அல்லு அர்ஜுனுக்கும் வில்லனாகிய மக்கள் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி நடிகராக இருந்தபோதே பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.

மேலும் தெலுங்கில் வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் உப்பெண்ணா படத்தில் வில்லன் வேடம் ஏற்று இருக்கிறாராம் மக்கள் செல்வன்.

இந்த நிலையில் அல்லுஅர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படத்திலும் வில்லனாக கமிட் ஆகியுள்ளார்.

ராஷ்மிகா நாயகியாக நடிக்க ரங்கஸ்தலம் படத்தை இயக்கிய சுகுமார் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படம் தெலுங்கில் விஜய்சேதுபதியின் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi play the baddie in Allu Arjuns film

சிபிராஜின் ‘கபடதாரி’யில் இணைந்தார் விஸ்வரூப நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்து வரும் படம் கபடதாரி.

இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்த படம் கன்னடத்தில் வெளியான கவலுதாரி படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

இப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெயினெர்ஸ் மற்றும் டிஸ்டிபூயூட்டர்ஸ் சார்பாக தனஞ்செயன் தயாரித்து வருகிறார்.

மேலும் இயக்குநர் ஜான் மகேந்திரன் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளனர்.

சைமன் கே.கிங் இசையமைக்க, ரசமதி ஒளிப்பதிவு செய்ய வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் ‘கபடதாரி’ படத்தில் ‘விஸ்வரூபம்’ பட நாயகி பூஜா குமார் ஒரு முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளார்.

Viswaroopam heroine Pooja Kumar joins with Sibiraj in Kabadathari

வைகை புயல் வடிவேலுக்கு வாய்ப்பளிக்கும் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவே மறக்க முடியாத காமெடியன்களில் மிக முக்கியமானவர் வடிவேலு.

இன்றைய படங்களில் இவர் இடம் பெறாவிட்டாலும் இவர் இல்லாத இண்டர்நெட் இல்லை. மீம்ஸ் இல்லை.

காமெடி சேனல்கள் இல்லை என்னுமளவுக்கு வடிவேலுவின் படங்கள் தான் ஹைலைட்.

இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சினையால் புதிய படங்களில் நடிக்கவில்லை.

சக்தி சிதம்பரம் இயக்கவுள்ள பேய் மாமா படத்திலும் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபு தான் நடிக்கிறார்.

இந்த நிலையில் கமல் நடிப்பில் உருவாகவுள்ள தலைவன் இருக்கிறான் படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Vadivelu team up with Kamal in Thalaivan Irukkindran

ரஜினியின் ‘பாபா’ வழியில் நஷ்டத்தை ஈடு கட்டும் சிரஞ்சீவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக சினிமா வரலாற்றிலேயே தன்னுடைய பாபா படம் தோல்வியை தழுவியதால் தியேட்டர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்தவர் ரஜினிகாந்த்.

வேறு எந்த தயாரிப்பாளரும் நடிகரும் நஷ்டத்தை இதுபோல் ஈடுகட்டியதாக வரலாறு இல்லை.

இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவியும் தன்னுடை சைரா நரசிம்ம ரெட்டி படத்தால் நஷ்டமடைந்தவர்களுக்கு பணத்தை திருப்பி தரவிருக்கிறாராம்.

சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, விஜய்சேதுபதி, அமிதாப்பச்சன், சுதீப் ஆகியோர் நடித்த ‘சைரா’ படம் தெலுங்கில் வெற்றி பெற்றாலும் மற்ற மாநிலங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது.

மற்ற மாநிலங்களில் படத்தை வெளியிட்டவர்கள் நஷ்டம் அடைந்ததால் அவர்களுக்கு தயாரிப்பாளர் ராம்சரண் பணத்தை திருப்பி தரவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Chiranjeevi going to give back money for Syeraa loss

ஆன்லைன் ஷாப்பிங்.; விஜய்சேதுபதி விளம்பரத்திற்கு எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

இதனிடையில் விளம்பர படங்களிலும் தலை காட்டி வருகிறார்.

இந்த நிலையில் ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விற்கும் ஒரு நிறுவனத்திற்கு விளம்பர மாடலாக தோன்றியுள்ளார்.

சினிமாவிலும் நிஜத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசும் மக்கள் செல்வன் இப்படி செய்யலாமா?

உள்ளூர் வியாபாரிகளை அழிக்க வரும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு விஜய்சேதுபதி ஆதரவாக செயல்படலாமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

என்ன செய்ய போகிறார்? விஜய்சேதுபதி

Vijay Sethupathis Online shopping advt into controversy

லட்சுமி குறும்பட நடிகை லட்சுமி பிரியாவுக்கு கல்யாணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்தினம் பார்த்தேனே என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி பிரியா சந்திரமவுலி.

ரிச்சி உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

இருந்தபோதிலும் லட்சுமி என்ற குறும்படத்தின் மூலம் மிகப்பெரிய புகழை அடைந்தார். இந்த குறும்பட பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் எழுத்தாளரும் நாவலாசிரியருமான வெங்கடராகவன் சீனிவாசன் என்பவரை திருமணம் செய்துள்ளாராம் இந்த நடிகை.

Lakshmi short film fame Lakshmi Priya marriage news

More Articles
Follows