றெக்க பறந்துருச்சு… விஜய்சேதுபதியின் அடுத்த அதிரடி என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரை டஜன் படங்களுக்கு மேலாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

ஒவ்வொரு படத்தை கிட்டதட்ட 20 நாட்கள் இடைவெளியில் வெளியிட்டு வருகிறார்.

இன்று ரத்தினசிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள றெக்க வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சீனுராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

தற்போது இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சீனுராமசாமி.

இடம் பொருள் ஏவல் வெளியிட்டுக்கு தயாராகி விட்டது.

படத்தின் ரிலீஸ் தேதியை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவிக்கும்.

றெக்கைக்கு அடுத்த படமாக அது அமையும். என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிம்புவுடன் கைகோர்க்கும் ஏஆர் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் 3 வேடம் ஏற்று நடித்து வருகிறார்.

யுவன் சங்கர் இசையமைக்கும் இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா நாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்நிலையில் சிம்பு ஏற்றுள்ள மதுரை மைக்கேல் கேரக்டரின் டீசரை அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கும் சமயத்தில் 12 மணிக்கு வெளியிட உள்ளனர்.

இதை ஏ.ஆர். முருகதாஸ் வெளியிடவிருக்கிறாராம்.

மீண்டும் ‘ரெமோ’… சிவகார்த்திகேயனுடன் பி.சி. ஸ்ரீராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ரெமோ இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது.

அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து விரைவில் மோகன்ராஜா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவருடன் நயன்தாரா, ஸ்நேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்திற்கும் பி.சி.ஸ்ரீராமே ஒளிப்பதிவு செய்கிறார்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் டிஜிட்டல் கேமராவிற்கு பலரும் மாறியுள்ள நிலையில், பி.சி.ஸ்ரீராம் இப்போதும் பிலிம் கேமராவில் பணி புரிகிறார்.

எனவேதான் அவரால் இந்தளவு குவாலிட்டியை கொடுக்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெமோ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சியளித்த தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மை காலமாக நமக்கு தெரியாத தமிழ் சொற்களாக இருந்தாலும், அதை தமிழ் படங்களுக்கு தலைப்பாக வைத்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்குதான்.

ஆனால் இன்று வெளியாகியுள்ள ரெமோ படத்திற்கு இச்சலுகை கிடைக்காது என சொல்லப்பட்டது.

காரணம் ரெமோ தமிழ் சொல் அல்ல என்றும் பரவலாக பேசப்பட்டது.

ஆனால் எவரும் எதிர்பாராத வண்ணம், இப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இது ரெமோ குழுவினருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

பல சமூக கருத்துக்களை கொண்ட ஜோக்கர் என்ற படத்திற்கு இச்சலுகை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோக்கர் தமிழ் வார்த்தை அல்லவே.

மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணையும் ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் படங்களில் எப்போதும் பாடல் படு ஸ்பெஷலாக இருக்கும்.

அப்படி இருந்தும், விஜய் நடிப்பில் வெளியான உதயா மற்றும் ‘அழகிய தமிழ் மகன் ஆகிய இரு படங்களுக்கு மட்டுமே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.

அட்லி இயக்கவிருப்பதாக கூறப்படும் இப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களாம் தயாரிப்பு குழுவினர்.

எனவே, விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

பாகுபலி புகழ் எஸ்எஸ் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கான ஸ்க்ரிப்ட்டை எழுதியிருக்கிறார்

ரஜினிக்காக வழிவிட்டு ஒதுங்கும் பாலிவுட் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி படம் வருகிறது என்றால், மற்ற படங்கள் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு வெளியாக போவதில்லை.

கபாலி படம் ரிலீஸ் நாளன்று அறிவிக்கப்படாத விடுமுறை நாள் போலவே காணப்பட்டது.

அப்படி ஒரு எதிர்பார்ப்பு ரஜினி படத்திற்கு என்றைக்கும் இருந்து வருகிறது.

இந்நிலையில், பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கும் கோல்மால் படத்தின் நான்காம் பாகமான கோல்மால் அகையின் படத்தை இயக்க இருக்கிறார்.

இதில் அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை அடுத்த ஆண்டு 2017ஆம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தார்களாம்.

ஆனால் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தையும் தீபாவளிக்கு வெளியிடவிருப்பதை அறிந்த, இவர்கள் ‛கோல்மால் அகைன்’ படத்தின் ரிலிஸ் தேதியை தள்ளி வைத்து இருக்கிறார்களாம்.

More Articles
Follows