அருவி படத்தில் பங்கு பெற்றதற்காக பெருமைப்படுகிறேன்: ஜெயம் ரவி

அருவி படத்தில் பங்கு பெற்றதற்காக பெருமைப்படுகிறேன்: ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi jayam raviகடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான படம் அருவி.

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய இப்படத்தில் அதிதிபாலன் என்ற அறிமுக நாயகி அருமையாக நடித்திருந்தார்.

மேலும் இப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நடிகர்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

இப்படம் ஆஸ்கர் பெற வேண்டும் என நடிகர் விஜய்சேதுபதி பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் ஜெயம்ரவி தன் பாராட்டில்.. இப்படத்தை நானும் ஒரு ரசிகனாக பார்த்து பங்கு பெற்றதற்காக பெருமைப்படுகிறேன் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் தன் புரொபைல் படத்தில் அருவி படத்தை வைத்துள்ளார் என்பதும் இங்கே கவனித்தக்கது.

Vijay Sethupathi and Jayam Ravi praises Aruvi movie

Jayam Ravi‏Verified account @actor_jayamravi
Proud to be a part of #aruvi movie.. as an audience

Vijay Sethupathi‏ @i_vijaysethu
I would be more than happy if #Aruvi movie deserves an oscar . To the makers and the girl as aruvi தலை வணங்குகிறேன்

ஒரே நேரத்தில் 3 ஹீரோக்களை இயக்கும் மெர்சல் அட்லி

ஒரே நேரத்தில் 3 ஹீரோக்களை இயக்கும் மெர்சல் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Mersal movie Atlee going to direct 3 herosராஜா ராணி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடித்த தெறி படத்தை இயக்கினார் அட்லி.

இப்படமும் வெற்றிப் பெற, மெர்சல் படத்தில் மீண்டும் விஜய்யை இயக்கினார் அட்லி.

இப்படத்திற்கு பாஜக.வினர் எதிர்ப்பு காட்டியதால் இதுவே படத்திற்கு விளம்பரமாகி இந்தியளவில் பிரபலமாகி ரூ. 250 கோடி வசூலை அள்ளியது.

எனவே அட்லியின் அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் தன் அடுத்த படத்தில் 3 நாயகர்களை அட்லி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

After Mersal movie Atlee going to direct 3 heros

காட்டேரி படத்தில் வைபவ் ஜோடியாக ஹன்சிகா

காட்டேரி படத்தில் வைபவ் ஜோடியாக ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vaibhav romance with Hanshika in Katteri movieசூர்யா நடிக்கும்,‘தானா சேர்ந்த கூட்டம்’, ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காட்டேரி ’.

இதில் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூ ட்யூப் ’ புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, இசையமைக்கிறார் பிரசாத்.

அண்மையில் இதன் தொடக்கவிழா ஸ்டீடியோ கிரீன் அலுவலகத்தில் எளிமையாக நடைபெற்றது.

இந்நிலையில் இதில் நாயகியாக நடிக்க ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறதாம்.

அவர் ஒப்பந்தம் ஆனவுடன் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Vaibhav romance with Hanshika in Katteri movie

சீனுராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படத்தில் உதயநிதி-தமன்னா

சீனுராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படத்தில் உதயநிதி-தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayanidhi stalin romance with Tamannah for Kanne Kalaimane movieசீனு ராமசாமி இயக்கிய ‘நீர்ப்பறவை’ படத்தை தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின்.

தற்போது இவர்கள் மீண்டும் இணையவுள்ளனர்.

இந்த முறை உதயநிதி நாயகனாக இணைய, சீனுராமசாமி படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்திற்கு ‘கண்ணே கலைமானே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தில் நாயகியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

தர்மதுரை படத்தில் தமன்னாவுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தவர் சீனுராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவாளராக ஜலந்தர் என்பவர் அறிமுகமாகிறார். இவர் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரிடம் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் இணையவுள்ளதாகவும் உதயநிதி விவசாயி ஆக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்சேதுபதியை வைத்து ‘மாமனிதன்’ என்ற படத்தை இயக்கி வரும் சீனுராமசாமி இந்த படத்தை 2018 ஜனவரி 19ல் தொடங்கவிருக்கிறார்.

Udhayanidhi stalin romance with Tamannah for Kanne Kalaimane movie

விக்ரம்-சூர்யா மோதல் களத்தில் குதிக்கும் அரவிந்த்சாமி-பிரபுதேவா

விக்ரம்-சூர்யா மோதல் களத்தில் குதிக்கும் அரவிந்த்சாமி-பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arvind Samy and Prabu deva clash with Suriya and Vikram in Pongal 2018வருடத்திற்கு எத்தனை பண்டிகை வந்தாலும் பெரும்பாலான படங்கள் பொங்கல் தினத்தை குறிவைக்க தவறுவதில்லை.

இதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து 4,5 நாட்கள் விடுமுறை வருவதே.

அடுத்த ஆண்டு 2018 பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக சில படங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

சூர்யா நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச்’, பிரபுதேவா நடிக்கும் ‘குலேபகாவலி’, அனுஷ்கா நடிக்கும் ‘பாக்மதி’ ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடாக வரவுள்ளன.

தற்போது இந்த மோதல் களத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படமும் இணைந்துள்ளது.

இத்துடன் இன்னும் சில படங்கள் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Arvind Samy and Prabu deva clash with Suriya and Vikram in Pongal 2018

சிவகார்த்திகேயன் படத்திற்கு பதிலாக சந்தானம் படம்; பிரபல தியேட்டர் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் படத்திற்கு பதிலாக சந்தானம் படம்; பிரபல தியேட்டர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanam and sivakarthikeyanகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் மற்றும் சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறது.

இந்த இரு படங்களுக்கும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளதால், படத்தை வெளியிட தியேட்டர்களிடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபலமான ரோகினி தியேட்டரில் வேலைக்காரன் படத்தை வெளியிட மாட்டோம் என அதிரடியாக அறிவித்துள்ளனர்.

விநியோகஸ்தர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு ட்விட்டர் பதிவில் சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்தை திரையிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Nikilesh Surya‏ @NikileshSurya

Actor @Siva_Kartikeyan #Velaikkaran will not see a release @RohiniSilverScr due to distributor non cooperation. #Aruvi continues with 4sh!

Nikilesh Surya‏ @NikileshSurya

Nikilesh Surya Retweeted Nikilesh Surya

Schedule for all other releases will go live shortly. Santhanam starrer #SPPR will play in the main screen now!

More Articles
Follows