தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
96, சூப்பர் டீலக்ஸ், ஜுங்கா, சீதக்காதி, சயீரா நரசிம்ம ரெட்டி (தெலுங்கு), டிராபிக் ராமசாமி, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.
மேலும் சீனுராமசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.
ரஜினியின் அடுத்த படத்திலும் முக்கிய கேரக்டரில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், விவசாயம் சம்பந்தப்பட்ட கதை ஒன்றிலும் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் அதை ஆண்டவன் கட்டளை படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு கடைசி விவசாயி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம்.
சில மாதங்களுக்கு முன் இந்த கதையை ரஜினியிடம் மணிகண்டன் கூறியதாகவும் செய்திகள் வெளியானது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Vijay Sethupathi act in Rajinis story will be directed by Manikandan