உலகளவில் சிறந்த நடிகராக *மெர்சல்* விஜய் தேர்வு: ஐரா அறிவிப்பு

Vijay selected as Best International Actor in IARA Awards 20182018ம் ஆண்டுக்கான IARA (International Achievement recogniton awards) லண்டன் மார்ஷ் வால் பகுதியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் செப்டம்பர் 22ல் நடைபெற்றது.

சர்வதேச கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் IARA விருதுகள் வழங்கப்படுகின்றன.

லண்டனை சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு இதனை நடத்தி வருகிறது.

இதில் உலக அளவில் தமிழ் நடிகர் விஜய் உள்பட 8 நடிகர்களின் பெயர்கள் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டன.

இந்தப் பட்டியலில் ‘ஸ்டார் வார்ஸ்’ புகழ் ஜான் போயிகா, ‘கெட் அவுட்’ திரைப்பட நடிகர் டேனியல் கலூயா, ஜாமி லோமஸ் (ஹொலியோக்ஸ்) கிரிஸ் அட்டோ (ஸ்விங்ஸ்) மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகர்களும் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து உற்சாகமடைந்த ரசிகர்கள் பெஸ்ட் இன்டர்நேஷனல் ஆக்டர் விஜய்(#BestInternationalActorVijay) என்ற ஹேஸ்ட்டேக்கை பகிர்ந்து வருகின்றனர். இது இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

மெர்சல் படத்தை அட்லி இயக்க ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தன் 100வது படைப்பாக தயாரித்திருந்தது.

Vijay selected as Best International Actor in IARA Awards 2018

Overall Rating : Not available

Related News

தெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு பிறகு…
...Read More
தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு விஜய்யை…
...Read More

Latest Post