மெர்சல் படத்தால் சர்வதேச விருது பட்டியலில் விஜய் பெயர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக இது உருவானது.

3 விஜய் நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர்.

இந்நிலையில், ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

தற்போது அந்த பிரிவுக்கான இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில் விஜய், கென்னத் ஓகோலி, டைம் ஹசன், ஜோஷுவா ஜேக்‌ஷன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இவர்கள் அனைவரும் இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.

விரைவில் விருது அறிவிக்கப்படவுள்ளது. எனவே காத்திருப்போம்.

பாரதிராஜா இயக்கும் ஜெயா படத்தில் எம்ஜிஆராக கமல் / மோகன்லால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக்குவதாக ஏற்கனவே 2 தயாரிப்பாளர்கள் அறிவித்து இருந்தனர். இப்போது இன்னொரு தயாரிப்பாளரும் களத்தில் இறங்கி உள்ளார். முதலில்

ஜெயல்லிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க போவதாக விஜய் அறிவித்தார்.

இந்த படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிப்பதாக கூறப்பட்டது.

இவர் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையையும் படமாக்கி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு உலக கிரிக்கெட் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 வேல்டு கப் என்ற படத்தையும் தயாரிக்கிறார்.

ஜெயலலிதா வாழ்க்கை கதை படப்பிடிப்பு அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இவரை அடுத்து ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப்போவதாக பெண் இயக்குனர் பிரியதர்ஷினியும் அறிவித்தார். இவர் டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

தற்போது வரலட்சுமியின் சக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவர்களை அடுத்து 3வதாக பிரபல டைரக்டர் பாரதிராஜா அவர்களும் ஜெயலலிதா வாழ்க்கையை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தை மும்பையை சேர்ந்த ஆதித்யா பரத்வாஜ் தயாரிக்கிறாராம்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜெயலலிதா வாழ்க்கையை பாரதிராஜா இயக்கத்தில் படமாக்க ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே திரைக்கதையை உருவாக்கி வருகிறோம்.

இதற்கு தற்காலிகமாக புரட்சித்தலைவி என்று தலைப்பு வைத்துள்ளோம். அந்த தலைப்போடு அம்மா என்ற பெயரையும் சேர்க்கும்படி சிலர் கூறியுள்ளனர்.

இளையராஜாவிடம் இசையமைக்க பேசி உள்ளோம். ஜெயலலிதா வேடத்துக்கு ஐஸ்வர்யாராய், அனுஷ்கா ஆகியோரில் ஒருவரை பரிசீலிக்கிறோம்.

எம்.ஜி.ஆர் வேடத்துக்கு கமல்ஹாசன், மோகன்லால் ஆகியோரிடம் பேசி வருகிறோம்” என்றார்.

இது ஒரு புறமிருக்க மற்ற ஜெயலலிதா வேடத்தில் நடிக்க பலத்து போட்டி உருவாகியுள்ளதாம்.

நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, வித்யாபாலன் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளது எனவும் தகவல்கள் கூறுகின்றன.

மீண்டும் இணையும் வாய்ப்பை ரஜினியால் பெற்ற சிம்ரன்-த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்திரன் படத்திற்கு பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை மிகவும் கட்டு கோப்பாக எந்த ஒரு தகவலும் கசியாமல் வட இந்தியாவில் படமாக்கி வருகிறார் டைரக்டர்.

இந்த படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

லேட்டஸ்ட்டாக த்ரிஷாவும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பதை அறிவித்து விட்டனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளாக சிம்ரன், த்ரிஷா முன்பே வலம் வந்தாலும் அவர்கள் தற்போதுதான் ரஜினி படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இதற்கு முன்பு அதாவது 18 வருடங்களுக்கு முன்பு ஜோடி என்ற படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், த்ரிஷா இணைந்து நடித்திருந்தனர்.

நாயகியாக ஆவதற்கு முன்பு இந்த படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார் த்ரிஷா.

தற்போது இவர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பை ரஜினி பெற்று தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காமிக்ஸ் புத்தகத்தில் சிவகார்த்திகேயன்; பெருமை தேடித்தரும் பொன்ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணியில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் பொன்ராம் கூட்டணியை தவிர்க்க முடியாது.

இவர்கள் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய இரண்டும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தற்போது 3வது படமாக சீமராஜா உருவாகியுள்ளது.

இந்த படம் வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது.

இந்நிலையில் மெகா ஹிட்டான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கதையை காமிக்ஸ் புத்தகமாக எழுதப்போகிறாராம் டைரக்டர் பொன்ராம்.

இது இன்றைய இளம் நடிகர்களில் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

Director ponram to write comics book based on sivakarthikeyan’s varuthapadatha valibar sangam movie .

Exclusive கேரள மக்களுக்கு ரூ 70 லட்சத்தை வாரி வழங்கிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வரலாறு காணாத மழை வெள்ளத்தை கேரளா மாநிலம் சில தினங்களுக்கு சந்தித்தது.

மழை வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் கேரளா மாநிலமே மூழ்கிய நிலையில் காணப்பட்டது.

இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனையறிந்த துபாய் நாடு முதல் உழைப்பாளர் வரை அனைவரும் தங்களால் இயன்ற நிவாரணத் தொகைகளை கேரள அரசுக்கு கொடுத்து உதவி வருகின்றனர்.

தமிழில் நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி வழங்கினர்.

இந்நிலையில் நடிகர் விஜய் கிட்டதட்ட ரூ.70 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கேரளாவில் உள்ள தன்னுடைய அனைத்து மாவட்ட மக்கள் இயக்க ரசிகர்களுக்கும் 3 லட்சம் அனுப்பியுள்ளார். (14 மாவட்டம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 லட்சம் )

முகாமில் தஞ்சமடைத்தவர்களுக்கும் மற்றும் பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வாங்குவதற்கு பணம் கொடுத்துள்ளார்.

மேலும் இந்த நிவாரண பொருட்கள் தமிழ்நாட்டில் 15 மாவட்டத்திலிருந்து 15 லாரிகள் மூலமாக பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்திற்கு வழங்கப்படுகிறது.

இன்று இரவு இந்த லாரிகள் அனைத்தும் கேரளாவில் உள்ள எர்ணாகுளம், ஆலப்புழா, பத்தானம்திட்டா, பாலக்காடு மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரிசி, பருப்பு, சர்க்கரை ,கோதுமைமாவு, ரவை, மைதா, ஆடைகள், போர்வைகள், பெட் சீட், பால் பௌடர், நாப்கின்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.

மலையாள நடிகர்களுக்கு இணையாக விஜய்க்கும் கேரளாவில் மலையாள ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Actor Vijay donates Rs 70 lakhs to Kerala flood relief

வெற்றி பெற்ற கபடி வீரர்களை கௌரவித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தப்பாட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து தனக்கான இடத்தை தேடிக் கொண்டிருப்பவர் துரை சுதாகர்.

இவர் பப்ளிக் ஸ்டார் என அன்பாக ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

தற்போது முன்னணி இயக்குனர்களின் படங்களில் முக்கியமான கேரக்டரிலும் நடித்து வருகிறார்.

சினிமா மட்டுமின்றி சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்ற வீரர்களை துரை சுதாகார் கெளரவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஆம்பலாப்பட்டு கிராமத்தில் டெல்டா சாம்பியன்ஸ் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான மாபெரும் கபடி தொடர் நடத்தப்பட்டது.

50 க்கும் மேற்பட்ட அணிகள் இந்த தொடரில் கலந்துக் கொண்டது.

இத்தொடரில் சேலத்தை சேர்ந்த சவன்மேன் ஆர்மி அணி முதல் பரிசை வென்றது. இரண்டாவது பரிசை ஸ்போர்ட்ஸ் கிளப் வடுவூர் அணியினர் வென்றனர்.

முதல் பரிசு வென்ற அணியினருக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

நேற்று முன்தினம் 19 ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில், திரைப்பட நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பையை தனது கையால் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கி, அவர்களை கெளதவித்த நடிகர் துரை சுதாகர், டெல்டா சாம்பியன்ஸ் கபடி கழகம் மற்றும் ஆம்பலாப்பட்டு கிராமவாசிகளுடன் இணைந்து விழாவினை சிறப்பித்தார்.

Public Star Durai Sudhakar honoured Kabadi Players

More Articles
Follows