சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் மில்டன்.; சூர்யா வாழ்த்து

சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் மில்டன்.; சூர்யா வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Milton joins Kannada Superstar Sivarajkumarசமூகத்தில் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களை மையமாக்கி எடுத்து வெற்றி பெற்ற படம் ‘கோலி சோடா’.

ஒரு சாதாரண மனிதன் எடுக்கும் விஸ்வரூபத்தை கதையாகக் கொண்ட படம் ‘கடுகு’.

இப்படங்களை விஜய் மில்டன் இயக்கி இருந்தார். விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் இப்படங்கள் பேசப்பட்டன.

அக்கதைகளின் ஆழத்தை அறிந்த பலரும் பாராட்டினார்கள்.

தமிழில் தனக்கான ஓர் அடையாளத்தைப் பெற்றுள்ள விஜய்மில்டன் இப்போது கன்னடத் திரை உலகத்திற்குள் நுழைகிறார்.

இவர் இயக்கும் இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் சிவராஜ்குமார் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “டகரு” ( Tagaru ) . இதில் வில்லனாக நடித்து மக்களிடம் பரபரப்பாக பேசபட்டவர் டாலி தனஞ்ஜெயா. இந்த இருவரும் மீண்டும் சேர்ந்து எப்பொழுது நடிப்பார்கள் என்ற எதிபார்ப்பு மக்களிடம் அதிகமாக இருந்தது.

அதனால், இருவரையும் சேர்த்து நடிக்க வைக்க பல பேர் முயர்ச்சித்தார்கள். டைரக்டர் விஜய்மில்டன் சொன்ன கதை பிடித்து போக மீண்டும் சிவராஜ்குமார் – டாலி தனஞ்ஜெயா ( dolly dhananjeya ) இப்படம் மூலம் ஒன்றாக இணைகிறார்கள். இதை கேள்விபட்ட கன்னட திரை உலகில் இப்போதே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இப்படத்தைத் தமிழில் ‘கோலிசோடா’ , கடுகு’ போன்ற படங்களைத் டைரக்ட் செய்த விஜய்மில்டனின் – ரஃப் நோட் (rough note ) தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த நிறுவனம் முதன் முறையாக கன்னடத்தில் , கிருஷ்ண சர்தக்கின் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது.

கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி. விஜய்மில்டன். இசை ஜெ.அனூப் சீலின்.

இதன் அறிவிப்பை, சிவராஜ்குமார் பிறந்த நாளான இன்று ஜூலை 12 நடிகர் சூர்யா வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

Vijay Milton joins Kannada Superstar Sivarajkumar

மனைவியின் முன்னாள் காதலன்.; பெப்சி சிவா வெளியிட்ட ‘கள்ளக்காதல்’

மனைவியின் முன்னாள் காதலன்.; பெப்சி சிவா வெளியிட்ட ‘கள்ளக்காதல்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

FEFSI launches Article 497 Kalla Kaadhal Short film“கள்ளக்காதலால் மனைவி வெட்டிக்கொலை” என்ற செய்திகள் எல்லாம் தற்போது மிகச்சாதரணமாக நம்மைக் கடந்து செல்கிறது.

ஆனால் அதற்குப் பின்னால் எவ்வளவு மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அப்படியான மனநிலைக்கு இச்சமூகத்தின் கலாச்சார மீறல் நம்மை தள்ளிவிட்டது.

அது ஆபத்தானது என்பதை அறிவுறுத்த வந்திருக்கும் ஒரு நேர்த்தியான குறும்படம் தான் “ஆர்டிகள் 497 கள்ளக்காதல்”

நெக்ஸ்ட் லெவல் புரொடக்சன் தயாரித்துள்ள இப்படத்தை சிலம்புச் செல்வன் எழுதி இயக்கி இருக்கிறார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் மிகச்சிறப்பாக உருவாகியுள்ள தமிழரசன் படத்தைத் தயாரித்துள்ள பெப்சி சிவா தனது tamizh media yutube சேனலில் இக்குறும்படத்தை வெளியிட்டுள்ளார்.

இளைய தலைமுறையில் சமுதாய சிந்தனையுள்ள படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக தயாரிப்பாளர் பெப்சி சிவா இப்படியான குறும்படங்களை வெளியிடுகிறார்.

இது நிச்சயமாக வளரும் இளம் படைப்பாளிகளுக்கு பெரும் உந்துதலாக இருக்கும்

ஒரு போலீஸ் விசாரணையோடு துவங்கும் படம் பல்வேறு திருப்பங்களோடு பயணிக்கிறது.

கள்ளக்காதலில் ஆண்/பெண் இருபாலருமே தவறுகள் செய்வதை சுட்டிக்காட்டும் இக்குறும்படம் பெண்களுக்கான பாதிப்பு அதிகம் என்பது போலவே ஆண்களுக்கான பாதிப்பும் அதிகம் என்பதைப் பேசுகிறது. பெண்களுக்கு அதிக சலுகைகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் பெண்களுக்கு பொறுப்பும் மிக அவசியம் என்பதை படம் பேசியுள்ளது.

படத்தில் வயதான பின் திருமணம் ஆகி மனைவியின் பழைய காதலனால் ஏற்படும் இயலாமையைச் சுமக்கும் பாத்திரத்தில் நாயகன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.

போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பவர் படத்தின் இறுதியில் தனக்குள் இருக்கும் மனிதத்தன்மையை வெளிப்படுத்தும் போது கவர்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவு பின்னணி இசை எல்லாம் குறும்படம் என்பதைத் தாண்டி ஒரு பெரும்படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது.

வசனங்களிலும் காட்சியமைப்பிலும் நன்றாக கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் சிலம்புச் செல்வன். நேற்று யூட்யூபில் வெளியான இக்குறும்படம் 20 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்து பாசிட்டிவான பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

சரியான நேரத்தில் வெளியாகியுள்ள தரமான படம் இது.

மேலும் இந்த “ஆர்ட்டிகள் 497 கள்ளக்காதல்” என்ற குறும்படம் பேசும் அறம் சார்ந்த விசயம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்திற்கு நிகராக இப்படத்திற்கான விளம்பரங்களைச் செய்துள்ளார் பெப்சி சிவா.

பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையான போஸ்டர் டிசைனிங், பெரிய பத்திரிகைகளில் விளம்பரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட நிறைய மாவட்டங்களில் படத்தின் போஸ்டர்கள் என இக்குறும்படத்தைப் பெரிதாக ரீச் செய்துள்ளார் பெப்சி சிவா

FEFSI launches Article 497 Kalla Kaadhal Short film

அமிதாப் & அபிஷேக்பச்சனுக்கு கொரோனா; அப்போ ஐஸ்வர்யா ராய் ரிசல்ட்?

அமிதாப் & அபிஷேக்பச்சனுக்கு கொரோனா; அப்போ ஐஸ்வர்யா ராய் ரிசல்ட்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amitabh Abhishek found Covid 19 positive Aishwarya result negativeபாலிவுட்டின் BIG B என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அமிதாப்பச்சன்.

இவர் சற்றுமுன் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியளவில் கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் மும்பையும் முக்கியமானது.

அங்கு இதுவரை 91,745 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,244 பேர் வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமிதாப் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை அவரே ட்விட்டரில் தெரிவித்து அதற்கான காரணத்தையும் பதிவிட்டுள்ளார்.

அதாவது… தனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதன் ரிசல்ட் பாசிட்டிவ் என வந்திருப்பதாக அவரே பதிவிட்டுள்ளார்.

அவரது ட்வீட்டில், “எனக்கு கொரோனா பாசிட்டிவ் எனத் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். கடந்த 10 நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.

இவரை தொடர்ந்து சில மணி நேரங்களில் அமிதாப்பின் மகனும் ஐஸ்வர்யா ராயின் கணவருமான நடிகர் அபிசேக்பச்சனும் தனக்கு கொரோனா தொற்று ரிசல்ட் பாசிட்டிவ் என வந்துள்ளதாக அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனால் இவர்களது குடும்பம் தனிமைப்படுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.

இதனிடையில் அபிசேக்பச்சனின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவருக்கு ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. அதாவது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

அதே போல் ஐஸ்வர்யா ராயின் மகளுக்கும் கொரோனா தொற்று இல்லை. அதுபோல் அமிதாப்பின் மனைவி ஜெயாபச்சனுக்கும் ரிசல்ட் நெகட்டிவ் என உறுதியாகியுள்ளது.

Amitabh Abhishek found Covid 19 positive Aishwarya Jaya result negative

நடிகர் பொன்னம்பலம் உடல் நலக்குறைவு.; கமல் & ரஜினி மொத்த செலவை ஏற்றனர்

நடிகர் பொன்னம்பலம் உடல் நலக்குறைவு.; கமல் & ரஜினி மொத்த செலவை ஏற்றனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ponnambalamதமிழ் சினிமாவில் ஸ்டன்ட் கலைஞராக அறிமுகமான பொன்னம்பலம் பின்னர் வில்லன் நடிகராக மாறினார்.

ரஜினி, கமல், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார்.

அபூர்வ சகோதரர்கள், வால்டர் வெற்றிவேல், நாட்டாமை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது காமெடி வில்லனாக சித்தரிக்கப்பட்டு வருகிறார்.

இவர் கமல் நடத்திய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.

இந்நிலையில் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் சிகிச்சைக்கு நடிகர் கமல்ஹாசன் உதவி வருகிறார்.

மேலும் பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்றிருக்கிறார் கமல்.

இவரை தொடர்ந்து ரஜினியும் உதவ முன் வந்துள்ளார்.

பொன்னம்பலத்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

இதற்கான மொத்த செலவையும் நடிகர் ரஜினிகாந்த் ஏற்றுள்ளார்.

வருமுன் தடுத்திடு.; வந்த பின் கட்டுப்படுத்துவது ஆபத்து..; கமல் ஆதங்கம்

வருமுன் தடுத்திடு.; வந்த பின் கட்டுப்படுத்துவது ஆபத்து..; கமல் ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதி வேகமாக அதிகரித்தவருகிறது.

தமிழகத்தில் சென்னையில் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் எண்ணிக்கை அதிகளவில் அதிகரித்து வருகிறது.

தற்போது சென்னையைக் கடந்து தமிழகத்தில் மதுரை, திருப்பூர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், இதுகுறித்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில்…

‘போதுமான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள், நவீன மருத்துவ வசதிகளுக்கு நகரங்களை நோக்கி பயணப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கிராமங்களில் இத்தொற்றின் பரவல் கவலையளிக்கிறது.

வருமுன் தடுத்திட அரசு செயல்பட வேண்டும். வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது’ என பதிவிட்டுள்ளார்.

ஆன்லைன் க்ளாஸ்.: மொபைல் வேண்டாம்.. டிவி-யே போதும்… அமைச்சர் அறிவிப்பு

ஆன்லைன் க்ளாஸ்.: மொபைல் வேண்டாம்.. டிவி-யே போதும்… அமைச்சர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sengottaiyanதமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில்..

மார்ச் 24 ஆம் தேதியன்று நடைபெற்ற 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வை ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பல மாணவர்கள் இறுதிநாள் தேர்வை தவறிவிட்டதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மாணவர்கள் தவறவிட்ட தேர்வுகள் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலோ அல்லது www.dge.tn.gov.in என்கிற இணையதளப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்கப்படவுள்ளது.

அதேபோல நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்..

மார்ச் மாதம் எழுதாமல் விடுபட்ட 12-ஆம் வகுப்பு தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும். எழுதவில்லையென்றால் தேர்ச்சி இல்லை.

அதுபோல் ஆன்லைன் வகுப்புகள் குறித்தும் பேசினார். அதில்…

அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே நடத்தப்படும்.

பள்ளி பாடங்களை நடத்துவதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

More Articles
Follows