தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு பக்கம் பிசியான நடிகராக இருந்தாலும் தன்னுடைய அரசியல் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் விஜய்.
விரைவில் தமிழக முழுவதும் உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 1500 மாணவர்களை விஜய் சந்திக்க உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் தரப்பில் இருந்து ஓர் அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில் வருகிற மே 28ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு்தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் வரும் 28 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் காலை 11 மணியில் இருந்து இலவச மதிய உணவு வழங்கப்பட உள்ளது.
மே-28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இலவச மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vijay Makkal Iyakkam provide food to poor people