விஜய்சேதுபதிக்கு ஆத்ம திருப்தி கொடுத்த *மேற்குத் தொடர்ச்சி மலை*

Vijay Sethupathi talks about his production Merku Thodarchi Malai movieநடிகர் விஜய்சேதுபதி தனது சொந்த தயாரிப்பில் மேற்குத் தொடர்ச்சி மலை என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.

இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை லெனின் பாரதி இயக்கியுள்ளார்.

இதில் தேனி அந்தோணி ராஜ் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் காயத்ரி கிருஷ்ணா, அபு வலையன்குளம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பல்வேறு நாடுகளில் இப்படம் திரையிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் விஜய் சேதுபதி, இப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது… “இந்த படம் எளிய மக்களுக்கான படம். ரொம்ப அழகா வந்திருக்கு, என்னை பொறுத்தவரைக்கும் இந்த மாதிரி படம் செய்ததில்லை. ஆத்ம திருப்தியோடு இருக்கிறேன்.

இந்த படத்தின் கதையை கேட்டு இசையமைத்து கொடுத்த இசைஞானி இளையராஜாவிற்கு நன்றி. படம் உங்களிடம் நிறைய பேசும்” என தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi talks about his production Merku Thodarchi Malai movie

Overall Rating : Not available

Related News

Latest Post