‘வல்லரசு அப்புறம்; இப்போ நல்லரசு வேண்டும்..’ விஜய்

‘வல்லரசு அப்புறம்; இப்போ நல்லரசு வேண்டும்..’ விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay new stillsநாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் குறித்து தன் கருத்துக்களை அதிரடியாக அண்மைகாலமாக கூறிவருகிறார் இளைய தளபதி விஜய்.

ஜல்லிக்கட்டு போராட்டம், கருப்பு பணம் பற்றி பேசியிருந்த அவர் தற்போது விவசாயிகள் குறித்து பேசியுள்ளார்.

இன்று நடைபெற்ற ஒரு தனியார் விருது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் விஜய்.

அப்போது அவர் பேசியதாவது….

“விவசாயிகள் பிரச்சனைக்கு அவசியமாக மட்டுமல்ல அவசரமாகவும் தீர்வு வேண்டும்.

நமக்கு இப்போது 3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு நமக்கு தெரியாமல் போய்விட்டது.

நாம் நன்றாக இருக்கிறோம் ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை.

இது இப்படியே போனால், அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாமல் போகும் நிலைதான் ஏற்படும்.

அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகளே அதை இலவசமாக பெற ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள்.

“நாடு வல்லரசாவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாறவேண்டும்.” என பரபரப்பாக பேசினார் விஜய்.

கத்தி படத்தில் விவசாயிகளின் பிரச்சினைக்காக விஜய் பேசியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Vijay open talk about Farmers struggle in our nation India

கத்தி படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி கீழே…

vijay kaththi

ரஜினியை முதல்வர் மனைவி சந்தித்தன் ரகசியம் இதுதானா.?

ரஜினியை முதல்வர் மனைவி சந்தித்தன் ரகசியம் இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maharastra CM wife Rajini meetரஞ்சித் இயக்கும் ரஜினியின் காலா சூட்டிங் இரண்டு வாரங்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதனிடையில் மகாராஷ்ட்ர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா ரஜினியை சந்தித்து பேசினார் என்பதை நாம் பார்த்தோம்.

இது தொடர்பான படங்களும் வெளியாகி அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்ததாக முதல்வர் மனைவி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் காலா படத்தில் அம்ருதா ஒரு பாடலை பாடக்கூடும் என மும்பை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதுதொடர்பாகதான் ரஜினியை சந்தித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

பாட்டு, மாடலிங், சினிமா என ஆர்வம் கொண்டவராம் அம்ருதா.

மேலும் பெண் சிசு கொலை தொடர்பாக விழிப்புணர்வு பாடல் ஒன்றையும் அண்மையில் பாடியிருந்தாராம்.

Secret behind Amruta wife of Maharastra Chief Minister Devendra Fadnavis and Rajini meet

விஜயகாந்த் மகனுக்கு வில்லன் ஆனார் கமல் பட தயாரிப்பாளர்

விஜயகாந்த் மகனுக்கு வில்லன் ஆனார் கமல் பட தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

???????????????????????????????????????????கேப்டன் விஜயகாந்த்தை தொடர்ந்து அவரது மகன் சண்முகபாண்டியனும் படங்களில் நடித்து வருகிறார்.

அவர் தற்போது நடித்து வரும் படத்திற்கு மதுர வீரன் என பெயரிட்டுள்ளனர்.

பி.ஜி.முத்தையா இயக்கும் இதன் சூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதில் வில்லனாக பிரபல தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் நடித்து வருகிறார்.

கமல் நடித்த ’காதலா காதலா’, ’பம்மல் கே சம்மந்தம்’, ’பஞ்சதந்திரம்’ உள்ளிட்ட 14 படங்களை தயாரித்திருப்பவர் பி.எல்.தேனப்பன்.

மேலும் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் ’பேரன்பு’ படத்தை தயாரித்து வருகிறார் பி.எல். தேனப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

Producer PL Thenappan plays baddies in Shanmuga Pandiyans Madura Veeran

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் 8 பாடல்கள்; ரசிகர்கள் குஷி

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் 8 பாடல்கள்; ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya anirudhவிஜய், அஜித் உள்ளிட்டவர்களுடன் இணைந்து பணியாற்றிவிட்டாலும் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றாமல் இருந்தார் அனிருத்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு அனிருத் இசை என்றதும் இரு தரப்பும் ரசிகர்களும் உற்சாமடைந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களை மேலும் உற்சாகமாக்க இப்படத்திற்காக 8 பாடல்களை உருவாக்கி இருக்கிறாராம் அனிருத்.

இதில் பெரும்பாலும் மாண்டேஜ் பாடல்களாக இடம்பெறும் என கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

Suriya Starrer Thaana Serndha Kootam movie has 8 songs

விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்தில் ஆர்.கே.சுரேஷ்

விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்தில் ஆர்.கே.சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay antony rk suresh kaaliசைத்தான் மற்றும் எமன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தனது புதிய படத்தின் தலைப்பு காளி என அறித்தார் விஜய் ஆண்டனி.

இப்படத்தை உதயநிதியின் மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதி இயக்குகிறார்.

விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆர்.கே. சுரேஷ் இணைந்து இருக்கிறாராம்.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சம்பந்தப்பட்டவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

RK Suresh teams up with Vijay antony for Kaali movie

அஜித்-விவேக் ஓபராய் இணைந்த விவேகம் ஸ்டில் வைரலானது

அஜித்-விவேக் ஓபராய் இணைந்த விவேகம் ஸ்டில் வைரலானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam ajith stillsசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம்.

அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, வில்லனாக விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியின் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அஜித், விவேக் ஓபராய் மற்றும் சில ராணுவ வீரர்களும் நிற்கின்றனர்.

இதனை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Ajith and Vivek Oberoi stills from Vivegam goes viral

ajith vivel oberoi team

More Articles
Follows