சங்கத்தமிழன் ரிலீஸ்; 41000 பனை விதைகளை விதைத்த விஜய்சேதுபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் அடைந்ததையொட்டி தமிழக சினிமா ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்களுக்கு கட்அவுட் பேனர் வைப்பதை தவிர்த்து வருகின்றனர்.

புதிய படம் ரிலீசானால் கூட பேனரை வைப்பதை தவிர்த்து அதற்கு மாறாக சமூக நல காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் படம் வருகிற நவம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது.

இதனை முன்னிட்டும் விஜய்சேதுபதியின் 41 ஆவது பிறந்தநாளை ஒட்டியும் நீர் வளத்தை மேம்படுத்தும் வகையில் இன்று மணிமங்கலம் ஏறி கரசங்கால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41,000 பனை விதைகள் விதைக்கும் விழாவை நடத்தியுள்ளனர்.

இன்று நடைபெற்ற இவ்விழாவில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி அவர்கள் விழாவை தொடங்கி வைத்தார்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை சார்பாக சங்கத்தமிழன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு மற்றும் விஜய் சேதுபதி அவர்களின் 41 ஆவது பிறந்தநாளை ஒட்டி நீர் வளத்தை மேம்படுத்தும் வகையில் இன்று மணிமங்கலம் ஏறி கரசங்கால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41,000 பனை விதைகள் விதைக்கும் விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி அவர்கள் விழாவை தொடங்கி வைத்தார்.

Vijay Sethupathi fans doing Social activities

கேஜிஎஃப் ஹீரோவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட சினிமா படங்கள் பற்றி தெரியாதவர்களே கூட உச்சரித்த ஒரே பெயர் கேஜிஎப்.

கடந்தாண்டு வெளியான கேஜிஎப் பார்ட் 1 மூலம் நாடு முழுக்க பிரபலமானார் ஹீரோ யஷ்.

இப்பட 2ஆம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு ராதிகா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு தற்போது ஆய்ரா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இவரின் விரலை பிடித்தவாரு இருக்கும் தன் குழந்தை படத்தை வெளியிட்டுள்ளார் யஷ்.

ஜெயலலிதா பயோபிக் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரை எதிர்த்துப் பேசவே பலரும் பயந்தனர். அப்படியொரு இரும்பு பெண்ணாக வாழ்ந்து வந்தார்.

எனவே அவர் மறைந்த பின் அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க பலரும் முயற்சித்து வருகின்றனர்.

ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இதே படம் ஹிந்தி ஜெயா என்ற பெயரில் உருவாகிறது.

இவரைப் போல குயின் என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக கௌதம் மேனன் இயக்கி வருகிறார்.

இதில் ஜெயலலிதாவாக பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் தலைவி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா.

அதில் தனது அனுமதியின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்ககூடாது. மேலும், ஜெயலலிதாவின் கண்ணியம் பாதிக்கப்படாமல் படம் எடுக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தீபா மனுவில் தெரிவித்துள்ளார்.

BREAKING சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் சினிமா துறையில் 44 ஆண்டுகளை கடந்துள்ளார்.

அவர் சினிமா துறையில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும் இந்திய அரசின் உயரிய விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார்.

தமிழ் சினிமாவை இந்திய அளவிலும் உலகளவிலும் கொண்டு சென்றுள்ளார் சூப்பர் ஸ்டார். ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் அவருக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன.

இந்த நிலையில் திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை நடிகர் ரஜினிகாந்திற்கு அறிவித்துள்ளது மத்திய அரசு.

கோவாவில் நடைபெறவுள்ள 50வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த விருதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த சர்வதேச திரைப்பட விழா கோவாவில் (நவ. 20 முதல் 28 வரை ) 8 நாட்கள் நடைபெற உள்ளது.

தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் இந்த விழா நடைபெறுகிறது.

இதனையடுத்து சில நொடிகளில் 2019 சர்வதேச திரைப்பட விழாவில் எனக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Central Govt announced Life time Achievement Award for Rajinikanth

இந்துக் கடவுள் பெயரில் டிவி சேனல்..? ரஜினி ரசிகர்கள் வருத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2017 டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் வருகையை உறுதி செய்தார் நடிகர் ரஜினிகாந்த்.

2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். போர் (தேர்தல்) வரும் போது களத்தில் இருப்போம் என அறிவித்தார்.

தற்போது தர்பார், தலைவர் 168 என அடுத்தடுத்த படங்களில் ஒப்புக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தாலும் இடையில் கட்சி பணிகளையும் ஆலோசித்து வருகிறார்.

விரைவில் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு டிவி சேனலை தொடங்கவுள்ளதாக தெரிகிறது.

இது ரஜினி மக்கள் மன்றம் செய்திகளை மக்களுக்கு சென்றடைய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டிவி சேனலுக்கு தலைவர் டிவி, ரஜினி டிவி என்ற பெயர்களில் ஒன்று வைக்கப்படலாம் என முன்பு கூறப்பட்டது.

தற்போது கடவுள் பெயரில்… அதாவது ராகவேந்திரா டிவி அல்லது பாபா டிவி என்ற பெயர் வைக்கப்படலாம் என தகவல்கள் வருகின்றன.

இதனையறிந்த ரஜினி ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் ரஜினி ரசிகர்களில் பல மதங்களை சார்ந்தவர்களும் உள்ளனர். சிலர் கடவுளை மறுக்கும் நாத்திகவாதிகளும் உள்ளனர். ஆனால் அவர்கள் ரஜினியை தெய்வமாக வணங்குகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி அவர்கள் ஒரு இந்து கடவுளின் பெயரை தன் டிவி சேனலுக்கு வைத்தால் அது மற்ற மத ரசிகர்களை வருத்தமடைய செய்யும்.

எனவே தங்களுக்கு பிடித்தமான ரஜினி பெயரில் அல்லது தலைவர் பெயரில் டிவி சேனல் இருந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்களாம்.

Rajini fans refuse to accept TV Channel brand in Gods name

‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுடன் இணையும் ரேவதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சபாஷ் நாயுடு படம் என்ன ஆச்சு? என்பதே யாருக்கும் தெரியாத நிலையில் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார் கமல்.

லைகா தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர்கள் நடிப்பார்கள் எனவும் கூறப்பட்டது.

அதாவது நடிகர் சயீப் அலிகான் மற்றும் அமீர்கான் இணைவார்கள் என சொல்லப்பட்டது.

மேலும் இரட்டை வேடங்களில் கமல் நடிப்பார் எனவும் தெரிகிறது.

இந்த நிலையில் கமல் ஜோடியாக ரேவதி நடிப்பார் என தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கெனவே புன்னகை மன்னன், தேவர் மகன் உள்ளிட்ட பல படங்களில் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Revathi joins Kamal Haasans Thalaivan Irukkindraan

More Articles
Follows