் இணைந்து ‘விக்ரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் விஜய் சேதுபதி.

இப்படத்தின் படப்பிடிப்பு 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.

Vijay Sethupathi to join Kamal Haasan-H Vinod alliance

சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பு.; கலகத் தலைவனை வாழ்த்திய தமிழக முதல்வர்

சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பு.; கலகத் தலைவனை வாழ்த்திய தமிழக முதல்வர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”.

நாயகியாக நிதி அகர்வால் நடிக்க வில்லனாக ஆரங் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் கலையரசன் நடித்துள்ளார்.

இப்படம் உலகமெங்கும் நாளை நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “கலகத் தலைவன்” திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார்.

படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக “கலகத் தலைவன்” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நாளை நவம்பர் 18 ஆம் முதல் உலகமெங்குமுள்ள ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது ‘கலகத் தலைவன்’.

‘வாத்தி’ ரிலீஸ் தள்ளிவைப்பு.; சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வருகிறார் தனுஷ்

‘வாத்தி’ ரிலீஸ் தள்ளிவைப்பு.; சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வருகிறார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்த படம் தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.

தனுஷ் எழுதிய ‘வாத்தி’ படத்தின் முதல் பாடலான ‘வா.. வாத்தி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் டிசம்பர் 2 ரிலீஸ் தேதியை மாற்றி அடுத்த ஆண்டு 2023 பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 17 நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush film vaathi to release on sivakarthikeyan’s birthday

நடிகை மகாலட்சுமி ரவீந்திரன் கர்ப்பமாக இருக்கிறாரா ?

நடிகை மகாலட்சுமி ரவீந்திரன் கர்ப்பமாக இருக்கிறாரா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘முருங்காக்கை சிப்ஸ்’ தயாரிப்பாளரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு, மகாலட்சுமி திருமணமான மூன்று மாதங்களில் கர்ப்பமாக இருக்கலாம் என்ற ஊகங்களை எழுப்பியுள்ளது.

இருவரும் அடிக்கடி வெளியில் சென்று அதனை பிறகு போஸ்ட் செய்வது வழக்கம் .

சமீபத்திய போஸ்ட் பார்க்கும்போது மஹாவின் வயிற்றில் குழந்தை இருப்பது போன்று தோன்றுகிறது.

இருப்பினும், வெளிப்படையாகப் பேசும் தம்பதிகள் இது குறித்து வாய் திறக்கவில்லை, நடிகைக்கு ஏற்கனவே முந்தைய திருமணத்தில் ஒரு மகன் உள்ளார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் இணையும் சிவராஜ்குமார்..

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் இணையும் சிவராஜ்குமார்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில்,ரஜினிகாந்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தில் சிவராஜ்குமார் தமிழில் அறிமுகமாகிறார்.

இப்படத்தில் சிவராஜ்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார், மேலும் அவரது பகுதிகளின் படப்பிடிப்பை இந்த மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

இப்படம் 2023 கோடையில் பெரிய திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Shivarajkumar joins Rajinikanth’s ‘Jailer’

LOVE TODAY ஹீரோவை ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்.; கடுப்பான பிரதீப் செய்த காரியம்!

LOVE TODAY ஹீரோவை ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்.; கடுப்பான பிரதீப் செய்த காரியம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதீப் நாயகனாக நடித்து இயக்கிய ‘லவ் டுடே’ படம் மெகா ஹிட்டானது. ரசிகர்கள் முதல் திரையிலகினர் வரை படக்குழுவை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா பற்றி பிரதீப் தவறாக ஒரு பதிவிட்டதாக பதிவு வைரலானது.

இத்துடன் பல வருடங்களுக்கு முன் பிரதீப் சில பிரபலங்கள் பற்றி போட்ட பேஸ்புக் பதிவுகளை வைத்து அவரை சமூக வலைத்தளங்களில் ‘டிரோல்’ செய்து வந்தனர்.

எனவே தன்னுடைய பேஸ்புக் பக்கத்தையே நீக்கிவிட்டார் பிரதீப் ரங்கநாதன்.

இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில்…

“இணையத்தில் சுற்றி வரும் பதிவுகள் போட்டோஷாப் எடிட்டிங் செய்யப்பட்டவை.

பதிவுகளில் ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் என்னுடைய பேஸ்புக் பக்கத்தை டிஆக்டிவேட் செய்துட்டேன்.

மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

என்னுடைய சில பதிவுகள் உண்மையானவைதான். ஆனால், கடுமையான வார்த்தைகள் கொண்டவை போலியானவை.

ஒரு கட்டத்தில் நானும் தவறு செய்துள்ளேன். வயதுக்கு ஏற்ப நாமும் மாறுவோம், கற்றுக் கொள்வோம்,

இப்போது ஒவ்வொரு நாளும் சிறந்த மனிதனாக முயற்சி செய்கிறேன்,” என விளக்கம் கொடுத்துள்ளார் இந்த உத்தம பிரதீப்.

More Articles
Follows