தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘அஜினோமோட்டோ’.
இதில் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி ரேமா நடித்திருக்கிறார். இவர்களுடன் அனந்த் நாக், பிரான்சு திவாரி, ஆராத்யா, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. எம். உதயகுமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை எம். எஸ். ஸ்ரீநாத் மேற்கொண்டிருக்கிறார்.
கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தத்தாத்ரே ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவராஜ் பன்னீர்செல்வம் மற்றும் ஆ. தமிழ் செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில்…
” ‘அஜினோமோட்டோ’ என்பது சுவையை அதிகரிக்கக்கூடியது. ஆனால் அது மனிதர்களை மெதுவாக கொல்லும் விஷம். இதனை மையப்படுத்தி ‘அஜினோமோட்டோ’ படத்தின் கதை தயாராகியிருக்கிறது.
கதையில் நடைபெறும் சில சம்பவங்கள், கதாபாத்திரங்களுக்கு, அந்த சமயத்தில் நல்லதாகத் தோன்றும். ஆனால் பிறகு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
அதன் பின் விளைவுகளும் கடுமையாக இருக்கும். அது என்ன? என்பதை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருப்பதே இப்படத்தின் திரைக்கதை.
மேலும் இது போன்ற அனுபவங்களை, கழுகு கண் பார்வையுடனான திரைக்கதையாக விவரிக்கும் போது, பார்வையாளர்களுக்கு புது வகையான அனுபவம் கிடைக்கும். ” என்றார்.
அஜினோமோட்டோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெறும் நாயகனின் தோற்றமும், இணையத்தில் வெளியாகி இருக்கும் மோஷன் போஸ்டரும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. இதில் பெண்ணின் பின்னழகில் கிதார் படம் இணைக்கப்பட்டுள்ளது. அதில் கிதாரை வாசிக்கிறார் நாயகன்.
‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கும், மோஷன் போஸ்டருக்கும் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது.
Vijay Sethupathi launches Motion Poster of Ajinomoto
Ajinomoto – A Crime Thriller
This Movie had been Directed By Debutant Director Mathiraj iyamperumal, Under The Banner of Dattatrey Studios by Sivaraj Panneerselvam and A. Thamizh Selvan. This Film has Talented and Young Energetic Cast and Technical Crew On Board with K. Gangadaran As Director Of Photography, D. M UdhayKumar As Music Director and M. S Srinath as Film Editor.
R. S. KARTHIIK Plays as Protoganist with Gayathri Rema, Aradhya, Shyam, Ananth Nag, Pranshu Tiwari as the Main Characters.
Here is the motion poster & the first look of #AjinoMoto ☺️
#AjinoMotoFirstLook
@KarthiikPK @GayatriRema
@Dir_Mathirajoff @catcharadya
@ananthnag24 @Music_UdhayDM
@Dattatreyone @Gangadarandop
@MSSRINATH3 @ilayaa6
@ShivaDattatrey @MrTamilSelva
@murukku_meesaya
@ProSrivenkatesh https://t.co/urCVzJ9FKI