மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்த பிளேபாய் போட்டோ கிராஃபர் ராமசந்திரன்

மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்த பிளேபாய் போட்டோ கிராஃபர் ராமசந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா லாக்டவுன் நேரத்தில் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்த ஒரு மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக விஜய்சேதுபதி நடிக்க ஒரு போட்டோ ஷூட் நடத்தப்பட்டது.

இந்த வித்தியாசமான ஷூட் & ஆல்பத்தை பிளேபாய் உள்ளிட்ட சர்வதேச மேகஸின்களின் புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன் என்பவர் இயக்கியிருந்தார்.

எல். ராமசந்திரன் & விஜய்சேதுபதி இணைந்த இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் வெளியாகி இணையத்தை கலக்கியது.

அதில் நடிகர் விஜய்சேதுபதி நீண்ட வெள்ளை தாடியுடன் கையில் ‘அ’, ‘ஓம்’ உள்ளிட்ட உயிர் எழுத்துக்களை வைத்து வித்தியாசமான முக பாவனைகளை கொடுத்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது.

நடிகர் விஜய்சேதுபதி மற்றும் புகைப்படக் கலைஞர் ராமசந்திரன் இணைந்துள்ள ‘மேன் ஆஃப் ஃபியூஷன்’ போட்டோஷூட் புகைப்படங்கள் மேக்கிங் வீடியோவுடன் வெளியாகியுள்ளது்

இதில் ஜாவா பைக்கில் பழைய 80ஸ் ஹீரோ போல மாறியிருக்கிறார் விஜய்சேதுபதி.

பிரபல மலையாள நடிகையும் மேக்கப் கலைஞருமான ரோஷ்னா அன் ராய் என்பவர்தான் இந்த ஷூட்டுக்கு விஜய்சேதுபதிக்கு ஒப்பனை செய்துள்ளார்.

இதன் பின்னணியில் பழைய பாடல் இசை ஒலிக்க மக்கள் செல்வனை வேற லெவலில் மாற்றி உள்ளனர்.

எல். ராமச்சந்திரன் யார்.?

கும்பகோணம் அருகேயுள்ள வலங்கைமான் ஊரில் பிறந்தவர் எல். ராமசந்திரன்.

உலகளவில் பிரபலமான பிளே பாய், மேக்ஸிம் உள்ளிட்ட மேகஸின்களுக்கு புகைப்படக் கலைஞராக பணியாற்றி புகழ்பெற்றவர்.

பெண்களை நிர்வாணமாக்கி அவர்களது மேனியில் ஓவியங்கள் வரைந்து புகைப்படங்களை கலை நயத்துடன் வித்தியாசமாக எடுப்பவர் இவர்.

யாஷிகா ஆனந்த், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட நடிகைகளை மிக அழகாக அவர்களே வியக்கும் வண்ணம் போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.

ராமச்சந்திரன் பல சாதனை படைக்க வாழ்த்துவோம்.

Vijay Sethupathi and Ramachandran team up again for Man of Fusion

தேர்தல் வேட்புமனு தாக்கல்..: 7255 மனுக்களில் 2171 மனுக்கள் நிராகரிப்பு.. 3663 மனுக்கள் ஏற்பு

தேர்தல் வேட்புமனு தாக்கல்..: 7255 மனுக்களில் 2171 மனுக்கள் நிராகரிப்பு.. 3663 மனுக்கள் ஏற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கியது.

அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் மனுதாக்கல் செய்தனர்.

கடந்த வெள்ளி (மார்ச் 19) மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.

ஏழாயிரத்துக்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.

வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 22ம் தேதி ஆகும்.

முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 25 பேர்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிடும் போடி நாயக்கனூர் தொகுதியில் 33 பேர்.

திமுக தலைவர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 41 பேர்

அமமுக தலைவர் தினகரனின் கோவில்பட்டி தொகுதியில் 19 பேர்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் 19 பேர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருவொற்றியூர் தொகுதியில் 24 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிகபட்சமாக கரூரில் 76 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில் சுயேட்சையாக மட்டும் 59 பேர் போட்டியிடுகின்றனர்.

இன்றைய நிலவரப்படி, மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட ஏழாயிரத்து 255 மனுக்களில் இரண்டாயிரத்து 171 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மூவாயிரத்து 663 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தலோடு இடைத் தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் 13 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.

இந்த தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த வசந்தகுமார் அவர்களின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.

Tamil Nadu Assembly Elections Nominations and Rejection

‘லாபம்’ படம் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடம்..; ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை

‘லாபம்’ படம் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடம்..; ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லாபம்’.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

தற்போது படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில்…

“இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது.

அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்றுதான் எங்கள் நிறுவனமும் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸூம் இணைந்து தயாரித்து விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாபம்’ திரைப்படம்.

இந்தப் படம் திரைக்கு வருவதற்கான இறுதிக்கப்பட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்தத் தருணத்தில் எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மறைவு மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

அதேசமயம், எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ‘லாபம்’ படத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார்.

எஞ்சியிருக்கும் சில பணிகளை எங்கள் படக்குழுவினரே முடித்து வெளியுடவுள்ளோம்.

அனைத்து பணிகளையும் முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும், அவரின் ரசிகர்களுக்கான திரைப்படமாக ‘லாபம்’ இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Laabam team’s tribute to Director SP Jananathan

மநீம கட்சி பொருளாளர் & பார்ட்னர் வீட்டில் ரெய்டு..; கமல் கருத்து என்ன.?

மநீம கட்சி பொருளாளர் & பார்ட்னர் வீட்டில் ரெய்டு..; கமல் கருத்து என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் கட்சி பொருளாளர் சந்திரசேகரனுக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் வீடுகளில், மூன்று நாட்களாக வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

அப்போது கணக்கில் காட்டப்படாத, 80 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அத்துடன் அதற்கான ஆவணங்கள் மற்றும் 11.5 கோடி ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது குறித்து மநீம தலைவர் கூறியதாவது…

ஒரு கம்பெனி ஆரம்பித்தவுடன் இவ்வளவு கொள்ளை லாபம் உடனே அடைய முடியாது.

அப்படி இருந்தால் ஒரு அமைச்சர், அவர் கம்பெனியில், 500 மடங்கு லாபம் வந்துவிட்டது என கணக்கு காண்பித்தது போல் இருக்கும்

நானும், 40 ஆண்டுகளாக கம்பெனி நடத்தி வருகிறேன்.

10 சதவீதம் லாபம் வந்தாலே பெரியது.

இந்த ரெய்டுக்குக் காரணம், தேர்தல் நேர வியாதியாக கூட இருக்கும்.”

என்று கூறினார் கமல்.

கமல்ஹாசனும் சந்திரசேகரும் இணைந்து, ‘ராஜ்கமல் பிரன்டையர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று ஒரு கம்பெனியை சமீபத்தில் தான் ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MNM leader Kamal Haasan slams the raid on party functionary, says All parties except BJP targeted

JUST IN தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று

JUST IN தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த மாதம் ஏப்ரல் 6ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது மற்றும்தேமுதிக.

இந்த கட்சி 60 இடங்களில் போட்டியிடுகின்றது.

இந்த நிலையில் தேமுதிகவின் துணைச் செயலாளர் எல்.கே சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனயில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DMDK LK Sudheesh tests positive for Corona

ஓடிடி தளத்திற்காக இறங்கி வந்த இயக்குனர்..; பரிதாப நிலையில் பாலா..?!

ஓடிடி தளத்திற்காக இறங்கி வந்த இயக்குனர்..; பரிதாப நிலையில் பாலா..?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா இசையில் விக்ரம் நடித்த ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குனர் பாலா.

நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன்… என வித்தியாசமான படைப்புகளை தந்து சிறந்த நடிகர்களை அடையாளம் காட்டினார்.

ஆனால் அவன் இவன், தாரை தப்பட்டை, நாச்சியார் படங்கள் தோல்வியை சந்திக்கவே பாலா துவண்டு போனார்.

அதுவரை ரீமேக் படங்களை இயக்காதவர் விக்ரமுக்காக தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தை துருவ் நடிப்பில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

ஆனால் இந்த படம் தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை என்பதால் படம் ரிலீசுக்கு ரெடியாக இருந்தும் ரிலீஸ் செய்யவில்லை.

அதன் பிறகு பாலா எந்த படத்தையும் இயக்கவில்லை.

தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக படம் இயக்கும் முடிவுக்கு வந்துவிட்டார் பாலா.

இதற்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை முடிந்துவிட்டதாகவும். விரைவில் அறிவிப்பு வெளிவரும் எனவும் சொல்லப்படுகிறது.

Director Bala’s next film for OTT ?

More Articles
Follows