ரஜினியுடன் நடிக்க விறுவிறுப்பாக படங்களை முடிக்கும் விஜய்சேதுபதி

Vijay Sethupathi completing his movie promotion in hurry because of Rajiniதலைவர் 165 என்று தற்காலிமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கவுள்ளார் விஜய்சேதுபதி.

இவர் முன்னணி ஹீரோவாக வலம் வந்தாலும் இப்படத்தில் இவர் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் முதல் கட்ட சூட்டிங்கை அண்மையில் டார்ஜிலிங்கில் முடித்தார் கார்த்திக் சுப்பராஜ்.

விரைவில் இதன் 2ஆம் கட்ட சூட்டிங்கை துவங்கவுள்ளார். இதுவும் பட இந்தியாவில் இருக்கும் எனத் தெரிகிறது.
அதில் விஜய்சேதுபதி கலந்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

ரஜினியுடன் முதன் முறையாக நடிக்கவுள்ளதால் அதில் எந்த வித பிரச்சினையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தன் கை வசம் உள்ள ஜீங்கா, 96, சீதக்காதி ஆகிய படங்களின் புரோமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு விறுவிறுப்பாக முடித்து வருகிறாராம்.

கடந்த இரண்டு நாட்களில் இந்த 3 பட செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

நேற்று ஜுங்கா பட பிரஸ் மீட் நடைபெற்றது. அத்துடன் 96 படத்தின் டீசரும் மாலை வெளியானது.
தற்போது சீதக்காதி படத்தின் மேக்கிங் வீடியோ ஜுலை 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் 165 பட 3ஆம் கட்ட சூட்டிங்கை மதுரையில் நடத்தவுள்ளாராம் கார்த்திக் சுப்பராஜ்.

Vijay Sethupathi completing his movie promotion in hurry because of Rajini

Overall Rating : Not available

Related News

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரஜினியின் தலைவர்…
...Read More
காலா படத்தின் வெற்றியில் மிக மகிழ்ச்சியாக…
...Read More

Latest Post