ரசிகர்களை ஒன்றிணைக்க விஜய்யின் புதிய இணையத்தளம்

ரசிகர்களை ஒன்றிணைக்க விஜய்யின் புதிய இணையத்தளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay launched new website to unite his fansதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவர் விஜய்.

இவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உலகளாவிய ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் நடிகர் விஜய் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார்.

ஏற்கனவே தனது இயக்கத்திற்கு என தனி கொடியை அறிமுகம் செய்து அரசியல் ஆசையை வெளிப்படுத்தியவர் விஜய்.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு http://www.vijaymakkaliyyakam.in என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இது கடந்தாண்டு 2017ல் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு..

தளபதி மக்கள் இயக்கம் சார்பில் ஏரளமான நலத்திட்ட பணிகளை மாவட்ட வாரியாக தளபதி ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிகேற்ப தளபதி மக்கள் இயக்கமும் தொழில்நுட்ப ரீதியில் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது.

உலகளாவவிய ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு ஆண்ட்ராய்டு மொபைல் அப்ளிகேஷன் (VMI App.) அடுத்து இரண்டாவது படியாக தளபதி மக்கள் இயக்கத்திற்க்கான இணையதள சேவை தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் வேண்டுக்கோளுக்கு இணங்க ஒவ்வொரு மாவட்டத்தில் மற்றும் உலகமெங்கும் உள்ள அனைத்து உறுப்பினர்கள் தன்னை இணையத்தளம் மூலமாக இணைத்துக் கொள்ள புதியதாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களிடம் இந்த இணையத்தின் உள்நுழைவு படுத்துவதற்கான அதிகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தன்னை பதிவு செய்து கொண்டு தனக்குரிய அடையாளஅட்டையை அந்தந்த மாவட்ட தலைவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெளிவுப்படுதிகொள்கிறோம்.

இவற்றை அணைத்தும் கீழே கொடுக்கபட்டுள்ள இணையதள சேவையில் பெற்றுக்கொள்ளலாம்:

இணையதள முகவரி: http://www.vijaymakkaliyyakam.in

தொடர்புக்கு:9500334424

கஷ்டமா இருக்கு; இப்படி பண்ணாதீங்க.. பீஃல் செய்யும் சிம்பு

கஷ்டமா இருக்கு; இப்படி பண்ணாதீங்க.. பீஃல் செய்யும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்புக்கு உள்ள ரசிகர் பட்டாளம் நாம் அறிந்த ஒன்றுதான்.

சிம்புக்காக இவர்கள் எதையும் செய்ய தயாராகவே உள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் ஒரு ரசிகர் சிம்புவை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பு குறித்த வீடியோ மற்றும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த ரசிகர் தனது கையில் ‘எஸ்டிஆர்’ STR என டாடூஸ் வரைந்திருக்கிறார்.

அதை சிம்புவிடம் அவர் காட்ட, “இதெல்லாம் மனசுல இருந்தாலே போதும். இப்படியெல்லாம் பண்ணாதீங்க கஷ்டமா இருக்கு.” என்று தனது வேதனையை பகிர்ந்து கொள்கிறார்.

மேலும் அன்பின் மிகுதியில் சிம்புவை கட்டியணைத்து முத்தமிடுகிறார் ரசிகர்.

இந்த காட்சிகள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

விமல்-ஓவியாவின் களவாணி-2 படத்தலைப்பை மாற்றினார் சற்குணம்

விமல்-ஓவியாவின் களவாணி-2 படத்தலைப்பை மாற்றினார் சற்குணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DVBSTfyU0AIGE7aகடந்த 2010ஆம் ஆண்டு விமல், ஓவியா நடிப்பில் வெளியான படம் களவாணி.
சற்குணம் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த கூட்டணி 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையவுள்ளது.

இப்படத்தை சற்குணமே இயக்கி தயாரிக்கவுள்ளார். அதுபற்றிய அறிவிப்பை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இப்படத்தில் விமல் மற்றும் ஓவியாவுடன் முதல் பாகத்தில் நடித்த முக்கியமான கலைஞர்கள் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் தலைப்பை கே2 (K2) என வைத்துள்ளனர்.

மீண்டும் நெகட்டிவ் டைட்டில்; திமிரு புடிச்ச(வன்) விஜய்ஆண்டனி

மீண்டும் நெகட்டிவ் டைட்டில்; திமிரு புடிச்ச(வன்) விஜய்ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thimiru pudichavan stillsசினிமாவில் படத்தின் தலைப்பு முதல் அனைத்திற்கும் சென்டிமெண்ட் பார்ப்பது அதிகம்.

ஆனால் அந்த விதிமுறைகளை தகர்த்தெறிந்தவர் விஜய் ஆண்டனி.

தான் நடித்த படங்களுக்கு பிச்சைக்காரன், சைத்தான், எமன் உள்ளிட்ட நெகட்டிவ்வான தலைப்புகளையே வைத்தார்.

ஆனால் இந்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் அண்ணாதுரை என்ற பாசிட்டிவ்வான படத்தலைப்பு கொண்ட ஒரு படத்தில் நடித்தார்.

இது போதிய வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் மீண்டும் நெகட்டிவ் தலைப்புகளையே செலக்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

தன் அடுத்த படத்திற்கு ‘திமிரு புடிச்சவன்’ என பெயர் வைத்திருக்கிறார்.

கணேஷா இயக்கவுள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்ரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.

பிப்ரவரி 7 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இதனிடையில் விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள காளி படம் வருகிற மார்ச் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விஜய்ஆண்டனியுடன் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

திக்குதிக்கு… பக்குபக்கு…; சிம்பு படத்துடன் ட்ரெண்டாகும் தொட்ரா

திக்குதிக்கு… பக்குபக்கு…; சிம்பு படத்துடன் ட்ரெண்டாகும் தொட்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thodraa movie big surprise on Simbu Birthdayநாளை பிப்ரவரி 3ஆம் தேதி சிம்பு தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில் பாண்டியராஜின் மகன் பிருத்வி நடிக்கும் தொட்ரா பட போஸ்டரில் சிம்புவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

அதில் பிப்ரவரி 3 ஆம் தேதி அதற்கான விடை கிடைக்கும் என்ற அறிவிப்போடு அந்த புதிய போஸ்டர் வைரலாகி வருகிறது.

அதற்கு ‘தொட்ரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக திக்குதிக்கு’, ‘பக்குபக்கு’ ஹேஷ்டேக்குகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை ஏற்கெனவே விஜய்சேதுபதி வெளியிட்டு வாழ்த்தியும் இருந்தார்.

ஆகவே தொட்ரா படம் சம்பந்தமான அறிவிப்பு நாளை வெளியாகலாம் என உறுதியாக நம்பலாம்.

Thodraa movie big surprise on Simbu Birthday

3வது முறையாக ரஜினி மக்கள் மன்றம் சின்னத்தில் மாற்றம்

3வது முறையாக ரஜினி மக்கள் மன்றம் சின்னத்தில் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Makkal Mandram logo changed 3rd timeதமிழக மக்களின் 20 வருட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்து விட்டார் ரஜினிகாந்த்.

அதுமுதல் தன் கட்சி தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். அப்போது பாபா முத்திரையுடன் இருந்த தாமரைப் பூவை அகற்றினார்.

பாஜக.வுக்கும் ரஜினிக்கும் தொடர்பு இருப்பதாக பலரும் விமர்சிக்க அந்த தாமரைப் பூ அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பாபா முத்திரையை சுற்றி உள்ள பாம்பு ராமாகிருஷ்ணா மடத்தின் லோகோவில் இருக்கும் பாம்பு போல் உள்ளது என்று தென்மாவட்ட நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிராக உள்ளது என பலரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

அதனால் அந்த பாம்பு படமும் நீக்கப்பட்டு தற்போது ரஜினி மக்கள் மன்றம் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பாபா முத்திரை மட்டுமே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rajini Makkal Mandram logo changed 3rd time

More Articles
Follows