‘பைரவா’ நிலைமை என்ன.? எங்கே இருக்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படம் பைரவா.

தற்போது இதன் படப்பிடிப்புக்காக ஆந்திரா மாநிலத்திலுள்ள ராஜமுந்திரியில் முகாமிட்டுள்ளனர்.

அங்கு தயாராகவுள்ள செட்டில் தொடர்ந்து 3 வாரங்களுக்கு படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்களாம்.

அங்குதான் க்ளைமாக்ஸ் காட்சி மற்றும் ஆவேசமான வசன காட்சிகள் படமாக்கப்படுகிறதாம்.

இதனைத் தொடர்ந்து இம்மாத இறுதிக்குள் ஒட்டு மொத்த சூட்டிங்கையும் முடித்துவிடுவார்கள் என கூறப்படுகிறது

‘நீங்கதான் உண்மையான நண்பன்; நலம் விரும்பி…’ – தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இதுநாள் வரை நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என அறியப்பட்ட தனுஷ், ஓரிரு தினங்களாக இயக்குனாராகவும் அறியப்பட்டு வருகிறார்.

ராஜ்கிரண், பிரசன்னா உள்ளிட்டோர் நடிக்கும் பவர் பாண்டி என்ற படத்தை இயக்குகிறார்.

இதற்காக பலரும் தனுஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாரி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் தனுஷை வாழ்த்தும்போது…

உங்கள் பெயரை எழுத்து இயக்கம் என்று பார்ப்பதில் சந்தோஷம் அடைகிறேன். கலக்குங்க சார். என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்து தனுஷ் கூறியுள்ளதாவது….

“நன்றி பாலாஜி. நீங்கள்தான் என் உண்மையான நண்பன். நலம் விரும்பி.” என குறிப்பிட்டுள்ளார்.

இருமுகன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, ரித்விகா, பாலா, கருணாகரன் மற்றும் பலர்.
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : ஆர்டி. ராஜசேகர்
படத்தொகுப்பு : புவன் ஸ்ரீநிவாசன்
இயக்கம் : ஆனந்த் சங்கர்
பிஆர்ஓ : யுவராஜ்
தயாரிப்பாளர் : ஷிபுதமீன்ஸ்

கதைக்களம்…

ஒரு 75 வயது முதியவர் தனி ஆளாக இந்தியன் எம்பஸியின் அலுவலக ஊழியர்களை தாக்குகிறார். இது அங்குள்ள கேமராவில் பதிவாகிறது.

அவரால் எப்படி சாத்தியமானது? அவர் பயன்படுத்திய ஹின்ஹேலரில்  இவ்வளவு பெரிய சக்தி உருவானது எப்படி? என அறிய விக்ரமின் உதவியை நாடுகின்றனர்.

விக்ரமை நாட என்ன காரணம்? அவரின் பிளாஷ்பேக் என்ன? அந்த ஹின்ஹேலரி பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

அகிலன் மற்றும் லவ் என்ற இரு கேரக்டர்களில் தன்னை மீண்டும் வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்.

உடல் அமைப்பில் மாற்றம் இல்லையென்றாலும் உடல் அசைவில் மாற்றம் செய்து ரசிக்க செய்திருக்கிறார்.

ஆக்ஷனில் அனல் பறக்க செய்கிறார். ஹின்ஹேலரை முகர்ந்த பின் வரும் சண்டைகளில் கூடுதல் பலம் தெரிகிறது.

லவ் கேரக்டரில் ஜொலிக்கிறார் விக்ரம். ஆனால் வளவளவென பேசிக்கொண்டே இருப்பது போரடிக்கிறது.

வெறும் கிளாமர் மட்டுமில்லை தன்னாலும் ஆக்ஷனிலும் கலக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் நயன்தாரா.

இவரின் கேரக்டர் ஜஸ்ட் ஒரு பாடலில் முடிந்துவிடுகிறதே என் சோர்வடையும் ரசிகர்களுக்கு இரண்டாம் பாதியில் வந்து சூடேற்றுகிறார்.

திறமையான நடிகை நித்யா மேனனை இதில் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அவர் இறக்கும்போது கண்கலங்க வைக்கிறார்.

கபாலி ரித்விகாவின் நிலைமை அந்தோ பரிதாபம்.

நாங்களும் இருக்கிறோம் என நாசர், கருணாகரன், தம்பிராமையா வந்து செல்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால் படம் விறுவிறுப்பாக செல்லும் நேரத்தில் ஒரு மெலோடி தேவையா?

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் மலேசியா சிறைச்சாலை முதல், ஹேலேனா பாடல்கள் வரை கண்களுக்கு விருந்து.

படத்தின் ப்ளஸ்…

  • விக்ரமின் இரு மாறுபட்ட நடிப்பு
  • வித்தியாசமான வில்லன் திரைக்கதை மற்றும் கேரக்டர்கள்
  • மெடிக்கல் துறை மற்றும் எக்ஸ்போர்ட் துறையில் நடக்கும் ஊழல்களை சுட்டி காட்டியிருக்கிறார்.

படத்தின் மைனஸ்….

  • லவ்வுல்ல சருக்கலாம். இந்த லவ்வையே சருக்க வச்சிட்ட போன்ற வசனங்கள் அடிக்கடி வருவது சலிப்பை தட்டுகிறது.
  • அகிலன் மற்றும் லவ் – இரு குரலிலும் வித்தியாசம் காட்டியிருக்கலாம்.
  • இன்று செல்போன் உபயோகிப்பவர்கள் பாஸ்வேர்ட்டு போட்டு லாக் செய்துதான் வைக்கின்றனர். ஆனால் விக்ரம் ஈசியாக மற்றவரின் போனை எடுத்து பேசுவது எப்படி எனத் தெரியவில்லை.
  • முதல்பாதி விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் கொடுத்திருந்தால் இந்த இருமுகனுக்கு ஹின்ஹேலரை விட எக்ஸ்ட்ரா பவர் கிடைத்திருக்கும்.

இயக்குனர் பற்றி…

அரிமா நம்பியில் கவனம் ஈர்த்த ஆனந்த் சங்கர் இதில் வித்தியாசமான கதையை கையாண்டு இருக்கிறார்.

ஸ்பீடு ஹின்ஹேலர் என்ற புதிய டெக்னிக்கை சொல்லி, அதற்கு ஹிட்லரின் வரலாறையும் சொல்லியிருப்பது கவனிக்க வைக்கிறது.

ஒரு ஸ்டைலிஷ்ஷான கதையை சில லாஜிக் மீறல்களோடு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் இருமுகன்… ஸ்பீடு மகன்

 

தனுஷின் ‘பவர் பாண்டி’ படத்தில் நதியாவுக்கு என்ன கேரக்டர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க தனுஷ் தயாரித்து இயக்கும் படம் பவர் பாண்டி.

இவருடன் பிரசன்னா, சாயா சிங் நடிக்க, சீன் ரோல்டான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ராஜ்கிரணின் மனைவியாக நதியா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக ஒரே மாதத்தில் முடிக்க திட்டமிள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

பர்ஸ்ட் லுக்குக்கே பர்ஸ்ட் கிளாஸாக உழைத்த ‘பீரங்கிபுரம்’ குழுவினருக்கு ஸ்ரீகாந்த் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை முதல் ராஜஸ்தான் வரை நெடுஞ்சாலை வழியாகப் போகும் கதையாக உருவாகும் படம் ‘பீரங்கிபுரம்’.

தமிழ்,தெலுங்கு,கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகிறது.கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் நாயகனாக நடிக்கிறார்.. இவர் ‘நானு அவனுள்ள அவளு ‘கன்னடப் படத்துக்காக 2015 க்கான தேசிய விருது பெற்றவர்.

இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ எனப்படும் முதல்பார்வை வெளியீட்டு விழா சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

‘பர்ஸ்ட் லுக்’கை நடிகர் ஸ்ரீகாந்தும் நடிகை நமீதாவும் வெளியிட்டனர்.

இவ்விழாவில் படத்தை இயக்கும் ஜான் ஜானி ஜனார்த்தனா பேசும் போது

” எனக்குச் சொந்த ஊர் திருத்தணிதான். நான் பல்வேறு பெரிய இயக்குநர்களின் படங்களைப் பார்த்து சினிமா கற்றுக் கொண்டேன்.

சினிமா பற்றி பல்வேறு விதத்தில் ஆய்வுகள் செய்தேன். அப்படி உருவானதே இந்தக்கதை.மூத்த தலைமுறைக்கும் இளையதலைமுறைக்கும் இடையே நடக்கும் உளவியல் ரீதியான போர்தான் இக்கதை.

கதை சென்னை முதல் ராஜஸ்தான் வரை போகிறது. ‘பீரங்கிபுரம்’ ராஜஸ்தானில் என் கற்பனையில் உருவாகியுள்ள கிராமம்.

முழுக்கமுழுக்க ராஜஸ்தானில் படமாகவுள்ள தமிழ்ப்படம் இதுவாகவே இருக்கும். படத்தில் ஒப்பனைக்கு முக்கியத்துவம் உண்டு. நடிப்பவர்கள் பலரும் நாடக நடிகர்கள்.பிற நடிகர்கள் அனைவருக்கும்.

முறையாகப் பயிற்சியளிக்கப்பட்டு நடிக்க வைக்கிறோம். உமா மகேஷ்வர் மேக்கப்பில் பேசப்படுவார். நாயகனின் தோற்றத்துக்கு ஐந்து மணி நேரம் மேக்கப் போட்டுள்ளார். .-.

சோதனை முயற்சியாக இப்படத்தை எடுக்க விரும்பினேன்.இது ஒரு முன்னுதாரண படமாக இருக்கும் வகையில் உழைத்து வருகிறோம். ”என்றார்.

நாயகனாக நடிக்கும் சஞ்சாரி விஜய் பேசும்போது,

” தமிழில் இது எனக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. நான் தேசிய விருது பெற்றதில் மகிழ்ச்சி. அதே நேரம் இப்போது தமிழ்நாட்டு இயக்குநர் பாரதிராஜா அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

ஏனென்றால் தேசிய விருது தேர்வுக்குழுவின் தலைவராக அவர் இருந்த போதுதான் எனக்குத் தேசிய விருது கிடைத்தது. நான் அந்தப் படத்தில் மாற்றுப் பாலின பாத்திரத்தில் ஒரு திருநங்கையாக நடித்திருந்தேன்.

அதே போலவே இதுவும் பொன்னான வாய்ப்பு .நான் கமல், விக்ரம் போன்ற நட்சத்திரங்கள் நடித்த தமிழ்ப்படங்களிள் பெரிய ரசிகன். சிறுவயது முதல் அவர்கள் நடிப்பை ரசித்து வளர்ந்தவன்.

தேசிய விருது பெற்ற ‘நானு அவனுள்ள அவளு ‘ படம் போலவே இந்த’பீரங்கிபுரம்’ படமும் வித்தியாச முயற்சிதான் இதில் இளைஞன் தோற்றம், நடுத்தர வயது தோற்றம், முதிய தோற்றம். என மூன்று வகை தோற்றங்களில் வருகிறேன்.

இது ஒரு சைகாலஜிக்கல் த்ரில்லர் படம். இந்தப் படம் எனக்கு நல்ல அறிமுகமாக அமையும் .வேறு படவாய்ப்புகளையும் தேடித்தரும்.

இங்கே இந்த விழாவுக்கு ஸ்ரீகாந்த், நமீதா வந்திருக்கிறார்கள். இவ்விழா எனக்கு முக்கிய தருணம். ” என்றார்.

நடிகர் ஸ்ரீகாந்த் பேசும் போது,

” கன்னட மொழியிலிருந்து தேசியவிருது பெற்ற நடிகர்இங்கே தமிழில் நடிக்கிறார். அவரை வரவேற்கிறோம்.

அவர் மொழி தெரியாது பேசினார். சினிமாவுக்கு ஜாதி, மதம், மொழி வேறுபாடு எல்லாம் கிடையாது.
இது கர்நாடகத்துக்கும் பொருந்ந்தும் தமிழ்நாட்டுக்கும்.பொருந்தும்.

அவரை வாழ்த்துகிறேன். இந்தப் படம் பர்ஸ்ட் லுக்கிற்கே இவ்வளவு உழைத்திருக்கிறார்கள்.

சினிமாவில் படப்பிடிப்புக்குப் போய் யோசிப்பவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒரு படம் தொடங்கும் முன்பாகவே ஆறுமாதம் ஒரு வருடம் என்று முன் தயாரிப்பு வேலைகள் செய்திருக்கிறார்கள்.

நன்றாக ஆயத்தம் செய்கிறார்கள். இப்படி எல்லாரும் செய்தால் காலவிரயம் பண விரயம் ஆகாது. இவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.” என்றார்.

நடிகை நமீதா பேசும் போது ,

“அண்மையில் ‘டோண்ட் ப்ரீத் ‘ என்கிற படம் பார்த்தேன்.ஒன்றே முக்கால் மணி நேரத்தில் 1 மணி 10 நிமிடங்கள் வசனமே இல்லை. அப்படி ஒரு பரபரப்பு இருந்தது. எனவே படம் பிடித்து விட்டது.

சினிமாவுக்கு மொழி முக்கியமல்ல. எனக்கு காமெடி ,ஆக்ஷன், சைக்காலஜிக்கல் த்ரில்லர் படங்கள் தனிப்பட்ட முறையில் பிடிக்கும் .’பீரங்கிபுரம்’ படமும் இந்த வகையில் அடங்கும்.

ஜான் ஜானி ஜனார்த்தனா என்கிற இயக்குநர் பெயரைப் பார்த்தும் அந்தக்கால அமிதாப் படம் “ஜான் ஜானி ஜனார்த்தன்’ நினைவுக்கு வந்தது.இவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ”என்றார் .

விழாவில் மேக்கப் மேன் உமா மகேஷ்வர், இசையமைப்பாளர் ஸ்யாம். எல். ராஜ் ,நடிகர்கள் சுகுமார். ராணா, ஜெய்கார், நடிகை கானவி,ஒளிப்பதிவாளர் அத்வைதா குரு மூர்த்தி.ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

டாஸ்மாக் இல்லாத ஜிவி. பிரகாஷின் ‘கிக்’ படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ கடவுள் இருக்கான் குமாரு.

இதில் ஜி.வி. பிரகாஷ் உடன் நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்.

அம்மா கிரியேஷசன்ஸ் சார்பாக டி.சிவா இப்படத்தை தயாரித்துள்ளார்.

இது ஒரு ரோடு பிலிம் என்பதனால் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை சென்னை ஈ.சி.ஆர் ரோடு பாண்டிச்சேரி , கோவா போன்ற டிராபிக் இல்லாத பகுதிகளில் படமாக்கி இருக்கிறார்களாம்.

பெரும்பாலும் ராஜேஷின் படங்களில் டாஸ்மாக் காட்சிகள் அதிகமாக இடம் பெறும். ஆனால் இப்படத்தில் அதுபோன்ற காட்சிகள் எதுவும் இல்லையாம்.

More Articles
Follows