சிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா போல பாசமலராகும் விஜய்சேதுபதி மஞ்சிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாசமலர் படம் வந்த காலம் முதல் அண்ணன் தங்கை சென்டிமெண்ட்டுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் மவுசுதான்.

நம் குடும்பத்திலும் அப்படியொரு அண்ணன் தங்கை இருக்கமாட்டார்களா? என பலரும் ஏங்குவதால் இதுபோன்ற சென்டிமெண்ட் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுகிறது.

விஜய்ய்கு வேலாயுதம், திருப்பாச்சி படங்களை சொல்லலாம். அஜித்துக்கு வேதாளம் படத்தையும் சிவகார்த்திகேயனுக்கு நம்ம வீட்டு பிள்ளை படத்தை சொல்லாம்.

தற்போது இந்த தங்கை சென்டிமெண்ட் ரூட்டில் விஜய்சேதுபதியும் இணைந்துள்ளார்.‘

விஜய்சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்தில்தான் இந்த அண்ணன் தங்கை செண்டிமெண்ட்.

டில்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கும் இந்த படத்தில் பார்த்திபன் வில்லனாகவும் அதிதிராவ் நாயகியாக நடித்துள்ளனர்.

இதில் விஜய்சேதுபதிக்கு தங்கையாக மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறாராம்.

விஜய் படத்தில் நடித்தற்காக வருத்தப்படும் அஜித் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் படத்தில் நாம் நடிக்க மாட்டோமா? என பல கலைஞர்கள் காத்திருக்கும் நிலையில் விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக தான் வருத்தப்படுவதாக அக்‌ஷரா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

அவரின் சமீபத்திய பேட்டியில்… துப்பாக்கி படத்தில் நடந்த ஒரே நல்ல விஷயம் விஜய், முருகதாஸ், சந்தோஷ் சிவன் ஆகியோரது அறிமுகம் நட்பு கிடைத்தது.

அதில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன். காஜல் அகர்வாலின் தோழியாக நடிக்க என்னை அழைத்தனர். ஆனால் படத்தில் அப்படி இல்லை.

அது பற்றி எந்த கோபமும் இல்லை. இப்போதும் அவர்கள் அழைத்தாலும் நடிக்க நான் ரெடி” என கூறியுள்ளார்.

உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமானவர் அக்‌ஷரா கவுடா. பிறகு விஜய்யின் துப்பாக்கி மற்றும் அஜித்தின் ஆரம்பம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் ஜெயம் ரவியின் போகன், ஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவ திற, சந்தீப் கிஷானின் மாயவன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் பெயரில் சாலை & ரவுண்டானா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரிக்கெட் வீர்ர் எம்எஸ் தோனியின் வாழ்க்கை படத்தில் தோனியாக வாழ்ந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்.

35 வயதான இவர் கடந்த ஜூன் 14-ந் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

பாலிவுட் வாரிசு நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தினால் அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து தற்கொலைக்கான உண்மை காரணத்தை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது இந்தியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பீகாரில் அமைந்துள்ள சுஷாந்தின் சொந்த ஊரான புர்னியாவில் இருக்கும் ஒரு சாலைக்கு சுஷாந்த் சிங்கின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

மேலும் அங்கு அமைந்துள்ள போர்டு நிறுவனத்தின் ரவுண்டானாவிற்கு சுஷாந்த் சிங் ராஜ்புட் ரவுண்டானா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.

பெயர் மாற்றப்பட்ட சாலையை அந்த பகுதி மக்கள் திறந்து வைத்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

சத்யா பட கமல்ஹாசன் கெட்அப் ஏன்..? விஜய்சேதுபதி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் தான் நடிக்கும் கேரக்டருக்காக தன்னையே மாற்றி கொள்ளும் திறமையான நடிகர்கள் ஒரு சிலரே உள்ளனர்.

அதில் குறிப்பிடும் படியாக வளர்ந்து வருபவர் நடிகர் விஜய்சேதுபதி.

தனக்கென எந்த ஹீரோ இமேஜ்ஜீம் வைத்துக் கொள்ளாமல் வில்லன், கெஸ்ட் ரோல் என எந்த கேரக்டர் என்றாலும் பின்னியெடுக்கிறார்.

கடந்த மாதத்தில் சத்யா பட கமல்ஹாசன் கெட்டப்பில் விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

எனவே கமலின் சத்யா படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதி நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவியது.

இதுகுறித்து தன் சமீபத்திய பேட்டியில் விளக்கமளித்துள்ளார் விஜய் சேதுபதி.

அதில்… “தென்மேற்கு பருவக்காற்று கிளைமேக்ஸ் காட்சிக்காக மொட்டை அடித்தேன். அதன் பிறகு மணிகண்டன் இயக்கும் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது.

எனவே அந்த படத்திற்கான போட்டோஷூட் நடைபெற்றது. அப்போது கொஞ்சம் முடி வளர்ந்திருந்தது.

அப்போது எடுத்த படங்களை சமீபத்தில் நானும் சில நண்பர்களுக்கு அனுப்பினேன். அது சமூகவலைதளங்களில் பரவிவிட்டது” என தெரிவித்துள்ளார் மக்கள் செல்வன்.

Vijay Sethupathi reveals about Sathya Kamal get up stills

கணவர் இப்படி இருக்கனும்..; ரகுல் ப்ரீத் சிங்கின் ‘அடேங்கப்பா’ கன்டிசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரகுல் ப்ரீத் சிங்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் தன் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

“திருமணம், காதல் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அவை மிக அழகானவை. ஒருவரைக் காதலிக்கும் போது முழு மனதுடன் காதலியுங்கள்.

“எனக்கானவர் உயரமாக இருக்க வேண்டும். நான் ஹீல்ஸ் அணிந்திருந்தாலும் அவரை அண்ணாந்து தான் பார்க்க வேண்டும். புத்திசாலித்தனம் உடையவராகவும், வாழ்க்கையில் லட்சியம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Rakul Preet Singh talks about her expectations

சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் மில்டன்.; சூர்யா வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூகத்தில் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களை மையமாக்கி எடுத்து வெற்றி பெற்ற படம் ‘கோலி சோடா’.

ஒரு சாதாரண மனிதன் எடுக்கும் விஸ்வரூபத்தை கதையாகக் கொண்ட படம் ‘கடுகு’.

இப்படங்களை விஜய் மில்டன் இயக்கி இருந்தார். விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் இப்படங்கள் பேசப்பட்டன.

அக்கதைகளின் ஆழத்தை அறிந்த பலரும் பாராட்டினார்கள்.

தமிழில் தனக்கான ஓர் அடையாளத்தைப் பெற்றுள்ள விஜய்மில்டன் இப்போது கன்னடத் திரை உலகத்திற்குள் நுழைகிறார்.

இவர் இயக்கும் இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் சிவராஜ்குமார் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “டகரு” ( Tagaru ) . இதில் வில்லனாக நடித்து மக்களிடம் பரபரப்பாக பேசபட்டவர் டாலி தனஞ்ஜெயா. இந்த இருவரும் மீண்டும் சேர்ந்து எப்பொழுது நடிப்பார்கள் என்ற எதிபார்ப்பு மக்களிடம் அதிகமாக இருந்தது.

அதனால், இருவரையும் சேர்த்து நடிக்க வைக்க பல பேர் முயர்ச்சித்தார்கள். டைரக்டர் விஜய்மில்டன் சொன்ன கதை பிடித்து போக மீண்டும் சிவராஜ்குமார் – டாலி தனஞ்ஜெயா ( dolly dhananjeya ) இப்படம் மூலம் ஒன்றாக இணைகிறார்கள். இதை கேள்விபட்ட கன்னட திரை உலகில் இப்போதே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இப்படத்தைத் தமிழில் ‘கோலிசோடா’ , கடுகு’ போன்ற படங்களைத் டைரக்ட் செய்த விஜய்மில்டனின் – ரஃப் நோட் (rough note ) தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த நிறுவனம் முதன் முறையாக கன்னடத்தில் , கிருஷ்ண சர்தக்கின் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது.

கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி. விஜய்மில்டன். இசை ஜெ.அனூப் சீலின்.

இதன் அறிவிப்பை, சிவராஜ்குமார் பிறந்த நாளான இன்று ஜூலை 12 நடிகர் சூர்யா வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

Vijay Milton joins Kannada Superstar Sivarajkumar

More Articles
Follows