கூட்டணி குழப்பங்கள்: விஜய்-ரஞ்சித்… சூர்யா-முத்தையா

கூட்டணி குழப்பங்கள்: விஜய்-ரஞ்சித்… சூர்யா-முத்தையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay suriya ranjith muthaiya stillsஹரி இயக்கத்தில் சிங்கம் 3 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இதனையடுத்து கபாலி இயக்குனர் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் இதனிடையில் முத்தையா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் சூர்யாவின் தந்தையாக ராஜ்கிரண் நடிக்கிறார்.

சூர்யா கூட்டணி மாறிபோனதால் விஜய் நடிக்கவுள்ள படத்தை பா. ரஞ்சித் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

திடீரென கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

சிம்புவுடன் நடிக்க மறுத்த ஹன்சிகா-கீர்த்தி சுரேஷ்

சிம்புவுடன் நடிக்க மறுத்த ஹன்சிகா-கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hanshika keerthy suresh stillsஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ (AAA) படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதற்காக தன் உடலை எடையை ஏற்றி வித்தியாசமான முறையில் காட்சியளித்து வருகிறார்.

இந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் சிம்பு மூன்று வேடம் ஏற்பதால் 3 நாயகிகளை தேடி வருகின்றனர்.

ஒரு ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகிறார்.

மற்ற கேரக்டர்களுக்கு ஹன்சிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்பட்டது.

ஆனால் இப்படத்தில் நடிக்க இருவரும் மறுத்துவிட்டார்களாம்.

எனவே மீண்டும் தேடுதல் வேட்டை தொடரும் என தெரிகிறது.

ஏகே 57 படத்தில் அஜித்துடன் மூன்று நாயகிகள்

ஏகே 57 படத்தில் அஜித்துடன் மூன்று நாயகிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith stillsஅஜித் நடிப்பில் சிவா இயக்கும் ஏகே 57 படப்பிடிப்பு விரைவில் பல்கேரியா நாட்டில் தொடங்கவுள்ளது.

அனிருத் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

ஜீவாவுடன் கவலை வேண்டாம் படப்பிடிப்பை முடித்துவிட்ட காஜல் அஜித்துடன் நடிக்க வெளிநாடு செல்கிறார்.

இவர் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார்.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் அக்ஷராஹாசன், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் மூன்றாவதாக மற்றொரு நாயகியும் இப்படத்தில் நடிக்கிறாராம்.

நாயகி தேர்வானவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

‘கத்தி’ மீது வழக்கு தொடுத்தவர் அடுத்து ‘குத்துச் சண்டை’ போடுகிறார்

‘கத்தி’ மீது வழக்கு தொடுத்தவர் அடுத்து ‘குத்துச் சண்டை’ போடுகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaththiமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் கதை என்னுடையது என மீஞ்சூர் கோபி வழக்கு தொடுத்தார்.

இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் தன் அடுத்த படங்களின் மீது கவனம் செலுத்தி வருகிறார் இவர்.

கலெக்டராக நயன்தாரா நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார் இவர்.

இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே, தனது அடுத்த படத்திற்கான கதையை ரெடி செய்து களத்தில் இறங்கியிருக்கிறார்.

இதில் வடசென்னை பகுதியில் பாக்ஸிங் பாப்புலர் ஆனது எப்படி? என்பதை கதைக்களமாக கொண்டு உள்ளார்.

இதில் ஹீரோ வேடத்தில் நடிக்க வைக்க, தலித் இளைஞர் ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறாராம்.

இப்படத்திற்கு ‘குத்துச்சண்டை’ அல்லது ‘குத்துச்சண்டை பரம்பரை’ என பெயர் வைக்க முடிவு செய்திருக்கிறார் மீஞ்சூர் கோபி.

ஆகஸ்ட்டில் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சாய்பல்லவி ஜோடி

ஆகஸ்ட்டில் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சாய்பல்லவி ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash and sai pallavi movieராஜேஷ் இயக்கத்தில் “கடவுள் இருக்கான் குமாரு” மற்றும் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் “புரூஸ்லி” ஆகிய படங்களில் நடித்துவருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

தற்போது இந்த இரண்டு படங்களும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

எனவே ஆகஸ்ட் முதல் ராஜூவ் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதில் நாயகியாக ப்ரேமம் புகழ் மலர் டீச்சர் சாய் பல்லவி நடிக்கிறார்.

இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ஒன்பது பாடல்கள் இடம் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்-சூர்யாவுக்கு கதை ரெடி செய்யும் இருமுகன் இயக்குனர்

விஜய்-சூர்யாவுக்கு கதை ரெடி செய்யும் இருமுகன் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and suriya stillsபிரபல இயக்குனர் ஏஆர். முருகதாஸின் உதவி இயக்குனராக இருந்தவர் ஆனந்த் ஷங்கர்.

விஜய் நடித்த துப்பாக்கி, சூர்யா நடித்த ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களின் போது முருகதாசுடன் பணிபுரிந்துள்ளார்.

தற்போது விக்ரம் நடிக்கும் இருமுகன் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விஜய், சூர்யா படங்களை இயக்குவது எப்போது என்ற கேள்விக்கு அண்மையில் அவர் பதிலளித்துள்ளார்.

விஜய், சூர்யா படங்களை இயக்க காத்திருக்கிறேன்.

கதை ரெடியானதும் அவர்களை சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows